புடலங்காய் சாப்பிட்டு வந்தால் பலம் பெறலாம்!

  • by

புடலங்காய் சாப்பிடுபவர்களா நீங்கள் உங்களுக்கான  பலன்கள் இங்கு கொடுத்துள்ளோம். இது பல நல்ல பல மருத்துவ குணங்களை கொண்டது.  ஆரோக்கிய பலன் கொண்ட புடலங்காய் கொடியாக வளரக்கூடிய கொடியாக படரும் காய்கள் தொங்கும். இந்த கொடியை  வீட்டு மாடிகளில் வளர்க்கலாம். 

புடலங்காய் வயிற்றுப் பூச்சிகளை வெளியேற்றி குடலை சுத்தம் செய்யும் ஆற்றல் கொண்டது, மாரடைப்பைத் தடுக்க வல்லது. கருத்தடைக்கு உதவும் அரும் பெரும் சாதனம் ஆகும். , பால்வினை நோயான எச்.ஐவிக்கு எதிரான ஆற்றல் தரும். .

புடலங்காய்

புடலங்காயில் ஆல்கலாய்ட்ஸ், கிளைகோஸைட்ஸ், டேனின்ஸ் ப்ளேவனாய்ட்ஸ், பெனால்ஸ் மற்றும் ஸ்டிரால்ஸ் ஆகிய மருத்துவ வேதிப்பொருட்கள் நிறைந்து காணப்படுகின்றன. 

மேலும் படிக்க – கோடைக் காலங்களில் உடலில் குளிர்ச்சியாக வைப்பதற்கான வழிகள்..!

கொடி புடலங்காயக்கு என தனி சத்துக்கள் உள்ளன.புடலங்காயின்  இலைக்கு மஞ்சள் காமாலையை குணமாக்கும் பெரும் ஆற்றல் உண்டு. புடலங்காய் இலையுடன் கொத்தமல்லி சேர்த்து அரைத்து மூன்று காலமும் தலா 15கிராம் வீதம் சாப்பிட்டு வர  நோய்கள் குணமாகும்.

கொடி புடலங்காயக்கு என தனி சத்துக்கள் உள்ளன.புடலங்காயின்  இலைக்கு மஞ்சள் காமாலையை குணமாக்கும் பெரும் ஆற்றல் உண்டு. புடலங்காய் இலையுடன் கொத்தமல்லி சேர்த்து அரைத்து மூன்று காலமும் தலா 15கிராம் வீதம் சாப்பிட்டு வர  நோய்கள் குணமாகும்.

புடலங்காய்

புடலங்காயில் மற்ற காய்கறியில் உள்ள மாவு சத்தை விட குறைவான மாவு சக்தியுள்ளது.   புடலங்காயில் அதிகபடியான நார்சத்து உள்ளது. உடலில் உள்ள சக்கரை நோயாளிகள் புடலங்காயை தினமும் உணவில் சேர்த்து கொள்வதால் இரத்ததில் உள்ள சக்கரையின் அளவை கட்டு பாட்டில் வைக்க உதவுகிறது.

உங்களுக்கு விட்டுவிட்டு காய்ச்சல் தொடரும் போது அடிக்கடி புடலங்காயை இளசாக வாங்கி கொட்டைகளை நீக்கி விட்டு கறியாக சமைத்து சாப்பிடுவதால் காய்ச்சல்  காணமல் போகும். 

மலக்கட்டு போக்கும் எளிய நிவாரணியாக இது  உள்ளது. புடலங்காய் சாப்பிட்டு வந்தால் மலம் எளிமையாக வெளியேறும்.

மேலும் படிக்க – கற்பூரவல்லி இலையில் இருக்கும் மூலிகை குணம்

தலை முடி உதிர்வை தடுக்க, பாதிக்கபட்டு வழுக்கையான இடத்தில் முடி வளர புடலங்காய் இலை சாறு எடுத்து பாதிக்க பட்ட இடத்தில் தடவிவர முடி உதிர்வு தடுக்கபட்டு மீண்டு புதிய முடிகள் வளரும்.

உடலில் உள்ள சிவப்பு அணுக்கள் அதிக அளவு அழிவுறுவதால் பித்தம் அதிகரித்து காய்ச்சலை உண்டாக்கும். இதனை தடுக்க புடலங்காய் மற்றும் கொத்தமல்லி சேர்த்து அரைத்து சாறு பிழிந்து கொடுக்க காய்ச்சலை கட்டுபடுத்தும். வாந்தியை உண்டாக்கும் தன்மை உண்டு, மலேரிய காய்ச்சலை குணபடுத்தும்.

புடலங்காய் இதயத்துக்கு பலமும் நல்ல செயல்பாட்டையும் தரக்கூடியது. அதிக உடலுழைப்பு, பல்வேறு காரணங்களால் ஏற்படும் மன உளைச்சல் ஆகியவற்றால் இதயத்துடிப்பும், பெருமூச்சும் ஏற்பட்டு இதயம் பலவீனமடைவது இயற்கையாகும்.

புடலங்காய்

புடலங்காயை அடிக்கடி உணவில் சேர்த்து கொள்வதோடு அன்றாடம் காலையில் எழுந்து புடலைக் கொடியின் இளந்தளிர் இலைகளைப் பறித்து சுத்தம் செய்து சாறாகப் பிழிந்து வைத்துக் கொண்டு ஒரு வேளைக்கு இரண்டு தேக்கரண்டி வீதம் அந்தி சந்தி என இரண்டு வேளைகள் சாப்பிடுவதால் இதயத்துடிப்பு சமநிலை பெருவதோடு இதயமும் பலம்பெறும்.

இதய நோயாளிகள் 48 நாட்கள் சாப்பிடுவதால் நலம் பெறுவர். புடலங்காயின் இலைச்சாறு 5 முதல் 10 மி.லி அளவுக்கு உள்ளுக்குப் புகட்டுவதால் பேதியாகும் வாந்தி எடுக்க வைக்கவும் மருந்தாகும்.

மேலும் படிக்க – கரும்பு சாப்பிடுவதினால் நமக்கு இவ்வளவு நன்மைகள் கிடைக்கிறதா..!

புடலங்காயுடன் சுவைக்காக வேறு காய்கள், பருப்பு வகைகள், சக்கரை போன்ற வற்றை சேர்த்தும் சமைக்கலாம், ஆனால் அதன் மருத்துவ தன்மை சேர்க்கபடும் பொருளுக்கு ஏற்ப மாறிவிடும் அதனால்  தனியாக சமைத்து சாப்பிடலாம்.  

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன