சத்துமாவு சாப்பிடுவதனால் நமக்கு கிடைக்கும் நன்மைகள்..!

  • by
benefits of health mix powder

நம் பெரியவர்கள் காலை உணவாக காலங்காலமாகப் பயன்படுத்தி வந்தவையே சத்துமாவு. இதை சாப்பிட்டு வளர்ந்ததினால் அவர்களின் ஆயுள் மட்டுமல்லாமல் அவர்களின் உடல்நிலை பலமடங்கு ஆரோக்கியமாக இருந்தது. எனவே தானியங்களில் செய்யப்படும் இந்த சத்து மாவை நாம் தினமும் காலையில் சாப்பிட்டு வருவதினால் நமது கிடைக்கும் நன்மைகளை காணலாம்.

சத்துமாவில் இருக்கும் தானியங்கள்

சத்துமாவில் உடல் ஆரோக்கியத்தைத் தரும் தானியங்களை மட்டுமே அதிகமாக பயன்படுத்துகிறார்கள். இதில் பச்சை பருப்பு, கறுப்பு உளுந்து, அரிசி, மைசூர் பருப்பு, கோதுமை, எள்ளு, சோளம், பாதாம், ஏலக்காய், முந்திரி, போன்றவர்களை ஒன்றாக சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும். பின்பு தேவைப்படும்போது தண்ணீரைக் கொதிக்க வைத்து அதில் சிறிதளவு சத்து மாவை கலந்து நாட்டு சர்க்கரை அல்லது வெல்லத்தை கலந்து அருந்தலாம். இந்த தானியங்களில் நமக்குத் தேவையான அனைத்து ஊட்டச் சத்துக்கள், வைட்டமின்கள், பொட்டாசியம், பாஸ்பரஸ், நார்சத்து போன்றவர்கள் இருக்கிறது. எனவே ஒருவேளை சத்து மாவை நாம் சாப்பிடுவதன் மூலம் நமக்கு தேவையான அனைத்து சத்துக்களும் கிடைக்கும்.

மேலும் படிக்க – கரேனா வைரஸ் இந்தியவை அதிகமாக தாக்காமல் இருப்பதற்கு அரசாங்கம் செய்ய வேண்டியவை..!

உடல் எடை அதிகரிக்கும்

மெலிதாக இருப்பவர்கள் தங்களின் உடல் எடையை அதிகரிப்பதற்கு இந்த சத்து மாவை சாப்பிடலாம். இதில் இருக்கும் நல்ல கொழுப்புகள் உங்கள் உயரத்திற்கு தேவையான உடல் எடையை உயர்த்தும், அதைத் தவிர்த்து உடலில் அதிகமாக இருக்கும் கெட்ட கொழுப்புகளையும் குறைக்க உதவுகிறது. எனவே சத்துமாவு உண்பதினால் உடல் எடையை சமநிலையில் வைக்கலாம்.

செரிமானத்திற்கு நல்லது

ஒரு சிலர் மதிய வேளையிலும் சத்து மாவை உணவாக எடுத்துக் கொள்வார்கள். இதற்கு காரணம் அது மிக எளிதில் செரிமானமாகுவதுதான், நாம் மதிய நேரத்தில் எவ்வளவு சாப்பிட்டாலும் நமக்கு எந்த ஒரு அசௌகரியம் தராமல் நம்மை ஆரோக்கியமாக பார்த்துக்கொள்ளும். அதேபோல் இதை காலையில் சாப்பிடுவதன் மூலமாக நமக்கு இருக்கும் பல செரிமான பிரச்சனைகள், மலச்சிக்கல் மற்றும் வயிற்றுப்போக்கு போன்ற அனைத்தும் பிரச்சினைகளையும் குணப்படுத்தும்.

ஆற்றலை அதிகரிக்கும்

சத்து மாவை குழந்தைகள் சாப்பிடுவதினால் ஒரு நாளைக்கு தேவையான முழு ஆற்றலும் அவர்களுக்கு கிடைக்கிறது. இதன் மூலமாக எந்த நிலையிலும் சோர்வடையாமல் எல்லா சூழலிலும் மிகவும் துடிப்புடன் உங்கள் குழந்தைகள் இருப்பார்கள்.

முதியவர்களுக்கு சிறந்தது

வயது அதிகரிப்பதனால் முதியவர்கள் ஒருசில உணவுகளை தவிர்த்து வருவார்கள். ஆனால் அந்த வயதில் அவர்கள் எடுத்துக்கொள்ளும் எந்த உணவிலும் ருசி அதிக அளவில் இருக்காது, எனவே இவர்கள் சத்துமாவு சாப்பிட்டால் அதில் ருசியும் இருக்கும், அவர்கள் உடலுக்கு ஆரோக்கியம் மற்றும் தெம்பையும் அதிகளவு தரும். சத்துமாவு முதியவர்களுக்கும் ஒரு சிறந்த உணவாகும்.

மேலும் படிக்க – நம்மைச் சுற்றி உள்ள காற்றை சுத்தப்படுத்தும் வழிகள்..!

பக்கவிளைவுகள் இல்லாத உணவு

எந்த உணவை உண்டாலும் ஏதாவது ஒரு பக்க விளைவுகள் இருந்துகொண்டே இருக்கும், ஆனால் சத்துமாவில் மட்டும் எந்த பக்கவிளைவுகளும் இல்லை. இது 100% உங்கள் ஆரோக்கியத்திற்காக மட்டுமே பயன்படும்.

நம்முடைய குழந்தையின் வளர்ச்சிக்காகவும், நம்முடைய ஆரோக்கியத்திற்காகவும் சத்துக்கள் குறைவாக கலக்கப்பட்ட தேவையற்ற பொருட்களை நாம் கடைகளில் வாங்கி சாப்பிட்டு வருகிறோம். எனவே இதைத் தவிர்த்து வீட்டில் எளிமையாக கிடைக்கும் பொருட்களை வைத்து சத்து மாவை தயாரிக்கலாம். இல்லையெனில் கடைகளில் தயாரித்த சத்து மாவுகள் கிடைக்கிறது. அதனை வாங்கி உங்கள் ஆரோக்கியத்தை அதிகரிப்பதற்கு பயன்படுத்தலாம்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன