சீரகம், உலர்ந்த திராட்சை மற்றும் ஆளி விதை நீரை பருகுவதனால் கிடைக்கும் நன்மைகள்..!

  • by
benefits of drinking cumin,dry grapes and aali seeds water

சமீபகாலமாகவே உலகம் முழுவதும் உயிரிழப்புகள் அதிகரித்து கொண்டே இருக்கிறது. இதற்கு காரணம் வைரஸ் தொற்று தான். எனவே இது போன்ற வைரஸ் உங்களை தாக்கினாலும் அதன் தாக்கம் அதிகரிக்காமல் இருப்பதற்கு நமக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாக தேவை. இதை தடுப்பதற்கு நாம் ஆரோக்கியமான பானங்களை அருந்த வேண்டும், அதிலும் உலர்ந்த திராட்சை மற்றும் ஆளி விதை மூலமாக செய்யப்படும் பானங்கள் இது போன்ற தொற்றுகளின் தாக்கம் அதிகரிக்காமல் இருப்பதற்கு உதவுகிறது.

சீரகம்

உணவு அருந்திய பிறகு நாம் சீரகத்தை சாப்பிடும் பழக்கத்தை கொண்டுள்ளோம். இதற்கு காரணம் நம்முடைய உணவு எளிதில் ஜீரணமாக சீரகம் உதவுகிறது. இதில் இரும்புச்சத்து அதிகமாக இருப்பதினால் உங்கள் உடலுக்கு ஆரோக்கியம் தருகிறது. அதைத் தவிர்த்து உங்கள் உடலில் உள்ள கொழுப்புகளை குறைக்க சீரகம் உதவுகிறது. நீரிழிவு நோயாளிகளுக்கு சிறந்த உணவு சீரகம்.

மேலும் படிக்க – வெங்காயத்தின் நன்மையை அறிந்து கொள்ளுங்கள்!!!

உலர்ந்த திராட்சை

உலர்ந்த திராட்சை உங்கள் உடலில் உள்ள ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்க உதவுகிறது. இதனால் உங்கள் இரத்தத்தில் உள்ள வெள்ளை அணுக்கள் உற்பத்தி அதிகரித்து நோய் எதிர்ப்பு சக்தியைத் தருகிறது. இதைத் தவிர்த்து உங்கள் இரத்த ஓட்டத்தை சீராக்கும், உடல் எடை குறைக்க உதவும் மற்றும் உங்கள் எலும்புகளை வலுவாக்கும்.

ஆளி விதை

ஆளி விதையில் வைட்டமின் சி அதிக அளவில் இருக்கிறது. எனவே உங்கள் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க ஆளி விதை போதுமானது. புற்றுநோய்க்கு எதிராக போராடும் பண்பு ஆளி விதைக்கு உண்டு. இதை தவிர்த்து உங்கள் ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை குறைக்கிறது. இதில் பொட்டாசியம் அதிகமாக இருப்பதினால் உங்கள் இருதய ஆரோக்கியத்திற்கு உதவுகிறது. இதை தவிர்த்து உங்கள் உடல் எடை குறைக்க ஆளி விதை உதவுகிறது.

மேலும் படிக்க – கொக்கரிக்கும் கொரானா அச்சத்தில் உலகம் அடுத்தது என்ன

கலவை பானம்

ஆளிவிதை உலர்ந்த திராட்சை மற்றும் சீரகத்தை ஒன்றாக கலந்து ஒரு நாள் முழுவதும் தண்ணீரில் ஊற வைக்க வேண்டும். பின்பு அடுத்த நாள் அந்த பானத்தை மூன்று பங்காகப் பிரித்து குடிக்க வேண்டும். இறுதியில் உலர்ந்த திராட்சை மற்றும் ஆளி விதையை மென்று சாப்பிடவேண்டும். இதன் மூலமாக உங்கள் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து எந்த ஒரு நோயும் உங்களை அண்டாமல் பார்த்துக் கொள்ளலாம்.

இது முழுக்க முழுக்க ஆரோக்கியத்தை கொண்ட பானமாகும். எனவே இதை நீங்கள் குடிப்பது மட்டுமல்லாமல் உங்கள் குடும்பத்தில் இருக்கும் அனைவருக்கும் குடுங்கள். இதன் மூலமாக நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பது மட்டுமல்லாமல் எந்த ஒரு நோய் தொற்றிகளும் உங்களை நெருங்காமல் இந்த பானம் உங்களுக்கு உதவும்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன