திரு நாமம் சொல்லும் திருநீறு அணிவோம்

  • by

நெற்றியில் அணியும்   திருநீறு வாழ்வில் திருப்பம் தரக்கூடியது ஆகும். இதனை நாம் அறிந்து அணிவது மேலும் வாழ்வை சிறப்பாக்கும். 
வாழ்வில் உயர்ந்த தத்துவத்தை  விளக்கும் வாழ்கை பாதையை மாற்றும். திருநீறு அணிவதன தார்பாரயம் என்னவென்றால் நாடாண்ட மன்னனும், நூல் பல கற்ற பண்டிதரும் கடைசியில் பிடி சாம்பல் ஆவார்கள்’ என்பதை  இது உணர்த்துகின்றது. 

சக்கரங்களை ஒருங்கிணைக்கும் சக்தி:

 மனித உடலில் நெற்றி என்பது மிக முக்கிய பாகமாக இருப்பதால், அதன் வழியாக அதிக சக்தி வெளிப்படுகின்றது.  நமது உடலின் சக்கரங்களில் நெற்றியில் இயங்கும் சக்ரா ஒன்று உள்ளது. அதனை குறித்து நாம் அறிந்து செயல்படுதல் அவசியம் ஆகும்.  விபூதியின் அணியும் நெற்றியானது இயற்கை மற்ற சக்தி அம்சங்களையும் தமக்குள் ஈர்த்துக்கொள்ளும் வர்ம பகுதியாகவும் அது உள்ளது.

சூரிய கதிர்களின் சக்தி அலைகளை நமக்குள்  ஈர்க்கச் செய்கின்றது. நெற்றி வழியாக கடத்தும் வேலையை திருநீறு நன்றாக செய்யும். அதனால் நெற்றியில் திருநீறு பூசுவது என்பது பல உள்ளர்த்தங்களை கொண்டது என்பதை நாம் அறிந்து செயல்பட வேண்டும்.

மேலும் படிக்க – திருப்பதி திருமலையின் சிறப்புகள் பற்றி தெரிந்துகொள்ளுங்கள்..!

பலபெயர்கள் கொண்ட தீருநீறு:

இரட்சை, சாரம், விபூதி, பஸ்மம், பசிதம் என்று திருநீறுக்கு பல பெயர்கள் உள்ளன. நெற்றியில் பிரம்மன் எழுதிய தலையெழுத்தை அழித்து, இறையருளை பதிக்கும் தன்மையும் திருநீற்றுக்கு இருப்பதாக சொல்லப்படுகிறது.

திருநீறு மருத்துவ குணமுடையது. ஆதலால் திருநீரை  நீரில் குழைத்து நெற்றியில் பூசினால் கபாலத்தில் உள்ள நீர் வற்றி பல வியாதிகள் தீரும் என்பது இன்று வரையில் கடைப்பிடிக்கப்படும் வழிமுறையாக ஒன்றாக உள்ளது. திருசெந்தூர் விபூதி அணியும்பொழுது உடலில் உள்ள பிணிகள் அனைத்தும் நோய்களும் குணமாகும் என்ற முறை பின்பற்றப்படுகின்றது.

பிணிகளை நீக்கும் திறுநீறு:

திருநாவுக்கரசு சுவாமிகளுக்கு ஏற்பட்ட வயிற்று நோய்க்கு, அவரது தமக்கையார் வயிற்றில் திருநீறு பூசி, குணம் பெறச் செய்த வரலாற்றை பெரிய புராணத்தில்  நாம் படித்திருப்போம். திருநீற்றின் பெருமையானது புராண காலம் முதலாக, இன்று வரையிலும் சிறப்பு பெற்றதாக இருக்கிறது.

திருநீறு தரிப்பதற்கு பொதுவாக இரண்டு முறைகள் உள்ளன. முதலாவது ‘உத்தூளனம்’ எனப்படும் இடைவெளி இல்லாது நெற்றி மற்றும் பிற இடங்களில் பூசும் முறை ஒன்றுள்ளது .   ஆள்காட்டி விரல், நடு விரல், மோதிர விரல் ஆகியவற்றால் மூன்று கோடுகளாக பூசுவது இரண்டாவது முறையாகும் . ‘விபூதியை நாம் மற்றவருக்கு கொடுக்கும்போது, கொடுப்பவரது குணநலன்கள்  எளிதாக மற்றவருக்கு மாறும் அதனை நாம் மாற்றலாம். 

நல்ல குண நலன்கள் உள்ளவர்களிடம் மட்டும் திருநீறை பெற்று அணிந்தால்  அவை நம்மை தாக்கும். திருநீற்றைப் பற்றி மேலும் நாம் அறிந்து கொள்ள அகத்தியர் பரிபூரணம் என்ற நூலில் அகத்திய மகரிஷி குறிப்பிடுகின்றார்.

இறுதியில் பிடி சாம்பல்:

ஒரு  பொருளையும் தீயிலிட்டால் வெப்பத்தின் காரணமாக முதலில் அது கறுப்பாக மாறும். பிறகு படிப்படியாக நெருப்பால் எரிக்கப்பட்டு சுத்த வெளுப்பாக மாறிவிடும். 

 வாழ்வில் எவ்ளோ பெரிய மனுசனாலும் பிடி  சாம்பலுக்கான முடிவான நிலையாகும். பஸ்பமாக திருநீற்று வெளுத்துப் போவதற்கு முன்னர் அது கரியாக மாறும்.  கார்பன் எனப்படும் கரியாகிய வைரம்தான் இவ்வுலகத்தில் மதிப்பு மிக்க பொருளாக இருக்கும் என நாம் அறிந்தது. 

 கரியாக உள்ள பொருளைவிட, மிகவும் உயர்ந்தது நீற்றுப்போன திருநீறு என்று போற்றப்படுகிறது.

கார்பன் எனப்படும் கரியாகிய வைரம்தான் இவ்வுலகத்தில் மதிப்பு மிக்க பொருளாக இருக்கும் என நாம் அறிந்தது.  கரியாக உள்ள பொருளைவிட, மிகவும் உயர்ந்தது நீற்றுப்போன திருநீறு என்பதை நாம் அறிந்து கொள்வது அவசியம் ஆகும்.

திருநீறு அணியும் முறைகள்:

திருநீறு அணிய  முறைகள் உள்ளன. அதனை முறையாக பின்ப்பற்றினால் உரிய பலன் கிடைக்கும்.  உள்ளங்கையானது பிரம்மா மற்றும் விஷ்ணு பாகமாக கருதப்படுவதால், திருநீறை உள்ளங்கையில்தான் பெற வேண்டும். ஆண்கள் ‘திரிபுண்டரம்’ எனப்படும் நீரால் கலக்கி மூன்று கிடைக்கோடுகளாகவும், ‘உத்தூளனம்’ எனப்படும் வெறும் விபூதியாகவும் அணிய வேண்டும் என்பதும், பெண்கள் தண்ணீர் சேர்க்காமல்  அணியவேண்டும் என்பதும் சாஸ்திரம்.

மேலும் படிக்க – ஸ்ரீ ராம ஜெயத்தின் சிறப்பு..!

திருநீறு அணியும் ஆண்கள் தண்ணீரில் அதைக் குழைத்து, ஆள்காட்டி விரல், நடுவிரல் மற்றும் மோதிர விரல் ஆகியவற்றால் எடுத்து, மூன்று கோடுகளாக நெற்றி, கழுத்து, மார்பு, தோள்கள், தொப்புளுக்கு மேல்புறம், முழங்கைகள், மணிக்கட்டுகள், விலா, முழங்கால்கள் ஆகிய பகுதிகளில் அணிய வேண்டும். காலை, மதியம், மாலை மூன்று நேரங்களிலும், பூஜை காலங்களிலும் விபூதி பூசுவது அவசியம்.

விபூதி வைத்திருக்கும் கலயத்தை கவிழ்த்து வைக்கக்கூடாது. கோயிலில் விபூதி பிரசாதம் வாங்கும்போது இடது கையை கீழே வைத்து வலது கையை மேலே வைத்து வாங்க வேண்டும்.மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன