தினமும் சுண்டல் சாப்பிடுவதினால் நமக்கு இவ்வளவு நன்மைகள் கிடைக்கிறது..!

  • by
Benefits Of Eating Chana

சுண்டல் என்றாலே நம் மனதில் முதலில் தோன்றுவது கோவில்களில் நமக்கு அளிக்கப்படும் பிரசாதம்தான். அதை தவிர்த்து உடற்பயிற்சிகள் மற்றும் உடல் வலிமை பெறுவதற்காக சுண்டலை இரவு முழுவதும் ஊறவைத்து அப்படியே சாப்பிட்டப் பழக்கங்களை கொண்டிருப்போம். சுண்டலை மலிவான பாதாம் என்றே சொல்லலாம் ஆனால் இதன் விலை மலிவாக இருந்தாலும் இதில் இருக்கும் மருத்துவ குணங்கள் அனைத்தும் பாதாமிற்க்கு இணையானது.

உடல் எடையை குறைக்க உதவும்

பைபர் உணவுகளை உட்கொள்வதால் நமது உடல் எடை அதிகமாக குறையும். உடல் எடை அதிகமாக உள்ளவர்கள் தினமும் சுண்டல் சாப்பிட்டால் அதில் இருக்கும் கரையக்கூடிய மற்றும் கரையாத ஃபைபர் உங்கள் உடலுக்கு வலு சேர்க்கும். கரையக்கூடிய ஃபைபர் உங்கள் உடலில் இருக்கும் கழிவுகளை அகற்றும், கரையாத ஃபைபர் மலச்சிக்கல் போன்ற பிரச்சினைகளை விளக்கும். சுண்டலை ஊற வைத்து சாப்பிடுவதினால் உங்களுக்கு பசி உணர்வு எளிதில் எடுக்காது. எனவே நாம் அதிகமான உணவை உட்கொள்ளாமல் நமது உடல் பருமனை தடுக்கலாம்.

மேலும் படிக்க – உடல் மற்றும் சரும ஆரோக்கியத்திற்கும் ரோஜா இதழின் சாறு..!

இருதயத்தை பாதுகாக்கும்

சுண்டலில் ஆன்டிஆக்சிடன்ட்கள், ஆந்தோசயனின், டெலிபிண்டின், சியானிடின் மற்றும் பைடோநியூட்ரியன்ட் போன்ற பல சத்துக்கள் நிறைந்துள்ளது. இதனால் உங்கள் உடலில் இருக்கும் இரத்தத்தின் நச்சுகளை அகற்றி, இரத்தத்தை சுத்தப்படுத்துகிறது. எனவே இதில் கொழுப்புகள் எதுவும் அண்டாமல் உங்கள் இருதயம் ஆரோக்கியம் அடைகிறது. இதை தவிர்த்து இதில் மெக்னிசியம், போலட் மற்றும் கனிம சத்து உள்ளது இதனால் தமனிகள் வீக்கம், மார்பு வலி மற்றும் பக்கவாதம் போன்ற பிரச்சனைகளை வரவிடாமல் தடுக்கிறது.

நோய் எதிர்ப்பு சக்தி

சுண்டலில் ஆன்டி-ஆக்ஸிடன்ட் அதிகமாக இருக்கிறது. இதனால் உங்கள் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது. எனவே உங்கள் உடலில் எந்த ஒரு நோயும் அண்டாமல் பாதுகாக்கும் வேலையை செய்கிறது.

சக்கரை வியாதிக்கு தீர்வு

தினமும் சிரிய கப் சுண்டல் சாப்பிடுவதன் மூலமாக உங்கள் உடலில் இருக்கும் ரத்தத்தில் சர்க்கரையைக் குறைக்கும். இதில் இருக்கும் பைபர் உங்கள் ரத்தத்தில் உள்ள சர்க்கரையை குறைப்பது மட்டுமல்லாமல் மீண்டும் அதிகரிக்காமல் பார்த்துக் கொள்கிறது. இதனால் ஒரே வாரத்தில் நீங்கள் பழைய நிலைமைக்கு திரும்பலாம்.

மேலும் படிக்க – பாசிப்பருப்பு என்கிற பச்சை பருப்பில் இருக்கும் மருத்துவ குணங்கள்.!

இரத்த சோகையை போக்கும்

இரும்பு சத்து குறைபாடினால் ஏற்படும் பிரச்சனைதான் ரத்த சோகை. சுண்டலில் இரும்புச்சத்து போதுமான அளவு இருப்பதினால் உங்கள் ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவை அதிகரித்து, இரத்த சோகை பிரச்சனையை தவிர்க்கிறது. கர்ப்பிணிப் பெண்கள் சுண்டல் சாப்பிடுவதன் மூலம் வயிற்றில் இருக்கும் குழந்தைக்கும் மற்றும் தாயுக்கும் இரும்பு சத்து சென்றடைகிறது.

புற்றுநோயை தடுக்கும்

சுண்டல் நம்முடைய பெருங்குடல் அடையும் பொழுது அங்குள்ள பாக்டீரியாக்களினால் நல்ல கொழுப்பாக மாற்றப்படுகிறது. இந்த கொழுப்பு அமிலங்கள் பெருங்குடல் ஆரோக்கியத்தை அதிகரித்து புற்று நோய் உண்டாக்கும் செல்களை அழிக்கிறது.

பெண்கள் ஆரோக்கியம்

பெண்களுக்கு ஏற்படும் மார்பக புற்றுநோயை தடுக்கிறது, மாதவிடாய் சமயங்களில் அவர்களுக்கு ஏற்படும் வலியை குறைக்கிறது. சுண்டல் உடன் நாட்டு சர்க்கரை மற்றும் நெய் கலந்து சாப்பிட்டால் பல பிரச்சனைகளில் இருந்து நம்மை பாதுகாக்கும்.

சிறுநீரக கோளாறு மற்றும் மஞ்சள் காமாலை

சுண்டலை இரவில் தண்ணீரில் ஊற வைத்து அடுத்த நாள் காலையில் சாப்பிடுவதன் மூலம் உங்களுக்கு ஏற்படும் சிறுநீரக கோளாறுகள் அனைத்தும் விலகும். மஞ்சள் காமாலை உள்ளவர்கள் சுண்டலில் வெல்லம் சேர்த்து தாகம் எடுக்கும் போதெல்லாம் அதை சாப்பிட வேண்டும். இதனால் அவர்களுக்கு குமட்டல் வாந்தி மற்றும் மஞ்சள் காமாலை நோயின் தாக்கம் குறையும்.

மேலும் படிக்க – தினமும் உணவில் மீன் சேர்த்துக் கொள்வதால் கிடைக்கும் நன்மைகள்..!

சருமம் மற்றும் கூந்தல் பாதுகாப்பு

சுண்டலை ஊற வைத்து பிறகு அதன் தோலை உரித்து மாவு போல் செய்து கொள்ள வேண்டும். பிறகு அதை உங்கள் சருமத்தில் தேய்ப்பதன் மூலமாக உங்கள் சருமம் பொலிவுடன் அழகாக இருக்கும். அதேபோல் சுண்டலில் இருக்கும் வைட்டமின் பி 6 மற்றும் ஜிங்க் உங்கள் உணவில் சேர்ப்பதன் மூலமாக உங்கள் கூந்தல் வலுவடைந்து கருமையாக வளரும்.

எனவே எண்ணிலடங்காத மருத்துவ குணங்களை கொண்ட சுண்டலை தினமும் காலை உணவாக எடுத்து கொள்வது சிறந்ததாக இருக்கும்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன