தினமும் பால் குடிப்பதால் ஏற்படும் நன்மைகள்..!

  • by
benefits of drinking milk everyday

சிறுவயதில் நமது ஆரோக்கியம் அதிகரிப்பதற்காக நமக்குக் காலையும், இரவும் பால் குடிக்கும் பழக்கத்தை உண்டாக்கினார்கள். இதில் இருக்கும் மருத்துவ குணங்கள் அறியாமல் அவ்வயதில் பால் குடித்ததினாள்தான் இன்றும் நமது எலும்புகள் மற்றும் பற்கள் வலுவாகியிருக்கிறது. உலகம் முழுக்க பாலை அதிகமாக உற்பத்தி செய்யும் நாடுகளில் பின்லாந்து முதலிடத்தில் இருக்கிறது. அந்தப் பட்டியலில் இந்தியா 99வது இடத்தில் இருந்தாலும் ஒவ்வொரு குடும்பத்திலும் தினமும் பால் பொருட்களை அதிகமாக பயன்படுத்தும் வருகிறார்கள். இதை உடனடி பசியை போக்குவதற்காக பயன்படுத்திவரும் நாம் இதில் இருக்கும் இதர ஆரோக்கிய செயல்பாடுகளை இங்கே காணலாம்.

மாதவிடாய் பிரச்சனை

பெண்களுக்கு ஒவ்வொரு மாதமும் மாதவிடாய் சரியான நேரத்தில் துவங்கி, ஒன்று முதல் ஐந்து நாட்களில் நிறைவடைந்து விடும். ஆனால் ஒரு சிலருக்கு மாதவிடாய் தாமதமாகும் அல்லது ரத்தப்போக்கு அதிகரிக்கும் இது போன்றவர்கள் தினமும் பால் குடித்து வந்தால் மாதவிடாய்க் காலங்களில் ஏற்படும் பிரச்சனைகள் அனைத்தும் தீரும்.

மேலும் படிக்க – இஞ்சியில் இவ்வளவு விஷயங்கள் இருக்கிறதா???

இருதயம் மற்றும் புற்றுநோய்

பால் நாம் தினமும் சாப்பிடுவதால் நமக்கு ஏற்படும் இரத்தக் கொதிப்பு குறையும். அதைத் தவிர்த்து இதயநோய், புற்றுநோய் மற்றும் நீரிழிவு நோய் உள்ளவர்கள் தினமும் பாலைக் குடிக்கலாம். இதன் மூலமாக அவர்களுக்கு எந்த கெடுதலும் இல்லை.

நரம்பு மண்டலம்

பாலில் இருக்கும் வைட்டமின் பி சத்து உங்கள் நரம்பு மண்டலத்தை வலுவாக்குகிறது. இதை காலையில் சாப்பிடுவதன் மூலம் நமது பசி உணர்வை கட்டுப்படுத்துகிறது. இதனால் கூடுதலான உணவை எடுத்துக் கொள்ளாமல் நம்மை ஆரோக்கியமாக பார்த்துக் கொள்கிறது.

தூக்கத்தை உண்டாக்கும்

பாலில் இருக்கும் பொட்டாசியம் உங்கள் ரத்த அழுத்தத்தை சீராக்கும். தினமும் இரவில் பாலில் சிறிது தேன் கலந்து குடித்தால் நல்ல தூக்கம் வரும். சிறுநீரகத்தில் கற்கள் உள்ளவர்களும் இதை குடிக்கலாம். இதனால் அவர்களுக்கு நல்ல மாற்றம் உண்டாக்கும்.

மேலும் படிக்க – கொள்ளு பயிறை உணவில் சேர்ப்பதனால் நமக்குக் கிடைக்கும் நன்மைகள்.!

பாலில் இருக்கும் தீங்குகள்

பாலை அதிகமாக குடிப்பதினால் அதில் இருக்கும் கொழுப்பு தன்மை நமது உடலில் சில பாதிப்புகளை உண்டாக்கும் என பலரும் பயந்து வருகிறார்கள். ஆனால் பாலை நாம் குறைந்த அளவு எடுத்துக் கொள்ளும்போது நமக்கு எந்த ஒரு பாதிப்பும் ஏற்படாது. பாலைக் காய்ச்சி குடிப்பதன் மூலமாக உங்களுக்கு ஏற்படும் அஜீரணக் கோளாறு மற்றும் மலச்சிக்கலை போக்கும். பெண்கள் தங்கள் உடல் பருமன் பிரச்சனைக்கு பால்தான் காரணம் என்று தவறாக நினைத்து வருகிறார்கள். அதை தவிர்த்து முகத்தில் ஏற்படும் முகப்பருக்கள் கட்டிகளில் அனைத்திற்கும் இதுதான் காரணம் என்று தவறாக நினைக்கிறார்கள். பால் குடிப்பதனால் இதுபோன்ற பிரச்சினைகள் ஏற்படுவதில்லை, அதை அதிகளவில் மற்ற உணவுகளுடன் சேர்த்து அருந்தும் போது தான் இதுபோன்ற பிரச்சினைகள் ஏற்படும்.

பாலில் அதிகளவிலான புரோட்டின் இருப்பதினால் உங்கள் உடலின் ஆற்றலை அதிகரித்து உங்கள் சிந்திக்கும் திறனை அதிகப்படுத்துகிறது. இதைத் தவிர்த்து நம்மை அறியாமல் பால் பொருட்களை தினமும் நம் உணவில் சேர்த்து வருகிறோம். இதனால் நமது உடல் ஆரோக்கியம் அதிகரித்துள்ளது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன