புரோட்டின் உணவுகளின் அவசியம்..!

  • by
benefits of eating protein rich foods

குழந்தைகள் வளர்ச்சிக்கு நம் அளிக்கக்கூடிய மிக முக்கியமான உணவுப்பொருட்களில் புரதமும் ஒன்று. ஒரு கலேரியில் கிட்டத்தட்ட 4 கிராம் வரை புரதம் இருக்க வேண்டும். இதை தவிர்த்து உங்கள் உடலுக்கு தேவையான கலோரிகளில் 15 லிருந்து 30% வரை புரதம் இருக்கும். இதன் மூலமாக உங்கள் இருதயம் மற்றும் மூளையின் செயல்பாடு அதிகரிக்கும், இதை தவிர்த்து தோல், முடி என அனைத்தையும் உறுதியாக்கி உங்கள் அழகு மற்றும் ஆரோக்கியத்தை அதிகரிக்கும்.

புரதத்தின் பயன்

புரோட்டின் சத்தில் கிட்டத்தட்ட இரண்டு வகையான அமினோ அமிலங்கள் இருக்கிறது. முதல்வகை அத்தியாவசிய அமினோ அமிலங்கள், இதை நாம் உடலால் தாக்க முடியாது, ஆனால் இதை உணவு ஆதாரங்களின் மூலமாக எடுத்துக் கொள்ளலாம். இரண்டாம் வகை அத்தியாவசியம் இல்லாத அமினோ அமிலங்கள், இவற்றை உணவில் இருந்து உடலால் தொகுக்க முடியும். நாம் எடுத்துக்கொள்ளும் 20 அமினோ அமிலங்களில் 9தான் அத்தியாவசியமாக அமைகிறது. மற்றும் இது நாம் எடுத்துக் கொள்ளும் உணவின் மூலமாக நமக்கு கிடைக்கும். புரதத்தின் பயன் நம்முடைய அனைத்து விதமான பருவத்திற்கும் தேவைப்படுகிறது. குழந்தைப்பருவம், இளமைப்பருவம், முதுமை பெருகும் என எல்லாவற்றிற்கும் முதுகெலும்பாக இருப்பது புரதச்சத்து. இது புது உயிரணுக்களை உண்டாக்கி பழுது நீக்கமும் செய்கிறது.

மேலும் படிக்க – ஆரோக்கியத்தை அதிகப்படுத்த சுக்கு அவசியம்

புரோட்டீன் உணவுகள்

புரோட்டீன் சத்துக்கள் சைவ உணவை விட அசைவ உணவில் அதிகமாக இருக்கிறது. முட்டை, தோல் அகற்றப்பட்ட கோழி இறைச்சி, பன்றி இறைச்சி, சால்மன் மற்றும் டூனா மீன்கள், சிற்பி மீன்கள், மாட்டிறைச்சி போன்ற அசைவ உணவுகளில் புரதத்தின் எண்ணிக்கை அதிகமாக இருக்கிறது. அதேபோல் இதை சிறிதளவு சாப்பிடும்பொழுது நமக்கு ஏராளமான புரதச்சத்து கிடைக்கிறது. சைவ உணவில் பால் மற்றும் பால் பொருட்கள் அனைத்திலும் புரதம் இருக்கிறது. இதை தவிர்த்து பாதாம், சூரியகாந்தி விதை, வேர்கடலை, கொண்டைக்கடலை, அக்ரூட், கருப்பு பீன்ஸ், கிட்னி பீன்ஸ், காராமணி மற்றும் பருப்பு வகைகளில் புரோட்டீன் இருக்கிறது.

குழந்தை வளர்ச்சி

குழந்தைகளின் வளர்ச்சிக்கு மிக முக்கியமான உணவு புரதம், இதை ஆரம்ப காலத்தில் குழந்தைகளுக்கு அளிப்பதன் மூலமாக அவர்களின் எலும்புகள் வலுவடைந்து தசைகள் வளர்ச்சி அடைய உதவுகிறது. உங்கள் குழந்தைக்கு ஆரோக்கியமான மற்றும் வலுவான அடித்தளத்தை அமைப்பதற்கு நீங்கள் புரதச்சத்து உணவை அதிகமாகக் கொடுக்க வேண்டும். புரதப் பற்றாக்குறை ஏற்படும் குழந்தைகளின் வாழ்க்கை மோசமாக அமைகிறது, எனவே இதை கருத்தில் கொண்டு உங்கள் குழந்தைகளுக்கு புரதச் சத்து உள்ள உணவுகளை அளியுங்கள். குழந்தைகளுக்கு உண்டாகும் இரத்த சோகை பிரச்சினை மற்றும் தொற்றுகளால் ஏற்படும் பிரச்சினை அனைத்தையும் தடுத்து ஆரோக்கியத்தை அளிக்கிறது. ஆறு வயது முதல் குழந்தைகளுக்கு தேவையான புரதச் சத்தை கொடுத்தால் மட்டுமே குழந்தைகளின் எதிர்காலம் வலுவாக இருக்கும்.

இதயம் மற்றும் மூளை

மூளைக்குத் தேவையான அனைத்து அத்தியாவசிய சத்துக்களை புரோட்டின் அளிக்கிறது. இதனால் உங்கள் மூளை, கல்லீரல், இருதயம் போன்ற அனைத்து உறுப்புகளும் சீராக செயல்படுகிறது. ஒவ்வொரு வயதினருக்கு ஏற்றார்போல் புரதச் சத்து தேவைப்படுகிறது, அதற்கேற்ப அளிப்பதன் மூலமாக உங்கள் மூளையின் செயல்பாடு அதிகரிக்கும். புரதம் உங்கள் உடல் எடையை குறைப்பதற்கு உதவுவது மட்டுமல்லாமல் இருதயத்தின் ஆரோக்கியத்தை அதிகரிக்கிறது. சுமார் 8 ஆயிரம் பெண்களை வைத்து நடத்தப்பட்ட ஆய்வில் புரதச்சத்து உணவு எடுத்துக் கொள்ளும் பெண்களுக்கு இதய பிரச்சனை குறைந்துள்ளது. இதில் கார்போஹைட்ரேட் தவிர்த்து புரதம் உணவை மட்டும் எடுத்துக் கொண்ட பெண்களின் இதயம் 30% சீராக செயல்பட்டுள்ளது. இதில் அதிக அளவிலான அசைவ உணவுகளை இவர்கள் உட் கொண்டார்கள். இதுதான் இதயத்திற்கும் நல்லது, இது உங்கள் ரத்த அழுத்தத்தையும் சீராக வைத்துக் கொள்ள உதவுகிறது.

மேலும் படிக்க – ஊரடங்குக்குப்பின் இயற்கையோடு இணைந்த வாழ்வு

தோல் மற்றும் முடி

புரதத்தில் இருக்கும் ஊட்டச்சத்துகள் உங்கள் தோலின் வயதை குறைக்கிறது. இளமையில் ஏற்படும் சரும பிரச்சனைகள், வறட்சி மற்றும் வயதான தோற்றம் போன்ற அனைத்தையும் தடுக்கும் சக்தி புரதத்திற்கு உண்டு. நம் பயன்படுத்தப்படும் சரும கிரீம்களில் புரதச்சத்து நிச்சயம் நிறைந்திருக்கும், இதன் மூலமாக உங்கள் சருமத்திற்கு தேவையான ஈரப்பதத்தை பெறலாம். அதேபோல் கூந்தலை வலுவாக்கவும் மற்றும் நகங்களின் ஆரோக்கியம் அதிகரிக்கவும் புரதச் சத்து தேவைப்படுகிறது. நம் கூந்தல் வளர்ச்சியை அதிகரிக்கும் கரோட்டின் கிட்டத்தட்ட 99% வரை இருக்க வேண்டும். இது குறையும் போது தான் நம்முடைய கூந்தலின் ஆரோக்கியம் சீர்குலைகிறது. இதை அதிகரித்து நம் கூந்தலை பாதுகாக்க புரதம் உதவுகிறது. முடி கொட்டுதல் மற்றும் முடி மென்மையாதல் போன்ற பிரச்சனையை தடுக்கும் சக்தி புரதம் உணவு உண்டு.

எனவே தம்மை அழகாகவும், ஆரோக்கியமாகவும் வைத்துக்கொள்ள புரதம் தேவைப்படுகிறது. இதை அறிந்து போதுமான அளவு புரதச்சத்து உணவை எடுத்துக் கொள்ள வேண்டும். அதேபோல் இதை அதிகமாக எடுத்துக்கொண்டால் ஒரு சில பக்க விளைவுகளும் ஏற்படும், எனவே மருத்துவரின் ஆலோசனைப்படி குழந்தைகளுக்கு புரத உணவை அளியுங்கள். சைவம் மற்றும் அசைவ உணவில் சரிசமமான புரதம் இருக்கிறது, ஆனால் உடனடியான ஆற்றல் பெறுவதற்காக விளையாட்டு வீரர்கள் மற்றும் உடற்பயிற்சி செய்பவர்கள் அசைவத்தை உட்கொள்கிறார்கள். உங்களுக்கு எந்த வகையான புரதம் தேவைப்படுகிறதோ அந்த உணவை தேர்ந்தெடுத்து ஆரோக்கியமாக வாழுங்கள்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன