வெந்தயத்தால் செய்யப்படும் ஷாம்பூ, அதன் பலன்கள்..!

  • by
benefits of using fenugreek shampoo

ஆண்கள் மற்றும் பெண்கள் என்னதான் பலவிதமான ஷாம்புகளை பயன்படுத்தினாலும் அவர்களின் முடி உதிர்தல், பொடுகு பிரச்சினை மற்றும் நரை முடி வளர்தல் போன்ற பிரச்சனைகள் உண்டாகி கொண்டே இருக்கும். இதற்காக நாம் பலவிதமான ஷாம்புகளை மாற்றிக் கொண்டே இருப்போம். ஆனால் இது அனைத்தையும் தவிர்த்து இயற்கை முறையில் செய்யப்படும் ஷாம்புகளை பயன்படுத்துங்கள், அது நிச்சயம் உங்களுக்கு நல்ல பலனைத் தரும்.

வெந்தயம்

நாம் வெந்தயத்தினால் செய்யப்படும் ஷாம்பூ உங்கள் கூந்தல் ஆரோக்கியத்தை அதிகரிக்கும். பொடுகு பிரச்சினைகள், முடி உதிர்வது மற்றும் நரை முடி வளர்தல் போன்ற அனைத்துப் பிரச்சினைகளையும் அகற்றி, உங்கள் கூந்தலை மென்மையாகவும், நீளமாகவும், கருமையாகவும் வைத்துக் கொள்ளும். வெந்தயத்தில் வைட்டமின் சி, வைட்டமின் ஏ, கால்சியம், மெக்னீஷியம் போன்ற சத்துக்களும் உள்ளன. இதனால் தலை மற்றும் கூந்தலில் ஆரோக்கியமாக வைத்துக் கொள்கிறது.

மேலும் படிக்க – கர்ப்பப்பையில் உள்ள கழிவுகள் முழுவதும் நீங்க பயன்படும் கருஞ்சீரகம்….

வெந்தய ஷாம்பு

வெந்தய ஷாம்பு செய்வதற்கு நமக்கு தேவையான பொருட்கள் வெந்தயம், புளித்த தயிர் மற்றும் சாதம் வடிகட்டிய தண்ணீர். முதலில் நாம் புளித்த தயிரில் வெந்தயத்தை ஓர் இரவு நன்கு ஊற வைத்துக் கொள்ள வேண்டும். பிறகு அடுத்த நாள் அதை மிக்ஸியில் போட்டு நன்கு அரைத்துக் கொண்டு அதில் சிறிதளவு ஒருநாள் பதப்படுத்தப்பட்ட அரிசி வடிகட்டிய தண்ணீரை அதில் ஊற்றி ஒன்றாக கலந்து கொண்டால் ஆரோக்கியமான ஷாம்பூ தயார்.

இதில் இருக்கும் நன்மைகள்

வெந்தயத்தில் பல விதமான சக்திகள் இருக்கின்றன. அதை போல் குளிர்ச்சி அடையும் தன்மை தயிரில் அதிகமாக இருக்கிறது. வெந்தயம் உங்கள் வேர்களை உறுதிசெய்யும். இதில் இருக்கும் கொழுப்புத்தன்மை உங்கள் கூந்தலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்களை அளிக்கும். அரிசி வடிகட்டிய தண்ணீரில் நோயெதிர்ப்பு பண்பு இருக்கிறது இதனால் தலையில் இருக்கும் பொடுகுகள் மற்றும் அழுக்குகளை அகற்ற உதவுகிறது.

மேலும் படிக்க – சிக்கன் பற்றிய சில திடுக்கிடும் விஷயங்கள்.!

பயன்படுத்தும் முறை

தலைக்கு குளிப்பதற்கு முன்பாக இந்த ஷாம்புவை தலை முழுவதும் தேய்த்துக் கொள்ள வேண்டும். அடியிலிருந்து நுனிவரை படும்படி தேய்த்து குளிக்க வேண்டும். பிறகு அரை மணி நேரம் அதை உலர வைத்து உங்கள் கூந்தலில் ஏற்பட்டிருக்கும் மாற்றத்தை காணுங்கள்.

இது போன்ற ஆரோக்கியமான வழியில் செய்யப்படும் ஷாம்புவைப் பயன்படுத்தி உங்கள் கூந்தல் ஆரோக்கியத்தை அதிகரியுங்கள், இதைத் தவிர்த்துத் தேவையற்ற ரசாயனங்கள் கலக்கப்பட்ட ஷாம்புகளை பயன்படுத்தி உங்கள் கூந்தலை இழக்காதீர்கள்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன