அழகை அதிகரிக்கும் கஸ்தூரி மஞ்சளின் பயன்கள்..!

Benefits of Kasthuri Manjal

கஸ்தூரி மஞ்சள், அதாவது காட்டு மஞ்சள் என்று அழைக்கப்படும் இது அதிகளவில் தெற்கு ஆசியாவில் கிடைக்கிறது. நாம் இன்று பயன்படுத்திவரும் ஏகப்பட்ட ஒப்பனை பொருட்களில் இந்த மஞ்சளைதான் பயன்படுத்துகிறார்கள். அத்தகைய மருத்துவ குணங்கள் கொண்ட இந்த கஸ்தூரி மஞ்சளை வைத்து நம் சரும பிரச்சனைகள் அனைத்தையும் தீர்க்க முடியும்.

அழகைத் தக்க வைக்கும் தன்மை

நாம் எப்போதும் அழகாக இருக்க விரும்புவோம், அதே போல் நமது சருமம் குழந்தையின் தருமத்தை போல் மிருதுவாகவும், மென்மையாகவும் இருக்க நாம் ஏகப்பட்ட செயல்களை செய்வோம். ஆனால் இதில் இருக்கும் மிகப்பெரிய பிரச்சனை என்னவென்றால் இது நிரந்தரமானது அல்ல, நாம் எப்போது பருவ நிலை மாற்றங்களில் பாதிப்படையும் போது நமது சருமமும் பாதிப்படைகிறது. சூரிய ஒளியின் தாக்கம், மாசு, அழுக்கு போன்ற பிரச்சினைகளினால் நமது சருமம் சீரழிந்து மீண்டும் நாம் முதலில் இருந்து சருமத்தை பராமரிக்க செய்யத் தூண்டுகிறது. இதை தடுப்பதற்கு நாம் கஸ்தூரி மஞ்சளைப் பயன்படுத்தலாம்.

மேலும் படிக்க – முகத்தில் உடனடி பொலிவை பெறுவதற்கு இதை செய்யுங்கள்.!

அழற்சியை அகற்றும் கஸ்தூரிமஞ்சள்

கஸ்தூரி மஞ்சளை பயன்படுத்துவதன் மூலம் நம் சருமத்தின் ஏற்பட்டிருக்கும் வீக்கம் அழற்சி போன்றவர்களை அழித்துவிடும். நமது சருமம் எந்த அளவிற்கு சுவாசிக்கிறதோ அந்த அளவிற்கு ஆரோக்கியமாக இருக்கும். எனவே கஸ்தூரி மஞ்சள் பயன்படுத்துவதன் மூலம் சருமத்தை புத்துணர்ச்சியாக வைத்து அதிக அளவில் சுவாசிக்க உதவுகிறது.

புற்று நோயை எதிர்க்கிறது

கஸ்தூரி மஞ்சளில் ஆண்டி நியூ பிளாஸ்டிக் தன்மை இருப்பதினால் உங்கள் சருமத்தில் ஏற்படும் சரும புற்றுநோய் செல்களை வளரவிடாமல் தடுக்கிறது. இது வெறும் சரும பிரச்சனை தீர்க்கும் பொருளாக மட்டுமல்லாமல் உங்கள் ஆரோக்கியத்தையும் பாதுகாக்கும் மருந்தாக இருக்கிறது.

மேலும் படிக்க – மகத்துவம் நிறைந்த மருத்துவ வெட்டி வேர்

பாதுகாப்பு படலம்

சரும பிரச்சனைகளை உண்டாக்கும் பாக்டீரியாக்களை அழித்து பாதுகாப்பு படலமாக செயல்படுகிறது இந்த கஸ்தூரி மஞ்சள். இதனால் முகத்தில் ஏற்படும் முகப்பரு, கட்டிகள், சரும பிரச்சனைகள், கரும்புள்ளிகள், கருவளையங்கள் போன்ற எல்லாவற்றையும் குணப்படுத்த உதவுவது இந்த கஸ்தூரி மஞ்சள்.

அதே போல் உங்கள் சருமத்தில் ஏதேனும் காயங்கள் ஏற்பட்டால் இதை தடவுவதன் மூலம் கிருமிகள் தொற்று பாதிப்புகள் ஏற்படாமல் இந்த மஞ்சள் உங்களை பாதுகாக்கும். அதே போல் காயங்களும் விரைவில் குணமடைய செய்ய உதவும்.

உணவிலும் கஸ்தூரிமஞ்சள்

கஸ்தூரி மஞ்சளை நாம் உணவில் பயன்படுத்தும் பொழுது ஆன்ட்டி ஆக்சன் அதிகரிக்கும், இவை தவிர்த்து நமது உடலில் இருக்கும் நச்சுதன்மை வெளியேற்றி நம் உடலை சுத்தமாக வைத்துக்கொள்ளும் அதை தவிர்த்து நமது ரத்தத்தையும் சுத்திகரிக்கிறது. எனவே இது போன்ற இயற்கைப் பொருள் நமக்கு கிடைத்த ஒரு வரப்பிரசாதம்.

மேலும் படிக்க – கண்னக்குளி அழகி காதல் மொழி பேசும் தீபீகா

சரும முடிகளை அகற்ற உதவும்

ஆண்களின் சருமங்களில் முடி வளர்ந்தால் அவர்களுக்கு அதைப் பற்றிய கவலை எதுவும் இருக்காது, அதுவே ஒரு பெண்ணுக்கு முகத்தில் முடி வளர்ந்தால் அதை நினைத்து கவலைப்பட தொடங்கி விடுவார்கள். எனவே இது போன்றவர்கள் கஸ்தூரி மஞ்சளுடன் பாலைக் கலந்து இரவு உறங்குவதற்கு முன்பு முகம் முழுக்க தடவ வேண்டும். பின்பு காலையில் எழுந்து கழுவுவதன் மூலம் அவர்கள் முகத்தில் இருக்கும் முடிகளின் வளர்ச்சி குறைந்து இருக்கும். இதையே தொடர்ந்து செய்வதன் மூலம் இவர்களில் சருமத்தில் இருக்கும் முடிகள் முழுமையாக உதிர்ந்து விடும். இதையே அவர்கள் கை கால்களுக்கும் பயன்படுத்தலாம்.

சூரிய ஒளி பாதிப்பை தடுப்பதற்கு

எப்போது வெளியே செல்வதாக இருந்தாலும் கஸ்தூரி மஞ்சளை கொண்டு சிறிது முகத்தை கழுவிவிட்டு செல்வது நல்லது. இதனால் சூரிய ஒளியால் ஏற்படும் பாதிப்புகள் குறையும். அதே போல் வறண்ட சருமம், எண்ணெய் சருமம் போன்றவர்கள் கஸ்தூரி மஞ்சளை தொடர்ந்து பயன்படுத்துவதன் மூலம் அவர்கள் சருமத்தில் ஏற்படும் பாதிப்புகள் குறையும்.

அழகு முதல் ஆரோக்கியம் வரை அனைத்திற்கும் தீர்வாக இருப்பது இந்த கஸ்தூரிமஞ்சள். எனவே இதை சரியாக பயன்படுத்தி உங்கள் சரும ஆரோக்கியம் மற்றும் உடல் ஆரோக்யத்தை அதிகாரிகள். இது எளிமையான முறையில் நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கிறது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன