மூங்கிலில் செய்யப்படும் கூடைகள் மற்றும் அதன் பயன்கள்..!

  • by
Cane Bags

நாம் சாலையோரங்களில் மூங்கில்களை வைத்து பல விதமான கூடைகளை தயாரிப்பவர்களின் பார்த்துள்ளோம். ஆனால் இந்தத் தொழில் எத்தனை ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்டது என்பது உங்களுக்கு தெரியுமா.? கிட்டத்தட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்டுகளாகவே மூங்கில்களை வைத்து மக்கள் வீடுகள் மற்றும் வீட்டுப் பயன்பாட்டுப் பொருட்களை தயாரித்து வந்தார்கள். அதில் மிக முக்கியமாக இருப்பது அவர்களின் மூங்கில் பைகள் தான்.

மூங்கில் பைகள் நாம் இப்போது பயன்படுத்தும் வகையில் வசதிகள் அக்காலத்தில் கிடையாது. ஆனால் இயற்கைக்கு நன்மை அளிக்கும் வகையில் அக்காலத்தில் வீட்டுப் பயன்பாட்டுப் பொருட்கள் இருந்தன, மண்பானைகள், மூங்கில் பைகள், மரப் பலகைகள் போன்றவைகளை அக்கால முன்னோர்கள் தயாரித்தார்கள். இதில் மூலமாக இயற்கை அழியாமல் அதை பாதுகாத்தார்கள். மூங்கில் களிலிருந்து அவர்கள் கூடைகள், பைகள் மற்றும் பாய் போன்றவைகளை தயாரித்து அதை பயன்படுத்தி ஆரோக்கியமாக வாழ்ந்து வந்தார்கள்.

மேலும் படிக்க – புதினா இலையில் இருக்கும் மருத்துவ குணங்கள்..!

மூங்கில் பயன்பாட்டின் வரலாறு

கிட்டத்தட்ட 7000 முதல் 12,000 ஆண்டுகளுக்கு முன்பு மூங்கிலின் பயன்பாடு அதிகமாக இருந்தது. அதிலும் எகிப்தியர்கள் மற்றும் மிடில் ஈஸ்ட் போன்ற நாடுகளில் இந்த பயன்பாடு தொடங்கியது. அவர்கள் ஓர் நவீன வாழ்க்கையை அக்காலத்தில் மூங்கில்களை பயன்படுத்தி வாழ்ந்து வந்தார்கள். எல்லோரும் தங்கள் உடைமைகளை எளிதில் எடுத்துச் செல்லும் வகையில் இந்தப் பைகளை வடிவமைத்து உருவாக்கினார்கள்.

தற்போதைய பயன்பாடு

இன்றும் பல கிராமங்களில் மற்றும் பழங்குடியினர் இதுபோன்ற மூங்கிலால் செய்யப்பட்ட பொருட்களை பயன்படுத்தி வருகிறார்கள். இதனால் செய்யப்படும் கூடைகள் மற்றும் பைகள் இன்றும் நகரத்தில் வாழ்பவர்களும் பயன்படுத்துகிறார்கள்.

மேலும் படிக்க – கோடைக்காலங்களில் தவிர்க்க வேண்டிய உணவுகள்..!

வீட்டு அலங்கார பொருட்கள்

மூங்கில் உங்களைப் பயன்படுத்தி இன்று பலவிதமான வீட்டு அலங்காரப் பொருட்களை தயாரித்து வருகிறார்கள். பூத்தொட்டிகள், ஜன்னல்களின் போர்வைகள், பல விதமான கைவினை பொருட்கள் என ஏராளமான தயாரித்து நகரங்களில் இருப்பவர்களை கவரும் வகையில் விற்பனை செய்கிறார்கள்.

மூங்கில் மற்றும் இயற்கையினால் செய்யப்படும் பொருட்களின் ஆயுட்காலம் அளவற்றது. எனவே இத்தகைய பொருட்களை வாங்கி பயன்படுத்தி இயற்கையை வளருங்கள்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன