அதிகாலை சூரிய நமஸ்காரம் செய்வதால் கிடைக்கும் நன்மைகள்.!

  • by
Surya Namaskaram

“சூரியனுக்கு முன் எழுவாய் சூரியனையே வெல்வாய்” என்ற வார்த்தையை எல்லோரும் அறிந்து இருப்பீர்கள். அதற்கேற்றபடி நாம் சூரியனுக்கு முன் எழுந்து சில யோகா பயிற்சிகள் செய்வதன் மூலமாக நமது உடல் ஆரோக்கியம் மற்றும் வலிமையை அதிகரிக்க முடியும். அதை தவிர்த்து தினமும் சூரியனை நோக்கி சூரிய நமஸ்காரம் செய்வதன் மூலமாக நமது உடலில் இருக்கும் அனைத்து நச்சுக்களும் வெளியேறி, உடலை வலுப்படுத்தும்.

உலகில் தோன்றும் உயிரினங்கள்

நம் உலகில் தோன்றும் ஒவ்வொரு உயிர்களுக்கும் சூரியனின் சம்பந்தம் இருக்கும். அது உயிராக இருந்தாலும் சரி, எந்த தாவரமாக இருந்தாலும் சரி, சூரியனின் தாக்கத்தினால் தான் அதற்கு, உலகில் உயிர்வாழும் ஆற்றல் கிடைக்கின்றன. அத்தகைய வலிமை வாய்ந்த சூரியன் மூலமாக நமது உடல் வலிமையையும், ஆற்றலையும் அதிகரிக்க முடியும். மனிதராய் பிறக்கும் ஒவ்வொருவருக்கும் உதவியாய் இருப்பது அவர்களின் தாய். அதேபோல் இயற்கை பிறப்பதற்கு உதவியாக இருப்பது சூரிய சக்தி. இவ்வுலகில் சூரியன் இல்லையென்றால் சில வருடங்களிலேயே ஒட்டுமொத்த உயிரினங்கள் அனைத்தும் அழிந்திருக்கும். எனவே சூரியனில் அருமை தெரியாமல் இன்று வரை அதன் தாக்கத்திலிருந்து தப்பித்து வருகிறோம்.

மேலும் படிக்க – விரதங்களின் மகிமை சாராம்சம் தெரிந்துகொள்வோமா

சூரிய நமஸ்காரம்

யோகா பயிற்சியில் ஒன்றாக கருதப்படுவது இந்த சூரிய நமஸ்காரம். உடல் வலிமையை தரும் யோகா பயிற்சியை சிறுவர்கள் முதல் முதியவர்கள் வரை அனைவரும் பயின்று பலன் பெறுகிறார்கள். இத்தகைய வலிமை வாய்ந்த யோகா பயிற்சியில் முக்கியமான யோகவாக இருப்பதுதான் இந்த சூரிய நமஸ்காரம். சூரியன் எழுவதற்கு முன் எழுந்து சூரியன் இருக்கும் திசை நோக்கி அதன் ஒளி நம்மீது படும்படி ஒருகாலில் நேர்கோட்டில் நின்று. நமது இரு கரங்களை தலைமேல் வைத்து சூரியனை நோக்கி கும்பிடுவதுதே சூரிய நமஸ்காரம்.

நுரையீரல் ஆரோக்கியம் அதிகரிக்கும்

சூரிய நமஸ்காரம் செய்யும் போது நமது சுவாச பலன் அதிகரிக்கும். நம் உடலில் இருக்கும் நச்சுக்கள் அனைத்தும் வெளியேற்றி புதிதாக உருவாகும் உயிர் காற்றை நம் உடல் முழுக்க பரப்ப உதவுகிறது. அதிகாலை நேரத்தில் உண்டாகும் காற்று எந்த ஒரு மாசுபாட்டில் சிக்காமல் தூய்மையாக இருக்கும். இந்த காற்றை சுவாசிப்பதன் மூலம் நமது நுரையீரல் வலுவடைந்து நாம் சுவாசிக்கும் ஆற்றலை அதிகரிக்கும். இதன் மூலம் நமக்கு தேவையான, ஆரோக்கியமான சுவாசக்காற்று கிடைப்பதனால் அன்றைய நாள் முழுவதும் நாம் சுறுசுறுப்பாக இருப்போம்.

மேலும் படிக்க – வளர்பிறையில் சஷ்டி விரதத்தினால் வாழ்வில் வளம் பெறலாம்..!

ஜீரண மண்டலத்தை வலுப்படுத்தும்

சூரிய நமஸ்காரம் செய்வதன் மூலமாக நமது ஜீரண மண்டலத்தின் ஆற்றலை அதிகரிக்கிறது. அதைத் தவிர்த்து கல்லீரல், மண்ணீரல், குடல் மற்றும் வயிற்றுப் பகுதி அனைத்தையும் ஆரோக்கியமான காற்றைக் கொண்டு மசாஜ் செய்கிறது. இதன் மூலமாக வயிற்றுப் பகுதிகளில் ரத்தங்கள் தேங்காமல், மலச்சிக்கல் பிரச்சினையை அடியோடு அழிக்கிறது.

அழுத்தங்களைக் குறைக்கும்

சூரிய நமஸ்காரம் செய்வதன் மூலமாக உங்கள் இதயத்துடிப்பை சமமாக எந்தப் பதட்டமும் இல்லாமல் வைத்துக் கொள்ளவும். இரத்தக்கொதிப்பு என அனைத்தையும் தீர்க்கும். கை கால்கள் என மற்ற உடல் உறுப்புகள் அனைத்துக்கும் தேவையான வெப்பத்தை தருகிறது.

எந்த ஒரு பதட்டமும் இல்லாமல் தினமும் சூரிய நமஸ்காரம் செய்வதன் மூலமாக நம் மனம் அமைதி அடையும். அதை தவிர்த்து போதுமான அளவு மன அமைதி மற்றும் ஓய்வு கிடைப்பதால் நம்முடைய நினைவாற்றலை அதிகரிக்கும்.

மேலும் படிக்க – அதிசயங்களுக்குள் அதிசயங்களான பழங்கால கோவில்கள் பாருங்க.!

வியர்வை வெளியேற்றம்

சூரிய நமஸ்காரம் நாம் 3 லிருந்து 10 நிமிடங்கள் வரை செய்ய வேண்டும். இதன் மூலமாக நமது உடலில் உடனடியாக வியர்வை சுரக்கும். நம் உடம்பில் இருக்கும் அனைத்து நச்சுக்களையும் வியர்வை மூலமாக வெளியேற்றுவதினால் நம் சருமம் பொலிவாக இருக்கும். தைராய்டு பிரச்சனை உள்ளவர்களுக்கும் சூரிய நமஸ்காரம் சிறந்ததாகும்.

உடல் ஆரோக்கியத்தை அதிகரிக்க சூரிய நமஸ்காரம் மிக முக்கியம். சூரிய நமஸ்காரம் செய்வதற்கு நாம் அதிகாலையில் எழுந்தாள் மட்டும் போதும். சூரியன் தெரியும் இடத்தில் பத்து நிமிடங்கள் சூரிய நமஸ்காரம் செய்வதன் மூலமாக உங்கள் உடல் வலிமையை அதிகமாக்கும். முதல் நாளில் இதை நீங்கள் உணராமல் இருந்தால், தொடர்ந்து செய்வதன் மூலம் இதன் பலனை நீங்கள் அறியலாம். அதனுடன் சேர்த்து தொடர்ந்து யோகப் பயிற்சிகளைச் செய்வது சிறந்தது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன