விளக்கேற்றி வழிபடுவதால் கிடைக்கும் நன்மைகள்..!

  • by
benefits of lighting lamp and worshiping at home

இந்துக்கள் அக்னியை ஒரு கடவுளாக பார்க்கிறார்கள், எனவே ஒவ்வொரு முறையும் பூஜை செய்வதற்கு முன்பாக காமாட்சி விளக்கு, குத்துவிளக்கு மற்றும் கற்பூரத்திள் தீபத்தை ஏற்றி வழிபடுவார்கள். ஒரு சிலர்கள் தூபகலசம் மூலமாக கற்பூரத்தை ஏற்றி கடவுளுக்கு ஆரத்தி எடுப்பார்கள். அதேபோல் புதிதாக திருமணமானவர்கள் அல்லது பல நாட்களுக்குப் பிறகு வீட்டிற்குள் நுழைபவர்கள் என அனைவரின் திருஷ்டியை கழிபதற்கும் அக்னியை பயன்படுத்துவார்கள். இப்படி நெருப்பைக் கொண்டு இவர்கள் ஏற்றப்படும் விளக்கை வழிபாடுனால் இவர்களுக்கு என்னென்ன நன்மைகள் கிடைக்கிறது என்பதை காணலாம்.

மகாலட்சுமி

வீட்டில் உள்ள முதியவர்கள் எப்போதும் சொல்லும் வார்த்தையாக பார்க்கப்படுவது “வீட்டிற்கு விளக்கேற்ற மகாலட்சுமி தேவை” என்பதுதான். இதனாலேயே இந்து வழக்கப்படி திருமணம் செய்தவர்கள் வீட்டுக்கு வரும் புதுப்பெண்ணை மகாலட்சுமியாக பார்க்கிறார்கள், எனவே அவர்களைக் கொண்டு வீட்டில் உள்ள விளக்குகளை ஏற்றுவார். இதனால் வீடு முழுவதும் இருளிலிருந்து வெளிச்சத்திற்கு செல்லும் என்பது இவர்களின் நம்பிக்கை. ஒரு சிலர் சிறிய காமாட்சி விளக்கை ஏற்றுவார்கள், இல்லையெனில் வீட்டிலுள்ள குத்துவிளக்கை ஏற்றி வழிபடுவார்கள்.

மேலும் படிக்க – மகாபாரதம் – பகுதி 3 – பாண்டவர்கள்..!

குத்துவிளக்கு

குத்து விளக்கை கடவுளின் மறு உருவமாகவே அனைவரும் பார்க்கிறார்கள். இதன் அடிப் பகுதியை பிரம்மா என்றும், நடுப்பகுதியை வெங்கடேஸ்வரா என்றும், எண்ணெய்களை ஊற்றும் பகுதியை ருத்திரன் என்றும், மேலிருக்கும் நடுப்பகுதியை மகேஸ்வரர் என்றும், அதன் நுனிப்பகுதியை சதாசிவன் என்றும் மற்றும் அதில் ஊற்றப்படும் எண்ணெய் அல்லது நெய்யை நாதம் என்றும் பிரிக்கிறார்கள். இந்த விளக்கை துர்க்கை, சரஸ்வதி மற்றும் லட்சுமி என்றும் குறிப்பிடுவார்கள். எனவே நாம் இதில் தீயை விடும்போது இவர்கள் அனைவரின் சக்தியும் நமது வீட்டில் இறங்கி நமக்கு நேர்மறை சக்தியை அளிப்பதாக இந்துக்கள் நம்புகிறார்கள்.

ஐந்து முக விளக்கு

விளக்கில் உள்ள ஐந்து விதமான முகங்களை பெண்களில் 5 விதமான பண்பை குறிக்கிறார்கள். அன்பு, அறிவு, உறுதி, பொறுமை மற்றும் எச்சரிக்கை இந்த ஆற்றல் அனைத்தும் பெண்களுக்கு கிடைத்து, குடும்பத்தை நல்லபடியாக வழிநடத்துவார்கள் என்பதே புராணங்களில் இருக்கும் உண்மை. விளக்கில் ஊற்றப்படும் எண்ணெய்யை தான் அவர்களின் அறிவு என்பார்கள். எனவே அது எப்போதும் தீராதவாறு பெண்கள் பார்த்துக் கொள்ளவேண்டும். எனவே இதுபோன்ற விளக்குகளை ஏற்றி கடவுளுக்கு காண்பிக்கும் போது ஓம் என்ற வடிவில் விளக்கை சுற்ற வேண்டும்.

பின்பற்ற வேண்டியவை

விளக்கில் ஊற்றப்படும் எண்ணெயுடன் சிறிதளவு நெய்யை சேர்த்து தீபத்தை காட்டலாம். இந்த விளக்கு உங்களுக்கு நல்ல சக்தியை அளிக்கும், அதைத் தவிர்த்து வீட்டில் உள்ள அனைவருக்கும் நேர்மறை எண்ணங்களை உருவாக்க இந்த ஜோதி உதவும். உங்களுக்கு விளக்கை ஏறாவது பரிசாக அளித்தாள் அதை முழு மனதுடன் ஏற்றுக் கொள்ளுங்கள். விளக்கு அவ்வப்போது ஆடி அசைந்து எரிந்தால் அது நல்ல சகுனமாக பார்க்க வேண்டும். ஒவ்வொரு வெள்ளிக்கிழமையிலும் தேவி மாதாவிற்கு விளக்கு ஏற்றி வழிபடுவது சிறப்பாகும்.

மேலும் படிக்க – பீஜ மந்திரத்தால் நமக்கு கிடைக்கும் நன்மைகள்..!

கார்த்திகை தீபம்

தமிழர்கள் ஒவ்வொரு வருடமும் கார்த்திகை தீபத்தன்று விளக்கு ஏற்றுவதற்கு மற்றும் கடவுளை வழிபடுவதற்கு ஏராளமான காரணங்கள் இருக்கிறது. ஒவ்வொரு நாளும் ஏற்றப்படும் விளக்கின் மூலமாக தாங்கள் தங்கள் தெய்வத்தை பார்க்கிறார்கள். இதன்மூலமாக அவர்களைச் சுற்றியுள்ள இருள்கள் அனைத்தும் விலகி நேர்மறை எண்ணங்கள் ஒலிக்கவேண்டும் என்பதற்காக கார்த்திகை தீபம் கொண்டாடுகிறார்கள். இந்த மாதத்தில் வீட்டைச் சுற்றி விளக்கு வைப்பதன் மூலமாக உங்களுக்கு ஏராளமான நேர்மறை சக்திகள் கிடைக்கும்.

விளக்கில் அவ்வப்போது ஏதேனும் பூக்களையும் வைத்து வழிபாடு செய்யுங்கள். உங்கள் குடும்பம் எப்போதும் வளமாகவும், மகிழ்ச்சியாக இருப்பதற்கு விளக்கு ஏற்றியவுடன் முதலில் விநாயகரை வழிபடுதல் சிறந்தது. எனவே இந்துக்கள் இது போன்ற வழிகளை பின் தொடர்ந்து உங்கள் குடும்பத்தை எப்போதும் மகிழ்ச்சியாகவும் மற்றும் ஏராளமான நேர்மறை எண்ணங்களுடன் வைத்திருக்கலாம்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன