நான் என்னும் அகங்காரத்தை விடுவதினால் கிடைக்கும் நன்மைகள்..!

  • by
benefits of not having ego problems

வாழ்க்கையில் வெற்றி பெற வேண்டும் என்ற எண்ணம் இருப்பவர்களுக்கு தன்னம்பிக்கை அதிகமாக இருக்க வேண்டும். ஆனால் எப்போது இந்த தன்னம்பிக்கை எண்ணங்கள் அதிகளவில் செல்கிறதோ அது அகங்காரமாக மாறுவதற்கான வாய்ப்புகள் உள்ளது. எனவே உங்களுக்கு இருப்பது தன்னம்பிக்கையா அல்லது அகங்காரமா என்பதை ஆராய்ந்து பாருங்கள். இதன் மூலமாக நீங்கள் எடுக்கப்படும் முடிவுகள் மற்றும் உங்கள் வாழ்க்கையின் எதிர்காலம் அனைத்தும் தெளிவாகவும், முழுமையாகவும் இருக்கும்.

அகங்காரம்

ஒருசிலர் தாங்கள் செய்யும் அனைத்து செயலையும் நேர்மறையாக எடுத்துக்கொள்வார்கள். அதில் ஏதேனும் பிழைகள் இருந்தாலும் அதை ஏற்றுக்கொள்ளாமல் நான் செய்தது தான் சரி அதனால் எல்லோருக்கும் நன்மை கிடைக்கும் என்று தன்னைத்தானே புகழ்ந்து பாடுவது தான் இந்த அகங்காரம். மற்றவர்களின் பேச்சைக் கேட்காமல் மற்றவர்களின் அறிவுரையை மதிக்காமல் தனக்கு தோன்றியவற்றை செய்வார்கள். இதனால் அவர்களுக்கு மட்டும் பாதிப்பு ஏற்பட்டால் பரவாயில்லை, மற்றவர்களையும் பாதிக்கும்போது தான் அகங்காரம் குணம் பிரச்சனையாக மாறுகிறது. எனவே இதை குறைத்து எல்லோரின் மனநிலையை புரிந்து கொண்டு வாழ்பவர்களுக்கு கிடைக்கும் நன்மைகளை காணலாம்.

மேலும் படிக்க – கொரோனா வைரஸின் தாக்குதல் எப்போது முடிவுக்கு வரும்..!

அகங்காரம் இல்லா வாழ்க்கை

அகங்காரம் அதிகரிக்கும் மனிதர்கள் அதற்கு ஆட்டிட்யூட் என்ற பெயரை வைத்துக் கொள்கிறார்கள். இது போன்ற செயல்கள் உங்களுக்கு பெருமையை அளித்தாலும் உங்களை சுற்றி உள்ளவர்கள் உங்களை ஒரு கேலிப் பொருளாகவே பார்ப்பார்கள். ஆனால் உங்களுக்கு நெருக்கமாக இருப்பவர்கள் உங்களின் நிலையை புரிந்து கொண்டு உங்களுக்கு ஏற்றார் போல் வாழ்வார்கள். எனவே இதற்கு எதிர்மறையாக நீங்கள் உங்களை சுற்றி உள்ளவர்கள் உங்களைப் பற்றி என்ன நினைக்கிறார்கள் என்பதை யோசித்துப் பாருங்கள். இதுவரை உங்களால் அவர்களுக்கு என்னென்ன நன்மைகள் நடந்தது மற்றும் உங்களால் அவர்களின் வாழ்க்கை எந்த அளவுக்கு பாதிக்கும் என்பதை எண்ணுங்கள். இதைப் புரிந்து கொண்டாலே உங்கள் குணத்தை நீங்கள் முழுமையாக மாற்றிக் கொள்ளலாம்.

தன்னம்பிக்கை

தன்னம்பிக்கை உள்ளவர்கள் முடிந்தவரை மற்றவர்களின் வாழ்க்கையை உயர்த்த முயற்சி செய்வார்கள், யார் ஒருவருக்கு தன்னம்பிக்கை அதிகமாக இருக்கிறதோ அவர் தன்னைப் பற்றி அதிகமாக கவலைப்பட மாட்டார்கள் இதன் மூலமாக தன்னுடைய யோசனைகளை கொண்டு அவரை சுற்றி உள்ளவர்களை உயர்த்த முயற்சி செய்வார்கள். அதேபோல் தன்னம்பிக்கை உள்ளவர்கள் எல்லாம் மனிதர்களுக்கு ஆறுதல் வார்த்தைகள் மற்றும் நல்ல யோசனைகளை அளிப்பார்கள். எனவே நீங்கள் இதுபோன்ற செயல்களைச் செய்பவர்களாக இருந்தால் உண்மையில் உங்களுக்குள் இருப்பது தன்னம்பிக்கை தான் ஆனால் இதற்கு எதிராக செய்திருந்தால் உங்களுக்கு ஏதோ பிரச்சனை இருக்கிறது. அதை நீங்கள் நியாயப்படுத்துவதற்காக தன்னம்பிக்கை என்று உங்களுக்கு சொல்லி உங்களை நீங்களே ஏமாற்றிக் வருகிறீர்கள்.

பயனுள்ள மனிதன்

மண்ணில் பிறக்கும் ஒவ்வொரு மனிதர்களும் ஏதாவது ஒரு வகையில் மற்றவர்களுக்கு உதவியாக இருக்கவேண்டும். அதை தவிர்த்து உதவிகளை செய்வதை போல் நடித்து உங்களுக்கு என்ன ஆதாயம் இருக்கிறது என்பதே எண்ணுபவர்கள் மனிதர்களின் வாழ்க்கைக்கு எதிரானவர்கள். உங்கள் எண்ணங்கள் மற்றும் சிந்தனையை பொருத்துதான் நீங்கள் எந்த விதமான வாழ்க்கையை வாழ்கிறீர்கள் என்பதை கணிக்க முடியும். இதுவரை நீங்கள் யாருக்கும் எந்த கெடுதலும் செய்யாமல் வாழ்கிறீர்கள் என்று நினைத்தாள் அது உண்மையில் முட்டாள்தனமாகும், உங்களை அறியாமல் உங்களால் எங்கே ஒருவர் ஏதோ ஒரு பிரச்சினையில் சிக்கிக் கொள்கிறார். அவர் அழிவதற்கு நீங்களே காரணமாகிறீர்கள் எனவே இதை தொலைநோக்குப் பார்வையுடன் சிந்தித்து உங்களை சார்ந்தவர்களுக்கும் உங்களை சுற்றி உள்ளவர்களைப் பற்றி சிந்தித்து முடிவுகளை எடுங்கள்.

மேலும் படிக்க – கொரோனா வைரஸ் தொற்று நம்மைத் தாக்காமல் இருப்பதற்கு பயன்படுத்தப்படும் முகமூடியின் அவசியம்..!

அதிகளவில் உள்ள தன்னம்பிக்கை தலகனமாக மாறும். எனவே எந்த செயலாக இருந்தாலும் அதைக் கணக்கிட்டு அதற்கேற்றபடி செயல்படுங்கள். அதை தவிர்த்து என்னால் முடியும் என்ற அகங்காரத்துடன் ஏதேனும் ஒரு செயலில் ஈடுபட்டால் அது தோல்வியில் முடியும் தருவாயில் உங்களின் அகங்காரம் வெளிப்பட்டு அதை வென்றாக வேண்டும் என்ற எண்ணத்தில் மற்றவர்களை பற்றி நினைக்காமல் வெற்றிபெறும் முனைப்பில் நீங்கள் செயல்படுகிறீர்கள் எனவே இதைத் தவிர்த்து அகங்காரங்களை ஒழித்து மனிதனாக வாழுங்கள்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன