காலை உணவாக கிச்சடி சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்

important health benefits of eating kichadi for your breakfast

கிச்சடி என்றாலே முகம் சுளிக்கும் குழந்தைகள் மத்தியில் இது பெரியவர்கள் இடையே மிகவும் பிரபலமாகி வருகிறது இதற்கான காரணம் என்னவென்றால் இதில் அவ்வளவு மருத்துவ குணங்களை கொண்டுள்ளது இதில்  பொட்டாசியம், மெக்னீசியம், பாஸ்பரஸ், போலிக் ஆசிட், வைட்டமின் பி போன்ற சத்துக்கள் உள்ளது இதை நாம் ஏன் எடுத்துக் கொள்ள வேண்டும் என்பதை பார்ப்போம்

செரிமானத்திற்கு நல்லது

கிச்சடியை சாப்பிடுவதினால் நமக்கு ஏற்படும் செரிமான பிரச்சனைகளை மிக எளிமையான முறையில் தீர்ந்துவிடுகிறது இதில் சீரகம் சேர்ப்பதனால் நம் உடம்பிற்கு செரிமான சக்தியைத் தருகிறது இதனால் நம் உடல் பருமன் ஆகாமல் தடுப்பது மட்டுமில்லாமல் மிக ஆரோக்கியமாக இருக்கலாம்.

மேலும் படிக்க – உடல் ஆரோக்கியத்தை அதிகரிக்கும் வெள்ளரிக்காய்..!

நெஞ்சு எரிச்சலைத் தடுக்கும்

நாம் காரமான உணவு அல்லது அதிக வாயு உணவுகளை எடுத்துக் கொள்ளும்போது ஏற்படும் நெஞ்சு எரிச்சலை கிச்சடி சாப்பிடுவதன் மூலம் குணமடையும் இதை நாம் சமைப்பதற்கு மஞ்சள் பருப்புகள் மற்றும் நெய் போன்றவற்றை சேர்ப்பதில்லை நமக்கு ஏற்படும் நெஞ்சு எரிச்சலை இது குறைக்கிறது

சர்க்கரை அளவை குறைக்கிறது

நம் உடம்பில் ஏற்படும் சர்க்கரை அளவை இது குறைக்கிறது என்று ஒரு ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது இதிலிருக்கும் பருப்பு வகைகள் நம் உடம்பில் இருக்கும் சர்க்கரையை குறைத்து நம்மை ஆரோக்கியமாக வைத்துக் கொள்கிறது.

மேலும் படிக்க – முத்து பற்களை காக்க எளிய வழிகள் வேண்டுமா

இதயத்தை வலுப்படுத்துகிறது

கிச்சடி சாப்பிடுவதினால் நம் உடம்பில் இருக்கும் அழுத்தம் குறைந்து நம் இதயத்திற்கு செல்லும் ரத்தம் சீராக இருப்பதினால் நம் இதயம் ஆரோக்கியமாக இருக்க இந்த கிச்சடி உதவுகிறது

மென்மையான உணவு

முதியவர்கள் அல்லது யாராவது மருத்துவமனையில் சிகிச்சை எடுத்துக் கொண்டிருந்தால் கிச்சடியை கண்ணை மூடிக்கொண்டு சாப்பிடலாம் இது மிகவும் மென்மையாகவும் இது எளிமையாக செரிமானமாவதால் மருத்துவர்கள் கூட இதை சாப்பிடுவதற்கு பரிந்துரைக்கிறார்கள்.

மேலும் படிக்க – பெண்களுக்கு மட்டுமா? ஆண்களுக்கும் தான் !!

எனவே நம் உடல் ஆரோக்கியத்தை கருத்தில் கொண்டு இந்த கிச்சடியை முடிந்தவரை தினமும் காலை உணவாக பயன்படுத்த வேண்டும் இதை உங்கள் குழந்தைகளுக்கு பிடித்தவாறு தேவைப்பட்ட மசாலாக்களை கலந்து அவர்களுக்கு பரிமாறினால் அவர்கள் நிச்சயம் இதை சாப்பிடுவார்கள் அப்படி இல்லை என்றால் இதற்கு பக்கத்தில் கொஞ்சம் தயிர் ஊற்றி கொடுத்தீர்கள் என்றால் அவர்கள் விரும்பி சாப்பிடுவார்கள்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன