குடும்பச் சந்திப்பினால் ஏற்படும் நன்மைகள்…!!!

  • by
benefits of family get together

ஒவ்வொரு குடும்பங்களிலும் வருடத்திற்கு ஒருமுறை தனிமையான சந்திப்புகளை ஏற்பாடு செய்வது மிக அவசியமான ஒன்று. ஏனென்றால் நாம் அனைவரும் தனித்தனி குடும்பமாக வாழ்ந்து வருகிறோம். இதனால் குடும்பத்தில் இருக்கும் அழகும் மற்றும் மகிழ்ச்சியையும் நாம் வளர்க்கும் பிள்ளைகள் அறிவதில்லை. இதைக் கருத்தில் கொண்டு வருடத்திற்கு ஒருமுறை சொந்தங்கள் அனைவரும் ஒன்றாக சேர்ந்து ஏதாவது ஒரு விருந்து ஏற்பாடு செய்யும்போது நன்மை தீமை மற்றும் உறவுகளில் இருக்கும் சந்தோஷங்கள் பாதுகாப்பு மற்றும் ஒற்றுமைகள் என எல்லாவற்றையும் நம்மால் அறிய முடியும். இதனால் நமக்கு ஏற்படும் நன்மைகளும் கிடைக்கும் அதை ஒவ்வொன்றாக இங்கே காணலாம்.

ஒற்றுமையான வாழ்க்கை

நம்முடைய உறவினர்கள் மற்றும் அண்ணன், தங்கைகள் திருமணம் ஆனபிறகு வெவ்வேறு இடங்களில் வாழ்கிறார்கள். இவர்கள் அனைவரையும் ஒன்றாக நாம் காண்பது என்பது அரிதாகவே இருக்கிறது. ஏதாவது ஒரு குடும்ப திருமணம் அல்லது கொண்டாட்டங்களில் ஒரு சில மணி நேரங்களில் அவர்களை பார்த்து ரம் நேரங்களை செலவு செய்கிறோம் இதை தவிர்த்து வருடத்திற்கு ஒருமுறை இவர்களுடன் நாட்களை முழுமையாக கழியுங்கள், இதனால் உறவுகள், அன்பு, பாசம் என எல்லாவற்றையும் நாம் மற்றும் நம்முடைய வாரிசுகள் அறிவார்கள்.

மேலும் படிக்க – அளவற்ற காதல் புரிதல் காதலை எல்லையற்றதாக்கும்

கலாச்சாரம் அறிவோம்

மற்ற நாடுகளை ஒப்பிடுகையில் தமிழர்கள் மற்றும் இந்தியர்களின் உறவுமுறையில் ஏராளமான உறவுகள் இருக்கின்றன. அதில் ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு தனித்தனி பெயர்களும் இருக்கிறது. இதை நாம் நம்முடைய குழந்தைகளுக்கு சொல்வதைக் காட்டிலும் அவர்களுடன் பழகும் அனுபவத்தை உண்டாக்குவது சிறந்ததாகும். இதனால் அத்தை, மாமா, அண்ணன், அண்ணி, சித்தப்பா, சித்தி, பெரியப்பா, பெரியம்மா, தாத்தா, பாட்டி என எல்லோரின் இணைப்பை நன்கு அறிந்து நமது கலாச்சாரத்தை அழகூட்டுங்கள்.

பாதுகாப்பு அதிகரிக்கும்

நம் தனியாக வாழும் நிலையில் ஒரு பிரச்சனை ஏற்படும் பொழுது நம்முடைய நண்பர்கள் மட்டுமே உதவிக்கு வருவார்கள். அவர்களை தவிர்த்து நமக்கு உதவி புரிந்தவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். எனவே இதுபோன்ற குடும்ப சந்திப்புகள் ஏற்படுத்தும் வகையில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு நிலையில் இருப்பார்கள். எனவே இவர்களினால் நமக்கு உதவிகள் எளிதில் கிடைக்கும். இதன் மூலமாக நாம் மற்றும் நம்முடைய குழந்தைகள் எப்போதும் பாதுகாப்பாக இருப்பார்கள்.

மேலும் படிக்க – உங்கள் கணவரை கவர்வது எப்படி?

குடும்ப ஒற்றுமையின் அருமையை அறிந்து அதற்கேற்ப ஒன்றாக இணைந்து வாழ முயற்சி செய்யுங்கள். இல்லையெனில் வருடத்திற்கு ஒருமுறையாவது குடும்ப சந்திப்புகளை ஏற்பாடு செய்ய வேண்டும். இதன் மூலமாக உறவுகள் வலுவடைந்து உங்கள் வாழ்க்கை அழகாகும்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன