பந்தலிலே பாகற்காய் படையலாய் செய்தால் கிடைக்கும் நன்மைகள்..!

benefits of eating bitter gourd

பாகற்காய் என்றவுடன் நம் மனதில் தோன்றும் முதல் உணர்வு கசப்புதான். இதன் கசப்புத்தன்மையினாக் இதை பலரும் வெறுத்து வருகிறார்கள். ஆனால் உண்மையில் இதில் மற்ற ருசியான காய்களை விட ஏராளமான மருத்துவ குணங்களை கொண்டுள்ளது.

பாகற்காயை உணவில் சேர்க்காமல் இதன் ருசிக்காக தவிர்த்து வருபவர்கள் முட்டாள்கள் என்று கூறுகிறார்கள். இதில் இருக்கும் ஏராளமான சத்துக்கள் உங்கள் உடலில் ஏற்படும் பல நோய்களில் இருந்து உங்களை காப்பாற்றுகிறது.

மேலும் படிக்க – உங்க குழந்தைங்க அதிகமாக ஸ்மார்ட் போன் பயன்ப்படுத்திகிறார்களா?

வைட்டமின்கள் நிறைந்த பாகற்காய்

பாகற்காயில் வைட்டமின்ட, ஏ பி, சி, மக்னீசியம், பொட்டாசியம், இரும்புச்சத்து, பீட்டா கரோட்டின் போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளது. இதை நாம் உணவில் கூட்டு, பொரியல், குழம்பு, வறுவல், ஊறுகாய் என வெவ்வேறு விதமாக பயன்படுத்தலாம்.

இதை ருசியாக உண்பதற்கு பாகற்காயை எண்ணெயில் பொரித்து சாப்பிடுகிறார்கள். ஆனால் இப்படி சாப்பிடுவதன் மூலம் இதன் கசப்புத் தன்மை குறைவதைப்போல் இதன் ஆரோக்கிய பயன்களும் குறைகிறது.

மேலும் படிக்க – மனக்கும் மல்லிகையில் மகத்தான மருத்துவகுணம்

சுவாசப் பிரச்சனைக்கு தீர்வாக இருக்கும் பாகற்காய்

உங்களுக்கு மூக்கடைப்பு ஆஸ்துமா என சுவாசத்தினால் ஏற்படும் பிரச்சினைகள் அனைத்தையும் பாகற்காயை உண்பதினால் தீர்க்கமுடியும். அதுமட்டுமல்லாமல் இது உங்கள் கல்லீரலை வலுவாக்கும். எனவே தினமும் ஒரு டம்ளர் பாகற்காய் சாறினை குடித்து வந்தால் உங்கள் உடல் ஆரோக்கியமாக இருக்கும்.

நோய் எதிர்ப்பு சக்தி

பாகற்காயில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாக இருப்பதினால் இது உங்கள் உடலில் ஏற்படும் பல வியாதிகளை தடுக்கிறது. அதுமட்டுமல்லாமல் புற்று நோய் உண்டாக்கும் செல்களை அழித்து உங்களை புற்றுநோய் பாதிப்பிலிருந்து காப்பாற்றுகிறது.

இரண்டாம் நிலை நீரிழிவு நோய் உள்ளவர்கள் பாகற்காயை உட்கொள்வதினால் இது இன்சுலின் போல் சென்று உங்கள் உடலில் இருக்கும் சர்க்கரையின் அளவை குறைக்கிறது. எனவே மருத்துவமனை, மருந்தகம், மருத்துவர் இல்லாமல் பாகற்காய் மூலமாக உங்கள் ஆரோக்கியத்தை அதிகரிக்க முடியும்.

மேலும் படிக்க – காலிபிளவர் கணக்கில் அடங்கா சத்துகொண்ட சைவக்காய்

சிறுநீரக தொற்று

பாகற்காய் உங்களுக்கு ஏற்படும் தொற்று வியாதிகள் இருந்து பாதுகாக்கிறது. செரிமான கோளாறினால் ஏற்படும் பிரச்சனைகள், மலச்சிக்கல், வயிற்றுப் போக்கு போன்ற அனைத்திற்கும் தீர்வாக இருக்கிறது. உங்கள் சிறுநீரகத்தில் உள்ள கற்களை அகற்றி சிறுநீரக பிரச்சனைகள் இல்லாமல் பார்த்துக் கொள்கிறது.

கொழுப்பை கட்டுப்படுத்தும்

பாகற்காயில் எந்த ஒரு தீங்கான கொழுப்பு சக்திகளும் கிடையாது. இதனால் உங்கள் உடல் எடையைக் குறைக்க அதிக அளவில் செயல்படுகிறது. அது மட்டுமல்லாமல் உங்கள் ரத்தத்தில் இருக்கும் கொழுப்புகளை குறைத்து இருதயப் பிரச்சினை ஏதும் வராமல் பார்த்துக் கொள்கிறது. எனவே பாகற்காய் உங்கள் உடலில் இருக்கும் பல பாகங்களுக்கு தீர்க்கதரிசியாக இருக்கிறது.

ருசி அதிகமாக இருக்கும் உணவுகள் என்றுமே உங்கள் ஆரோக்கியத்தை சீரழிக்கும், எனவே கசப்புத்தன்மை இருக்கிறது என்ற ஒரே காரணத்திற்காக பாகற்காயின் மருத்துவ குணங்களைத் தவிர்ப்பதை தவிர்த்து, அதன் முழு ஆரோக்கியத்தை அதை உணவில் சேர்ப்பதன் மூலம் பெறுங்கள்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன