தலை முடியை வளர வைப்பதற்கான யோகாசனம்.!

benefits of doing yoga and how it helps in hair growth

சில வருடங்களுக்கு முன்பு தலைமுடி உதிர்வு என்பது ஏற்பட்டால் அவர்களுக்கு வயதாகிவிட்டது என்பார்கள் ஆனால் இப்போது எல்லோருக்கும் முடி உதிர்வு ஏற்படுகிறது. வயது வரம்பு இல்லாமல் ஆண் பெண் என பாராமல் அனைவரும் இந்தப் பிரச்சனையில் மாற்றிக்கொள்கிறார்கள் இதற்குத் தீர்வாக இவர்கள் பல வகையான உணவுகளை மேற்கொண்டாலும் இதற்கான உடற்பயிற்சிகள் செய்தால் மிக எளிமையான முறையில் நமது கூந்தல் உதிர்வை தடுக்க முடியும். எனவே இதற்கு நாம் செய்ய வேண்டிய சிறந்த யோகாசனங்களை மற்றும் அதன் பயன்களை இங்கே பார்ப்போம்.

அதோமுக சுவானாசனம்

நாம் வி வடிவை தலைகீழாகக்கினால் அவை எப்படி இருக்குமோ அதைப் போல் கவர்ந்துகொண்டு இந்த ஆசனத்தை செய்ய வேண்டும். இதன் மூலம் நம் உடம்பில் இருக்கும் ரத்தங்கள் நம் தலைக்கு வேகமாக செல்வதினால் எந்த ஒரு தடையும் இல்லாமல் நமது தலைக்கு பலம் அதிகரிக்கும் இதனால் நமது கூந்தல் வளர இது உதவுகிறது.

உத்தனாசனா 

இதை நம் நின்றுகொண்டு நமது இரு கைகளையும் கொண்டு நம் கால் கட்டை விரலை நமது உடலை மடக்கி தொட வேண்டும். இப்படி செய்வதினால் நமக்கு ஜீரண சக்தி அதிகரித்து நமது தலையில் ரத்த ஓட்டம் சீராகி நமது கூந்தல் வலுவடைந்து முடிகள் புதிதாக முளைக்க உதவுகிறது.

மேலும் படிக்க – அழகையும் ஆரோக்கியத்தையும் பராமரிக்க வெந்தயம் போதுமே..!

வஜ்ராசனம்

இந்த ஆசனம் ஓர் எளிமையான ஆசனமாகும். இதை நாம் உணவு அருந்திய பிறகு சாதாரணமாக உட்காருவதை போல் நமது இரு கால்களை எதிர்திசையில் மடக்கியவாறு உட்காரவேண்டும். இப்படி செய்வதன் மூலம் நமக்கு சிறுநீரக கோளாறு எடை குறைத்தல் ஜீரண கோளாறுகள் மற்றும் வாயு பிரச்சினைகளிலிருந்து இது நம்மை காப்பாற்றுகிறது. இதனால் நம் மன அழுத்தம் ஏற்படாமல் நமது கூந்தல் ஆரோக்கியம் அடைகிறது.

அபானாசனம்

இந்த ஆசனம் என்பது நாம் தரையில் படுத்துக்கொண்டு நமது இரு கால்களின் முட்டிகளை நம் கைகளால் கட்டிப் பிடித்துக் கொள்ள வேண்டும் இப்படி செய்வதன் மூலம் நமது ஜீரண பாதையில் இருக்கும் தடைகளை நீக்கி நமது பிராண வாயை ஆரோக்கியமாக வைக்கிறது. மற்றும் உடம்பில் இருக்கும் நச்சுத்தன்மையை நீக்கி உடலை சுத்தமாக்கும் இதனால் இந்த ஆசனத்தின் மூலமாக நமது மனதிற்கு தெளிவு கிடைக்கிறது.

மேலும் படிக்க – காளானில் உள்ளது கட்டுக்கடங்கா சத்துக்கள்

பவனமுக்தாசனம்

இந்த ஆசனம் கிட்டத்தட்ட அபானாசனம் போன்றதாகும் இதை அபானாசனம்போலவே செய்து பின்பு நமது முதுகை எழுப்பி நம் முட்டியில் நம்  மூக்கினை மோத வேண்டும். இப்படி செய்வதன் மூலம் நமக்கு ஜீரண சக்தி அதிகரித்து முதுகுப் பகுதியின் தசைகள் வலுவடைகின்றன. இதை தவிர்த்து கீழ் வயிறு மற்றும் பிட்டத்தில் இருக்கும் கொழுப்புகளை இது குறைக்கிறது.

சர்வாங்காசனம்

இது நாம் தரையில் படுத்துக் கொண்டே நமது முதுகுப் பகுதியில் இருந்து கால் பகுதி முழுவதையும் மேல் நோக்கி பார்த்தவாறு எழுப்பவேண்டும் இப்படி செய்வதன் மூலம் நமக்கு ஏற்படும் தைராய்டு சுரப்பிகளை வளரவிடாமல் தடுக்கிறது. அதன் மூலம் நமது சுவாசம், உணவுப் பாதை, பிறப்புறுப்பு மற்றும் நரம்பு மண்டலத்தை ஆரோக்கியமாக வைக்கிறது.

மேலும் படிக்க – முருங்கைக்கீரை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்..!

இதை அனைத்தையும் செய்வதன் மூலம் நமது உடல் ஆரோக்கியம் அடைந்து நமது மனம் வலுப்பெறுகிறது. இதனால் நமக்கு மன வருத்தம் ஏதும் இல்லாமல் நம் முடி உதிராமல் காத்துக் கொள்கிறது. நம் உடலில் ரத்த ஓட்டம் சீராக இருப்பதினால் நம் தலைக்கு செல்லும் ரத்த போக்கினால் முடி வளரும் உணர்வுகளை தூண்டுகிறது. இதனால் நமக்கு முடி கொட்டுதலை தவிர்த்து முடி வளர உதவுகிறது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன