அன்னதானம் செய்வதால் கிடைக்கும் அற்புத பலன்கள்..!

  • by
benefits of feeding food to others

நீங்கள் ஒருவருக்கு பொன், பொருட்கள், பணம், இடம் என எது கொடுத்தாலும் அவர்கள் போதும் என்று சொல்லமாட்டார்கள். அதுவே நீங்கள் அவர்களுக்கு உணவளித்து பாருங்கள், வயிறு நிறைந்த பிறகு போதும் என்ற வார்த்தை அவர்களிடம் இருந்து வரும். மற்ற எதுவாக இருந்தாலும் இன்னும் கொஞ்சம் இருந்தால் நல்லா இருக்கும் என்று சொல்பவர்கள் கூட, உணவு என்று வரும்பொழுது உங்கள் வயிறு நிறைந்தவுடன் போதும் என்று சொல்வார்கள். எனவே உணவை நாம் தனமாக செய்வதன் மூலம் பலன் அதிகரிக்கும். அன்னதானம் புண்ணியம் என்பது கொடுப்பவர்களுக்கும், வாங்குபவர்களுக்கும் என இருவருக்கும் கிடைக்கிறது.

பசியைப் போக்கும் அன்னதானம்

புண்ணியத்தை சேர்க்க வேண்டுமென்றால் அதற்கு நாம் தானம் செய்ய வேண்டும். கண் தானம், ரத்த தானம், உடல் உறுப்பு தானம், செல்வதான மற்றும் அன்னதானம் என எல்லாமே சிறப்பு மிக்கதாக கருதப்படுகிறது. ஆனால் நமக்கு இருக்க வேண்டிய மிக முக்கியமான தானம், நிதானம். அதை பொருத்துதான் ஒருவர் வாழ்க்கையில் எந்த நிலைக்குச் செல்கிறார் என்பதை அறிகிறார்கள்.

பிறரின் பசியை போக்கும் அன்னதானம் மிகச் சிறப்புடையது ஏனென்றால் நமது அத்தியாவசிய வாழ்க்கை வாழ்வதற்கு தேவையானது உணவு. அந்த உணவு பிறர்க்கு இலவசமாக கொடுக்கும் போது அதில் இருக்கும் மன நிறைவு கணக்கிட முடியாதது. எனவே மற்றவர்களின் பசியை போக்க அன்னதானம் செய்வதே சிறந்தது.

மேலும் படிக்க – பிரம்ம முகூர்த்தத்தில் எழுவதால் கிடைக்கும் நன்மைகள்..!

அன்ன தானம் செய்பவர்கள்

ஒரு சிலர் தங்கள் வேண்டுதல் நிறைவேற வேண்டும் என்பதற்காக அன்னதானம் செய்வார்கள். அதுவே மற்றவர்கள் எந்த ஒரு எதிர்பார்ப்பும் இல்லாமல் பிறர் பசி போக்குவதற்காக அன்னதானம் செய்வார்கள். இவர்களில் இருவருக்குள் புண்ணியம் என்பது யாருக்கு அதிகமாக வந்தடையும், யார் அதிகமான பயன் பெறுகிறார்களா, அவர்களுக்கு கிடைக்கும். அதாவது நாம் அன்னதானம் அளிக்கும் பொழுது பசியால் வாடும் ஏழை எளிய மக்கள் பயன் பெற்றால் அவர்களின் ஆண்மாக்களில் இருந்து நமக்கு ஆசிர்வாதங்கள் கிடைக்கும். இதுவே அவர்களின் தானத்தை சிறப்புடையதாக மாற்றுகிறது. மூன்றாவதாக பாவங்களைச் செய்தபின் புண்ணியங்களை பெறுவதற்காக அன்னதானம் செய்வார்கள். எல்லாவற்றுக்கும் மன்னிப்பு என்ற ஒன்று இருக்கிறது, எனவே அன்னதானம் செய்வதன் மூலமாக நீங்கள் செய்த அனைத்து பாவங்களையும் அழித்து உங்கள் புண்ணிய கணக்கை அதிகரிக்கலாம்.

அன்னதானத்திற்கு சிறந்த ஊர்

கடலூர் மாவட்டத்திலுள்ள, வடலூர் கிராமத்தில் 1867 ஆம் ஆண்டு முதல் அணையாத தீ எரிந்து வருகிறது. அந்தத் தீயில்தான் அன்னதானம் செய்ய விரும்பவர்கள் சமைப்பார்கள். அதேபோல் அங்கிருக்கும் அறக்கட்டளையும் அந்த தீ அணையாமல் தினமும்அன்னதானம் சமைத்து அங்கு இருக்கும் ஏழை எளிய மக்களுக்கு தானமாக செய்து வருகிறார்கள். 

மேலும் படிக்க – அமாவாசை-யில் உண்டு அற்புத குணம்..!

யாத்திரைக்கு செல்பவர்களுக்கு அன்னதானம்

தைப்பூச விழாவின் போது பழனிக்கு செல்பவர்களுக்கு செல்லும் வழியெல்லாம் பொதுமக்கள் நீர் மற்றும் சிற்றுண்டிகளை வழங்கி வருகிறார்கள், இதுவும் ஒருவகையான அன்னதானமே. அதுமட்டுமல்லாமல் திருப்பதிக்கு மற்றும் பல கோவில்களுக்கு பாதையாத்திரை செல்பவர்களுக்கு ஏதேனும் உணவுகளை வழங்குவதன் மூலமாக நம் மன நிறைவடையும், அவர்களுக்கு உதவியாக இருக்கும்.

பொருளாதாரம் வீழ்ச்சி அடையும் சமயத்தில் கோவிலுக்கு செல்பவர்கள் அதிகமான பணங்கள் கொண்டவர்களாக இருக்க மாட்டார்கள். எனவே இதுபோன்ற ஏழை பக்தர்களுக்கு உதவும் வகையில் அன்னதானம் செய்வது சிறந்ததாகும்.

எப்போதெல்லாம் அன்னதானம் செய்யலாம்

அன்னதானம் செய்வதற்கு நேரம், காலம் எதுவும் தேவையில்லை. இருந்தாலும் வாரம் ஒரு முறை அல்லது மாதம் ஒரு முறை அன்னதானம் செய்வதன் மூலமாக நல்ல பலன் கிடைக்கும். அதை தவிர்த்து பிறந்தநாள் கொண்டாட்டங்கள், திருமண நாள் என சுபகாரிய சமயங்களில் அன்னதானம் செய்வது சிறப்பாகும்.

திருமணம் நடக்கும் சமயங்களில் உறவினர்களுக்கு பந்தி பரிமாறும்பொழுது ஒரு சில எளிய மக்கள் உணவுக்காக வருவார்கள். அவர்ளிடையே எந்த ஒரு கேள்வியும் இல்லாமல் உணவு பரிமாறுவதன் மூலமாக நம் புண்ணியங்களும் அதிகரிக்கும். அதேபோல் பசி என்று வருபவர்களுக்கு உணவு இல்லை என்று சொல்லாமல், நம்மால் முடிந்த உணவை தானமாக தருவதன் மூலம் அவர்களின் பசியும் ஆறும் உங்கள் மனமும் நிறைவடையும்.

மேலும் படிக்க – ஹோரை தெரிந்து செயல்படுவோருக்கு வெற்றி நிச்சயம்!

விலங்குகளுக்கான தானம்

அன்ன தானம் என்பது மனிதர்களுக்கு மட்டும் தருவதல்ல, நம்மை சுற்றியிருக்கும் உயிரினங்களுக்கும் கொடுக்கக்கூடியது. எனவே மீன்களுக்கு பொறி போடும் பொழுது, மாடுகளுக்கு கீரை, பழம், வைக்கோல் போன்றவைகளில் கொடுக்கும் பொழுது, யானைக்கு கரும்பு கொடுக்கும் பொழுது, என எந்த வாயில்லா பிராணிகளுக்கு உண்ண உணவு கொடுத்தாலும் அதுவும் அன்னதான வகையிலேயே சேரும்.

எனவே மன நிறைவாக வாழ வேண்டும் என்றால் மற்றவர்களின் மனதை நிறைவு செய்வதே உண்மையான மன நிறைவு. இதை கருத்தில் கொண்டு உங்களால் முடிந்த உதவிகளை இல்லாதவர்களுக்கு செய்யுங்கள். அதை உணவாக செய்வதன் மூலம் அவர்களின் அன்றாட பசியை தீர்க்கும். இதற்கு உங்களுக்கு கடவுள் நம்பிக்கை இருக்க வேண்டிய அவசியமில்லை, நம்பிக்கை உள்ளவர்கள் கடவுளின் பெயரால் அன்னதானம் செய்யலாம், இல்லாதவர்கள் அன்பின் பெயரால் செய்யலாம்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன