குப்பை இலைகளில் இருக்கும் நன்மைகள்..!

  • by
benefits of littering leaves

இலையுதிர் காலம் வந்துவிட்டாலே நம் தெருவோரங்களில் மற்றும் வீட்டு மொட்டை மாடியில் என எல்லா இடத்திலும் இந்த குப்பைகள் தேங்கிவிடும். இலையுதிர் காலத்தில் இலைகள் உதிர்ந்து மீண்டும் புது இலைகள் வருவதினால் பழைய இலைகள் அனைத்தும் உதிர்ந்து வறண்ட குப்பைகளாக மாறிவிடுகிறது. இதை சுத்தப்படுத்த முடியாமல் நாம் சில சமயங்களில் திணறி வருவோம். ஆனால் இயற்கை எல்லாவற்றுக்கும் ஒரு காரணத்தை வைத்துள்ளது. அதேபோல்தான் இந்த உதிர்ந்த குப்பை இலைகளில் நமக்கு சில நன்மைகளையும் தந்துள்ளது.

உணவாகும் குப்பைகளை

குப்பையிலே உணவாகும் என்றவுடன் அது மனிதர்களுக்கான உணவு என்று நினைக்கவேண்டாம். பூமியில் வாழும் புழுக்கள், பூச்சிகள் மற்றும் பட்டாம்பூச்சி போன்ற பூச்சி வகைகள் அனைத்திற்கும் இந்த குப்பை இலைகள் தான் உணவு. நாம் பலமுறை குப்பை இலைகளில் பூச்சிகள் மற்றும் புழுக்களைப் பார்த்திருப்போம். குப்பையினால் அந்தப் புழுக்கள் உருவாகவில்லை, அதை உணவாக சாப்பிடவே அந்தப் புழுக்கள் அங்கு வந்துள்ளது.

மேலும் படிக்க – மாசு நிறைந்த உலகில் உங்களை காத்துக்கொள்ள ஆயுத்தமாகுங்க.!

உங்கள் பூங்காவை அழகுபடுத்தும்

குப்பை இலைகள் அதிகமாக சேரும் பொழுது அதை வைத்து சிறுவர்கள் விளையாட தொடங்குவார்கள். ஒரு சிலர் அதை மெத்தைகள் போல் சேகரித்து அதில் குதித்து விளையாடுவார்கள். எனவே உங்கள் பூங்காக்களில் அல்லது தோட்டங்களில் இது போன்ற விளையாட்டு பாகங்களை குப்பைகளை மூலமாக உருவாக்கலாம்.

மண் ஆரோக்கியம்

குப்பையிலே இயற்கையாகவே உரமாக மாறும் தன்மையை கொண்டது. இதை அப்படியே விடும்பொழுது நாளடைவில் குப்பைகளை உதிர்ந்து மண்ணுடன் கலந்து விடுகிறது. இதனால் மண்ணின் ஆரோக்கியம் அதிகரித்து களிமண், செம்மண் என விதவிதமாக உருவாகிறது.

மேலும் படிக்க – திடகாத்திரமான வாழ்க்கைக்கு திராட்சை அவசியமுங்க..!

ஒரு சில தீங்கும் உள்ளது

மற்ற மரங்கள் இலைகள் ஆரோக்கியத்தை தந்தாலும் ஒருசில பழங்களை காய்க்கும் இலைகள் பங்கஸ், பாக்டீரியா போன்ற கிருமிகளை உண்டாக்கும். இதன் அருகில் விளையாடும் பொழுது அது மனிதர்களுக்கும் தொற்றிக்கொள்ளும். எனவே பழங்கள் கொண்ட இலைகளை நாம் எரிவதற்கு பயன்படுத்தலாம் எனவே எல்லாவற்றிற்கும் இந்த இலைகள் நமக்கு பயனை தருகிறது.

முடிந்தவரை எல்லாவற்றையும் மறுசுழற்சி செய்து வாழ்வதே சிறந்த வாழ்க்கையாக இருக்கும். அதை கருத்தில் கொண்டு உதிர்ந்த இலைகளையும் மறுசுழற்சி மூலமாக உரமாக மாற்றுங்கள்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன