அரசாங்கம் சொல்வதைக் கேட்பதினால் கிடைக்கும் நன்மைகள்..!

  • by
benefits of following government rules

கொரோனா வைரஸ் தொற்று இந்தியா முழுவதும் பரவாமல் இருப்பதற்கு நமது அரசாங்கம் அனைவரும் வீட்டில் இருக்கும்படி கேட்டுக் கொண்டது. இதைத் தொடர்ந்து தமிழ்நாடு முழுவதும் 144 சட்டத்தை கொண்டு வந்தார்கள். இதன் மூலமாக எல்லோரும் அவரவர் இருக்கும் இடத்தில் அடுத்த 20 நாட்கள் இருக்க வேண்டும் என்று மத்திய அரசு நமக்கு கட்டளையிட்டது. இதை மீறுபவர்களுக்கு 6 மாதம் சிறை தண்டனை மற்றும் ஆயிரம் ரூபாய் அபராதம் என்றும் கூறியிருக்கிறது.

அரசாங்கம் சொல்வது என்ன

அரசாங்கம் சொல்வது என்னவென்றால் அடுத்த மூன்று வாரத்திற்கு யாரும் வெளியே வரக்கூடாது, இதற்கு காரணம் கொரோனா வைரஸ் தொற்று ஒவ்வொரு வாரமும் அதிகரிக்க வாய்ப்புள்ளது. இதே போல்தான் இந்த தொற்றுகள் அதிகளவில் பரவியுள்ள நாடுகளிலும் நடந்தது. எனவே இதை இந்திய நாடு கருத்தில் கொண்டு அடுத்த மூன்று வாரங்கள் யாரும் வெளிவரக் கூடாது என்ற தடையை விதித்தது. ஆனால் ஒரு சிலர் இதை விடுமுறை என்று நினைத்துக் கொண்டு தங்கள் ஊருக்கு செல்கிறார்கள்.

மேலும் படிக்க – மஞ்சள், உப்பு, வேப்பிலை கொண்டு உங்கள் வீட்டைச் சுற்றி உள்ள கிருமிகளை அழிக்கலாம்..!

மக்களின் முட்டாள்தனம்

கொரோனா வைரஸ் பாதிப்பு முழுமையாகத் தெரியாத மக்கள் தங்கள் ஊருக்கு செல்ல வேண்டும் என்று மக்கள் அதிக அளவில் இருக்கும் இடங்களுக்கு சென்று தங்கள் உயிரைப் பணயம் வைத்து பயணம் செய்கிறார்கள். இதன் மூலமாக கொரோனா நோய் தொற்று மிக எளிதில் ஒருவரிடமிருந்து மற்றவர்களுக்கு பரவும். எனவே உங்கள் கிராமத்திலும் கொரோனா உருவாக வேண்டும் என்ற எண்ணம் உங்களுக்கு இருந்தால் இது போன்ற செயலில் ஈடுபடுங்கள்.

கூட்டங்களை குறையுங்கள்

கொரோனா வைரஸ் பாதிப்பினால் மக்கள் தங்களின் அத்தியாவசிய உணவுகளுக்கு தீண்டக்கூடாது என்பதற்காக ஒரு சில கடைகள் மற்றும் ஒரு சில மணி நேரம் மட்டும் கடைகள் திறந்திருக்கும். எனவே இது போன்ற கடைகளில் 4 முதல் 5 பேர் மட்டுமே பொருட்களை வாங்க வேண்டும். இதற்கு காரணம் கூட்டம் அதிகமானால் கொரோனா தொற்று எளிதில் மற்றவர்களுக்கு பரவும். ஆனால் இதைப் பயன்படுத்தி ஒரு சிலர்கள் நண்பர்களுடன் மற்றும் உறவினர்களுடன் கூட்டமாக சென்று தங்களுக்குத் தேவையான பொருட்களை வாங்குகிறார்கள். எனவே இதையும் தடுத்து குடும்பத்தின் மேல் அக்கறை உள்ள மனிதர்கள் பொறுப்புடன் வீடு திரும்புவார்கள்.

எல்லோரும் ஒத்துழையுங்கள்

ஆளும் கட்சி, எதிர்க்கட்சி என்ற பிரிவினைகள் எதுவும் இல்லாமல் அரசாங்கம் சொல்வதைக் கேட்டு அனைவரும் ஒத்துழைக்க வேண்டும். எனவே தேவையற்ற காரணங்களைக் கொண்டு வீட்டை விட்டு வெளியே வருவதை தவிர்க்க வேண்டும். அடுத்த 20 நாட்கள் வீட்டில் இருந்து உங்கள் குடும்பத்தை பாதுகாத்திடுங்கள். உலகம் முழுக்க கொரோனா வைரஸினால் உயிரிழப்புகள் அதிகரித்து கொண்டு இருக்கிறது. எனவே இதை எளிதில் எடுத்துக் கொள்ளாமல் வருமுன் காப்பதே நன்று.

மேலும் படிக்க – சென்னை 31ஆம் தேதிவரை அடைக்கப்பட்டுள்ளது..!

பொழுதுபோக்குகள்

ஒரு சில முட்டாள் மனிதர்கள் தங்களுக்கு பொழுது போகவில்லை என்று வெளியே வருவார்கள், டிக் டாக் போடுவார்கள் மற்றும் செல்பிகளை எடுப்பார்கள். இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவோரின் கவனத்திற்கு, நீங்கள் உங்கள் சமூக வலைத்தள புகழுக்காக இது போன்ற செயலில் ஈடுபட்டால் உங்களுக்கு ஓர் ஆண்டு வரை சிறை தண்டனை, அதைத்தொடர்ந்து உங்களுக்கு உடனடியாக காவல் துறையின் மூலமாக சிறப்பு கவனிப்பும் கிடைக்கும்.

விளையாட்டுத் தனத்தை துறந்து பொறுப்புடன், பொறுமையாக அனைவரும் உங்கள் வீட்டில் இருக்க வேண்டும். உங்களுக்கு தேவையான உணவுகள் மற்றும் அத்தியாவசிய தேவைகள் அனைத்தும் அரசாங்கம் ஏற்பாடு செய்யும். அத்தியாவசிய பொருட்களை வாங்க கூட்டமாக வெளியே செல்லாமல் குடும்பத்தில் யாராவது ஒருவர் மட்டும் அந்த பொருட்களை வாங்குவதே புத்திசாலித்தனம்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன