கோமதி சக்கரத்தின் சிறப்புகள்

  • by

உலகில் ஏராளமான அதிசயங்கள் நடந்து வருகின்றன, தவிர்த்து உலகத்திற்கு வெளியில் இருக்கும் அண்டத்தில் சூரியன், சந்திரன் என ஏராளமான கோள்கள் மற்றும் நட்சத்திரங்கள் இருக்கின்றன. இதைப் பற்றிய தெளிவான அறிவு இன்றுவரை பலருக்கும் கிடையாது. என்னதான் ஆராய்ச்சியாளர்கள் இதை பற்றி ஆய்வுகளை அறிந்து வந்தாலும் இவர்களுக்கு தோராயமான தகவல்களே கிடைக்கின்றன. இத்தகைய விஞ்ஞான வளர்ச்சியிலும் இது போன்ற நிலை என்றால் பழங்கால மக்கள் ஒரு சிலவற்றை சரியாக கணக்கிட்டு பல கோவில்களில் கல்வெட்டாக பதித்து வைத்திருக்கிறார்கள்.

இதுபோல் தான் குஜராத் மாநிலத்தில் துவாரகா நதிக்கு அடியில் ஏகப்பட்ட கோமதி சக்கரங்கள் கிடைக்கப்பெற்றுள்ளது. ஆனால் இன்று வரை இதைப் பற்றிய தெளிவு மற்றும் அறிவு தென்னிந்தியர்களுக்கு இல்லை ஏனென்றால் இதில் இருக்கும் பயன்களை அறிந்த அவர்கள் இதைப் பற்றிய தெளிவை மற்ற நகரங்களுக்கு தெரியாமல் பார்த்துக் கொண்டார்கள். ஆனால் நாளடைவில் இது பற்றி எல்லோருக்கும் தெரிய வந்துள்ளது.

ராமர், ஆஞ்சநேயர் மூலமாக சீதாதேவிக்கு அடையாளம் காண்பிப்பதற்காக ரகுவம்ச கலையாய் கொடுத்தார். ஆனால் இதில் கோமதி சக்கரம் பதித்துள்ளார்கள் என்று புராணங்களில் குறிப்பிட்டுள்ளார்கள்.

மேலும் படிக்க – கிருஷ்ணன் பிறப்பதற்கான காரணம் என்ன..!

கோமதி சக்கரம் வழிபாடு

கோமதி சக்கரத்தை வழங்குவதன் மூலம் அயோத்தி, மதுரா, ஹரித்வார், காசி, காஞ்சிபுரம், அவந்திகா மற்றும் துவாரகை என முக்தி தரும் ஏழு தளங்களையும் வணங்கிய பலன் கிடைக்கும். லக்னோவில் பெருமானின் சக்கரயூகம் உருண்டோடி முனிவர்களுக்கு தவம் செய்யும் இடத்தை காண்பித்தது. அப்போது இந்த சக்கரயூகம் நீரில் பட்டு தெறித்து சிறுதுளிகளாக கோமதி சக்கரமாக மாறியது. இது துவாரகா நதியில் விழுந்ததால் இதை துவாரகா சக்கரமும் என்று அழைக்கிறார்கள்.

எல்லா சுப காரியங்களுக்கும் நாம் பிள்ளையார் சுழி போடுவது வழக்கமாக இருக்கிறது. ஆனால் உண்மையில் பிள்ளையார் சூழி பார்ப்பதற்கு கோமதி சக்கரம் போல் இருக்கும் எனவே பிள்ளையார் சுழிக்கு இன்னொரு பெயர் கோமதி திருவலஞ்சுழி எனப்படும். இதன் உட்பொருள் சுபம் மற்றும் லாபம் என்பதாகும்.

கோமதி சக்கரத்தின் சிறப்புகள் என்னவென்றால் வலப்புற சூழி உடைய கோமதி சக்கரத்தை பாகுபாடில்லாமல் எல்லோரும் வணங்கலாம்.

கோமதி சக்கரத்தை பூஜைகளில் வைக்கும் போது நிமிர்ந்து நிலையில் வைக்க வேண்டும். அதுவும் சூழி மேல் நோக்கியவாறு இருக்க வேண்டும். பிறகு அதன் மேல் சிவப்பு பட்டுத் துணியைப் போர்த்தி வெள்ளி அல்லது செம்பு தட்டில் வைக்க வேண்டும்.

வில்வ இலை காய்ந்து போனாலும் அதன் பலன்கள் குறைந்தது ஆறு மாதங்கள் வரை நமக்குத் தரும். ஆனால், கோமதி சக்கரமானது அதன் பலனை வாழ்நாள் முழுக்க நமக்கு தருகிறது. வடமாநிலங்களில் நாம் ஏதாவது ஒரு பெரியவர்களிடம் ஆசீர்வாதம் பெறும் போது அவர்கள் கோமதி சக்கரத்தைக் கொண்டு தான் நமக்கு ஆசிர்வாதம் செய்வார்கள்.

கோமதி சக்கரத்தின் விலைக்கு வாங்குவதற்கு பதிலாக ஏதாவது பெரியவர்கள் அல்லது அன்பளிப்பாக பெற்றால் தான் அதிக பலன் கிடைக்கும். அப்படியே நீங்கள் விலைக்கு வாங்குவதாக இருந்தால் அதற்கான நல்ல நாட்கள் பார்த்து வாங்குவது நல்லது.

மேலும் படிக்க – இரவில் திறக்கப்படும் கோவில்…எங்கு தெரியுமா?

கோமதி சக்கரத்தை மோதிரமாக செய்து அணிந்தால் சர்ப்ப தோஷமும் நீங்கும். அதேபோல் உங்களுக்கு இருக்கும் அனைத்துப் பிரச்சினைகளையும் இந்த கோமதி மோதிரம் அணிவதன் மூலம் தீர்க்க முடியும். கேதுவின் தசை அமைப்பு ஜாதகத்தில் மூலமாக பாதிப்புக்களை தரும். இதனாலும் நாம் வைடூரியம் கல் மற்றும் கோமதி சக்கரத்தை பூஜையில் வைத்து வழிபடுவதன் மூலம் உங்களுக்கு நன்மைகள் கிடைக்கும்.

இத்தகைய சிறப்பு வாய்ந்த கோமதி சக்கரத்தின் மதிப்பை இனிமேலாவது அறிந்து அதன் பயன்களைப் பெற்று உங்கள் வாழ்க்கையில் மகிழ்ச்சியை அதிகரியுங்கள்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன