இரும்பு சத்துனால் நமக்கு கிடைக்கும் நன்மைகள்.!

  • by
benefits of iron energy in human body

நமது உடல் ஆரோக்கியத்தை அதிகரிக்க உதவுவது இரும்பு சத்துதான். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை தங்கள் உடலில் அத்தியாவசியமாக இருக்க வேண்டிய சத்துக்களில் மிக முக்கியமானது இரும்புசத்து. இது நமது உடலில் இருக்கும் சிவப்பு ரத்த அணுக்களை அதிகரித்து உங்களை சுறுசுறுப்பாக, ஆற்றலுடன் வைக்க உதவுகிறது.

இரும்பு சத்து குறைபாடினால் ஏற்படும் பாதிப்புகள்

ஒருவருக்கு இரும்பு சத்து குறைவதினால் அவர்களின் ரத்தத்தில் இருக்கும் இமோகுளோபின் அளவு குறைகிறது. இதனால் ரத்தம் சுறுசுறுப்பற்று தொய்வு நிலைக்கு செல்கிறது. எனவே இருதயத்துடிப்பு பாதிப்படையும், உடலில் கொழுப்புகள் அதிகரிக்கும், சோர்வு நிலை உண்டாகும் அதைத் தவிர்த்து நாம் எந்த ஒரு செயலின் மீதும் கவனத்தை செலுத்த முடியாமல் சூழ்நிலையை உண்டாக்கும்.

மேலும் படிக்க – யாருக்கெல்லாம் சிறுநீரக புற்றுநோய் வருவதற்கான அபாயம் அதிகம் உள்ளது தெரியுமா?

ரத்தசோகையை தடுக்கிறது

இரும்புச்சத்து அதிகரிப்பதனால் உங்கள் உடலில் ஏற்படும் ரத்தசோகை பிரச்சனையை தடுக்கிறது. பொதுவாக ரத்த அளவு ஆண்களை விட பெண்களுக்கு பல சமயங்களில் குறைகிறது. திருமணம் ஆன பிறகும், கர்ப்ப காலத்திலும் பெண்களுக்கு ரத்த தேவைகள் அதிகரிப்பதனால் இரும்புச் சத்து உணவுகள் சிவப்பு அணுக்களை அதிகரிக்க உதவுகிறது. சில சமயங்களில் பெண்கள் ரத்த குறைபாடினால் உடல் நிலை பாதிப்படைந்து எப்போதும் சோர்வுடன் இருப்பார்கள் இதற்கு பெண்கள் ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவை அதிகரிப்பதற்கான இரும்பு சத்துக்கள் உள்ள உணவுகளை உட்கொள்ள வேண்டும்.

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்

இரும்புச் சத்துக்கள் இருக்கும் காய்கறிகள் மற்றும் பழங்களை அதிகமாக உட்கொள்வதால் நமது உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். இதனால் நோய்கள் தொற்று மற்றும் புதிதாக எந்த ஒரு நோயும் நம்மை பாதிக்காதவாறு பார்த்துக் கொள்ளும்.

மேலும் படிக்க – விரைவில் கர்ப்பமாக விரும்பும் பெண்கள் இந்த உடற்பயிற்சியை கண்டிப்பாக செய்யணுமாம்…!

அறிவாற்றல் அதிகரிக்கும்

இரும்புச்சத்து உங்களை எப்போதும் சுறுசுறுப்பாக வைத்துக் கொள்ளும். இதனால் உங்கள் கவனத்தை சிதறவிடாமல் எப்போதும் ஒரு நிலையான கவனம் கொண்டு இருக்கலாம். படிப்பவர்கள் அல்லது மிக கவனமாக வேலை செய்பவர்கள் இரும்பு சத்துகளை அதிகமாக உட்கொள்ள வேண்டும். இதன் மூலம் இவர்களின் நினைவாற்றல் அதிகரித்து இவர்களை எப்போதும் தலைமை பன்புடன் முதலிடத்தில் இருக்க உதவும்.

உடல் ஆற்றலை அதிகரிக்கும்

இரும்புச்சத்து உட்கொள்வதினால் உங்கள் உடலுக்குத் தேவையான ஆக்சிஜன் அளவை அதிகரிக்கும். இதனால் விளையாட்டுத் துறையில் இருப்பவர்கள் மற்றும் எந்நேரமும் ஓயாமல் உழைப்பவர்கள் இரும்பு சத்துகளை அதிகமாக உட்கொள்ள வேண்டும். இதனாலேயே அதிக அளவிலான விளையாட்டு வீரர்களுக்கு இரும்பு சத்துகள் அதிகமாக இருக்கும் உணவுகளை அளிப்பார்கள்.

மேலும் படிக்க – சீதாப்பழ கொட்டைகளுக்கு இருக்கும் குணங்கள்..!

ஆரோக்கியத்தை அதிகரிக்கும்

இரும்புச்சத்துக்கள் உங்கள் ஆரோக்கியத்தை அதிகரிப்பது மட்டுமல்லாமல் உங்கள் தசையையும் வலுப்படுத்தும். குழந்தைகளின் அத்தியாவசிய சக்தியான இரும்பு சத்துக்களை அவர்களுக்கு சிறு வயது முதல் தருவதன் மூலம் அவர்கள் எந்த ஒரு ஆரோக்கிய பிரச்சனையும் இல்லாமல் வலிமையாக வளர்வார்கள். இரும்பு சத்துக்கள் உள்ள உணவுகள், காய்கள், பழங்கள் மற்றும் உலர் பழங்களை அவர்களுக்கு அளித்து அவர்களின் ஆரோக்கியத்தை அதிகரியுங்கள்.

இரும்பு சத்துக்கள் உள்ள இயற்கை உணவுகளை அதிகமாக உட்கொள்ளுங்கள். அதை தவிர்த்து ஒரு சிலர் இரும்பு சத்துக்கள் கொண்ட மாத்திரைகள் மற்றும் பவுடர்களை எடுத்துக்கொள்கிறார்கள். இது உங்கள் உடலில் இரும்புச்சத்தை அதிகரித்தாலும் உங்களுக்கு வயிற்றுப்போக்கு மற்றும் உடல் உபாதைகளை உண்டாக்கும். எனவே இவைகளைத் தவிர்த்து ஆரோக்கியமான உணவுகளை உட்கொண்டு இரும்பு சக்தியை அதிகரியுங்கள்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன