சூரியனுடன் அமைந்திருக்கும் கிரகத்தால் ஏற்படக்கூடிய பலன்கள்..!

  • by
benefits of planets together with sun

நாம் பிறக்கும் நாள், நேரத்தை பொறுத்து தான் நம்முடைய ஜாதகம் அமைகிறது. ஒவ்வொரு ஜாதகருக்கும், ஒவ்வொரு விதமான கிரகங்கள் இருக்கும் சமயத்தில் அந்த நாட்களில் கிரகத்தின் நிலையை பொறுத்து தான் நம் வாழ்க்கை அமையும். இதனால் சூரியனை சார்ந்து ஒரே நேர்கோட்டில் எப்போது வெவ்வேறு விதமான கிரகங்கள் அமைகிறதோ அப்போது நம் வாழ்க்கையில் என்னென்ன நன்மைகள் மற்றும் தீமைகள் நடக்கும் என்பதை ஜோதிடத்தின் மூலமாக தெரிந்துகொள்ளலாம். இப்படி சூரியன் நேர்கோட்டில் இருக்கும் கிரகங்களை பொருத்து உங்கள் வாழ்க்கை எப்படி இருக்கும் என்பதை காணலாம்.

சந்திரன் செவ்வாய் புதன்

சூரியனுடன் இந்த 3 கிரகங்களும் சேரும் பொழுது இவர்கள் கலை சார்ந்து வெற்றி பெறுவார்கள், அதைத் தவிர்த்து செல்வமும் இவர்களுக்கு சேரும். இச்சமயத்தில் பிறப்பவர்கள் மகிழ்ச்சியாகவும் மற்றும் தேவைக்கேற்ப பொய்களை சொல்வார்கள். இதைத் தவிர்த்து அதிக நேரம் மௌனமாக இருப்பார்கள். இவர்கள் பலமும், பராக்கிரமமும் சேர்ந்தவர்களாக இருக்கக் கூடும்.

மேலும் படிக்க – ஊரடங்கிள் மதுரை மீனாட்சியம்மன் சித்திரை திருவிழா..!

சந்திரன் செவ்வாய் குரு

சூரியனுடன் சந்திரன், செவ்வாய், குரு போன்றவைகள் அமைந்திருந்தால், அவன் அளவற்ற செல்வத்தைப் படைத்தவனாக இருப்பான். அதோடு நல்ல குணநலங்களுடன், நல்லறிவும் கொண்டவனாக இருப்பார். சன்மார்க்கம் முதலிய தரா தன்மையை அறிந்தவன். புத்திரப் பேருடையவன், நல்ல குணமுடைய, உத்தமியான பத்தினியைத் துணையாக கொண்டிருப்பார்.

சந்திரன் செவ்வாய் சுக்கிரன் அல்லது சனி

சூரியனுடன் சந்திரன், செவ்வாய், சுக்கிரன் அமைந்திருந்தால் இது மிக மோசமான அமைப்பு என்பார்கள். இவன், தனது கடந்த பத்து பிறவிகளில் எந்த ஒரு நன்கொடையும் செய்யாதவனாக இருப்பான். பேச்சினால் தப்பித்துக்கொள்ளும் இவனுக்கு அவ்வப்போது உடல் கோளாறுகள் உண்டாகும். அதேபோல் இதனுடன் சுக்கிரனுக்கு பதிலாக சனி அமைந்திருந்தால் இதுவும் மோசமானதாக இருக்கும். இவரும் தனது பத்து ஜென்மங்களில் எந்த நன்மையும் செய்யாமல் இருந்ததால் இந்த அமைப்பில் இருப்பார்கள் அடிக்கடி கோபப்படும் நிலை மற்றும் தன் பசியைப் போக்கிக் கொள்ளாதே வாழ்க்கையில் வாழ்வார்.

சந்திரன் புதன் குரு

சூரியனுடன் இந்த அமைப்பு அமைந்திருந்தால் அவன் அரசனுக்கு நிகராக வாழ்வான். அறிவு, செல்வம் போன்ற அனைத்தையும் கொண்டு வாழ்வான். இது ஒரு சிறந்த அமைப்பாகும். பல்லாக்கு, செல்வம் என சகலத்தையும் கொண்டு ஆரோக்கியமாக வாழ்வான்.

மேலும் படிக்க – விளக்கேற்றி வழிபடுவதால் கிடைக்கும் நன்மைகள்..!

சந்திரன் புதன் சுக்கிரன் அல்லது சனி

சந்திரன், புதன், சுக்கிரன் மற்றும் சூரியனுடன் சேர்ந்து அமையும் பொழுது அவன் தன் துணையுடன் அன்பாகவும், ஆரோக்கியமாகவும் வாழ்வான். இவர் ஆடல், பாடல் என தன் வாழ்க்கையை மகிழ்ச்சியாக கழிப்பார். இவர் வலிமையும், ஆரோக்யத்துடன் தன் வாழ்க்கையை கழிப்பார். அதேபோல் சுக்கிரனுக்கு பதிலாக சனி அமைந்திருந்தால் இவருக்கு சற்று சாதாரண வாழ்க்கை அமையும். இவர் அதிகமான மது பழக்கத்தை கொண்டிருப்பார். அதேபோல் நல்ல வசீகரமான தோற்றம், வலிமையும், பலமும் நிறைந்தவராக திகழ்வார். அதிக ஆடை, ஆபரணங்கள் மற்றும் பிறரால் வரவேற்கக்கூடிய நபராக இருப்பார்.

இதைத் தவிர்த்து சூரியனுடன் நான்கு கிரகங்களும் சேர்ந்து பிறப்பவர்களும் இருக்கிறார்கள். மூன்று கிரகங்கள் அமைவதினால் ஏற்படும் அதே பயன்களும் இதுபோன்ற நான்கு கிரகங்கள் ஏற்படுத்தினாலும் அமைகிறது. இதிலும் ஏற்றம் இறக்கம் மற்றும் சராசரி வாழ்க்கையின் பிறப்பவர்களுக்கு தீர்மானிக்கப்படுகிறது. எனவே உங்கள் வாழ்க்கை இது போன்ற கிரகங்களினால் தவறாக அமைந்திருந்தால் அதற்கேற்ப வழிபாட்டுத் தலங்களுக்கு சென்று பரிகாரங்களை செய்து உங்கள் வாழ்க்கையை மாற்றி அமைக்கலாம்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன