தினமும் செவ்வாழை சாப்பிடுவதால் நமக்கு கிடைக்கும் நன்மைகள்.!

  • by
benefits of eating red banana regularly

தினமும் எப்படியே நாம் உணவை அருந்துகிறோமோ அதேபோல்தான் வாழைப்பழத்தையும் தினமும் நாம் சாப்பிட்டு வருகிறோம். இது மிக மலிவான விலையில் எல்லா இடங்களிலும், எல்லாக் காலங்களிலும் கிடைப்பதனால் இதை நாம் தினமும் உணவுகளில் சேர்த்து வருகிறோம். இதில் இருக்கும் சத்துக்கள் அதிகளவில் நமது உடல் ஆற்றலை அதிகரிக்க உதவுகிறது. வாழைப்பழத்தின் குடும்பத்தை சேர்ந்த செவ்வாழையிலும் ஏகப்பட்ட மருத்துவ குணங்கள் உள்ளன. அவைகள் என்னவென்று காணலாம்.

செவ்வாழையில் இருக்கும் சக்திகள்

செவ்வாழையில் பீட்டாகரோட்டின் மற்றும் வைட்டமின் சி அதிகமாக உள்ளது. பீட்டா கரோட்டின் சக்தி என்பது உடலுக்கு தினமும் தேவையான ஒன்றாகும். எனவே செவ்வாழையில் இது அதிக அளவில் கிடைக்கிறது. இதை தவிர்த்து இந்த சக்தியை எப்போது நம் உடலுக்குச் செல்கிறது அப்போதிலிருந்து வைட்டமின் ஏ வாக மாறி நமது கண்கள் மற்றும் சருமத்தை வலுவாக்குகிறது. இதைத் தவிர்த்து புற்றுநோய், நீரிழிவு நோய் மற்றும் இதய ஆரோக்கியம் என எல்லாவற்றுக்கும் உதவுகிறது.

மேலும் படிக்க – கொழுப்பை குறைக்கும் கொய்யா நற்பலன் பாருங்க!

சிறுநீரக மற்றும் எலும்பு ஆரோக்கியம்

செவ்வாழையில் இருக்கும் பொட்டாசியம் நம்முடைய சிறுநீரகத்தில் கற்கள் உண்டாகாமல் பார்த்துக் கொள்கிறது. அதே சமயத்தில் கற்கள் உண்டானால் அதை குறைக்கவும் உதவுகிறது. இதில் இருக்கும் சக்திகள் நமது எலும்புகளை வலுப்படுத்துகிறது. மற்றும் பற்களின் ஆரோக்கியத்திற்கும் உதவுகிறது.

உடல் எடையை குறைக்க உதவும்

தினமும் நம்ம வாழைப்பழத்தை சாப்பிடுவதன் மூலம் நமது உடல் எடையை குறைக்க முடியும். மற்ற உணவுகளை ஒப்பிடுகையில் இதில் கலோரிகள் மிகக் குறைவாக உள்ளது. அதை தவிர்த்து இதை ஒருமுறை உண்ட பிறகு நீண்ட நேரம் உங்களுக்கு பசி உணர்வை ஏற்படுத்தாது. இதனால் நீங்கள் குறைந்த உணவுகளை உண்டு எப்போதும் ஆரோக்கியமாக இருக்க முடியும்.

மேலும் படிக்க – காலையில் சாப்பிடுவதற்கு ஏற்ற சிறந்த உணவுகள்..!

ஹீமோகுளோபின்

நமது ரத்தத்தின் ஆற்றலுக்குத் தேவையான ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்க செவ்வாழை உதவுகிறது. ஹீமோகுளோபின் அளவு குறைபாட்டினால் ரத்த சோகை, உடல் சோர்வு, ஆர்வமின்மை போன்ற பல பிரச்சினைகள் உண்டாகும். எனவே தினமும் சாப்பிடும் போது உங்களை எப்போதும் ஆற்றலாகவும், சுறுசுறுப்பாகவும் வைத்துக் கொள்ளும்.

செரிமான பிரச்சனை

ஒருசிலர் அதிக காரம் அல்லது அதிகமான உணவுகளை அருந்தி விடுவார்கள். எனவே இது போன்ற சூழல்களில் அவர்களுக்கு நெஞ்செரிச்சல் மற்றும் செரிமான பிரச்சனைகள் ஏற்படும். இதை செவ்வாழையை சாப்பிடுவதன் மூலம் தடுக்க முடியும். அதேபோல் செவ்வாயையும் உணவையும் ஒன்றாக கலந்து எடுக்கக்கூடாது இது உங்கள் செரிமானத்தை பாதிக்கச் செய்யும்.

மேலும் படிக்க – உளுந்து சாப்பிட்டால் ஊரை வெல்லும் பலசாலியாகலாம்

பழக்கடைகளில் செவ்வாழைபழம் ஏன் இருக்கிறது என்றுகூட பலரும் அறிந்திருக்க மாட்டார்கள். எனவே இப்போதிலிருந்து செவ்வாழைப் பழத்தை தினமும் உங்கள் உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள். அது உங்கள் உடல் எடை மற்றும் ஆரோக்கியத்தை சமநிலையில் வைக்கும்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன