சமுதாயத்தில் சமத்துவத்தால் கிடைக்கும் நன்மைகள்..!

  • by
benefits of staying united in society

உலக நாடுகளை ஒப்பிடுகையில் இந்தியா என்பது ஒரு அற்புதமான நாடு, ஏனென்றால் இங்கு ஏராளமான மொழிகள், மக்கள் மற்றும் பல இனத்தவர்கள் இருக்கிறார்கள். இருந்தும் இந்தியா ஒற்றுமையான நாடு என்று எல்லோரும் நினைத்துக் கொள்கிறார்கள். இருந்தாலும் ஒருசில கெட்ட எண்ணம் கொண்டவர்களினால் நம்முடைய நிம்மதி அவ்வப்போது பாதிப்படைகிறது. அதை தடுத்து நாம் ஒற்றுமையாக இருப்பதினால் கிடைக்கும் நன்மைகளை காணலாம்.

சகோதரத்துவம்

அண்ணன், தம்பி, தங்கை, அக்கா என்ற உறவுகள் அனைத்தும் குடும்பத்திற்குள் மட்டும் இல்லை. உங்களை சுற்றியுள்ள அனைவரையும் அப்படி பாருங்கள். நம் அக்கம் பக்கம் மற்றும் நம்மை சுற்றி உள்ள அனைவரையும் உங்கள் உறவுகளாக நினைத்துக்கொள்ளுங்கள். இதனால் சகோதரத்துவம் வளர்ந்து, கோபம், பொறாமை மற்றும் எதிர்ப்புத் தன்மை குறைந்து எப்போதும் நிம்மதியாகவும், சந்தோஷமாகவும் வாழ முடியும்.

மேலும் படிக்க – விருப்பங்களை பகிர்ந்து பந்தங்களை பலப்படுத்துங்கள்

சமுதாயத்தை மேம்படுத்தும்

நாம் ஒற்றுமையாக வாழ்வதினால் நம்முடைய சமுதாயம் அதிகளவில் மேம்படும். ஏனென்றால் இந்தியாவில் பல விதமான மக்கள் இருக்கிறார்கள். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான தேவைகள் இருக்கும், அந்தத் தேவைகளை பூர்த்தி செய்வதற்காக பல நாடுகள் தங்களுடைய பொருட்களை இந்தியாவில் ஏற்றுமதி செய்வார்கள். இதனால் இந்தியாவின் பொருளாதாரம் அதிகரிக்கும். எப்போது நம்முடன் ஒற்றுமை இல்லாமல் சண்டைகள் அதிகரிக்கிறதோ இது போன்ற ஏற்றுமதி குறைந்து இந்தியாவின் வளர்ச்சியும் குறைய வாய்ப்புள்ளது.

ஒற்றுமை அவசியம்

எல்லோரும் பிறக்கும்போது நல்லவர்களாகவே பிறக்கிறார்கள், ஆனால் ஒரு சிலரின் தீய சொற்களினால் அவர்கள் தீவிரவாதியாக மாறி மற்றவர்களை துன்புறுத்துகிறார்கள். இது ஆரம்பத்தில் ஒரு சில அற்ப மகிழ்ச்சியை தந்தாலும் நீங்கள் செய்த இந்த செயலினால் உங்கள் வாழ்க்கை மற்றும் எதிர்காலம் பெரிதாக பாதிப்படையும். உங்களை ஒருவர் மதிக்க வேண்டும் என்றால் உங்கள் மனதைப் பார்த்து மதிக்கவேண்டும், அதைத் தவிர்த்து உங்களின் மேல் உள்ள பயத்தினால் மதிக்கக்கூடாது. எனவே மற்றவர்களுடன் அன்பைப் பகிர்ந்து ஒற்றுமையாக வாழுங்கள். அப்படி வாழ முடியவில்லை என்றால் அவர்களிடம் இருந்து விலகி இருங்கள்.

நல்ல சமுதாயம் உருவாக்கங்கள்

நாம் நல்ல சமுதாயத்தை உருவாக்க வேண்டும் என்றால் நம்முடைய அடுத்த தலைமுறைக்கும் நல்லதை கற்றுத்தர வேண்டும். அதை தவிர்த்து நம் மனதில் இருக்கும் தீய எண்ணங்களை அவர்கள் முன்னிலையில் காட்டினாள் அவர்களும் அதே தீய பழக்கங்களுக்கும் நுழைந்து மற்றவர்களை துன்புறுத்த துவங்கி விடுவார்கள். எனவே அன்பை பரிமாறுவதுதான் அழகான வாழ்க்கை என்பதை அவர்களுக்கு அறிவித்து அவர்களை வளருங்கள். நாளடைவில் வேறு மக்கள் என்பதை அவர்கள் மறந்து ஒற்றுமை தான் சிறந்தது என்று வாழ்வார்கள்.

எல்லா பண்டிகையும் கொண்டாடுங்கள்

பாகுபாடு மற்றும் வேறுபாடுகள் இல்லாமல் எல்லா பண்டிகைகும் முன்னுரிமை தாருங்கள். நீங்கள் ஒரு சில மதத்தை சேர்ந்தவராக இருந்தால் மற்ற பண்டிகையை புறக்கணிக்காமல் அவர்களுடன் இணைந்து கொண்டாட முயற்சி செய்யுங்கள். அவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவியுங்கள், இனிப்புகளை வழங்குங்கள். இதன் மூலமாக உறவுகள் மேம்பட்டு, எல்லா விஷயங்களையும் சிறப்பாக பரிமாறிக் கொள்ளலாம். எப்போது பரிமாற்றங்கள் அதிகரிக்கிறதோ அப்போது உறவுகள் வலுவடைகிறது.

மேலும் படிக்க – குழந்தைகளுடன் பெற்றோர்கள் எப்படி இருக்க வேண்டும்..!

வேற்றுமையில் ஒற்றுமை

இந்தியாவில் இந்துக்களை தவிர்த்து மற்ற யாரும் இல்லை என்றால், நாம் அதில் இருக்கும் இந்துக்களில் வேறுபாடுகளை தேடுவோம். எனவே எப்போது மற்ற மொழியினர் நம் நாட்டில் இருக்கிறார்களோ அப்போது தான் நாம் பெருமையாக, நாம் யாரென்று சொல்ல முடியும். அதேபோல்தான் கிறிஸ்தவர்களும், இஸ்லாமியர்களும் இதை தவிர்த்து புத்த மதத்தை பின்தொடர்பவர்கள், ஜெய்னிசத்தை பின் தொடர்வார்கள் என எல்லோரும் இந்தியாவிற்கு முக்கியமானவர்கள். எனவே இந்த வேற்றுமை தான் நாம் ஒற்றுமையாக இருப்பதற்கான வழிகளை தூண்டுகிறது. எனவே நம் வாழ்க்கையில் வேற்றுமை காணாமல் ஒற்றுமையாக இருக்க வேண்டும். இதை ஒரு முறை செய்து பாருங்கள், உங்களை நினைத்து நீங்கள் பெருமைப்படுவீர்கள்.

உலகம் முழுக்க பல நாடுகளில் ஒரு சில மதத்திற்காகவே இயங்குகிறது. ஆனால் இந்தியா மட்டும் தான் அது போல் இல்லாமல் எல்லோரும் அண்ணன் தம்பி என்ற எண்ணத்தில் இயங்குகிறது. இதை ஒவ்வொரு மக்களும் புரிந்து நாம் அனைவரும் ஒன்றுதான் என உணர்ந்து, உறுதியாக நம்முடைய வாழ்க்கையை மேம்படுத்த வேண்டும். சகோதரத்துவத்தை உருவாக்க வேண்டும்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன