திருவோண விரதத்தின் சிறப்புகள்..!

  • by
benefits of doing thiruvonam fasting

ஒவ்வொரு மாதமும் திருவோண நட்சத்திரத்தில் மேற்கொள்ளப்படும் விரதம் தான் திருவோண விரதம். விரதம் என்றாலே அதில் தனி சிறப்புகள் உண்டு, அதிலும் இதுபோன்ற முக்கிய நட்சத்திரத்தில் செய்யப்படும் விரதங்கள் நல்ல பலன்களைத் தரும். அப்படி பலன்களை அள்ளித்தரும் திருவோண ஏற்படும் காரணம் அதனால் என்ன பயன் என்பதை காணலாம்.

வைணவர்கள்

திருவோண விரதத்தை எல்லோரும் பின்பற்றலாம். அதிலும் இதை பெரும்பாலான கேரளா மக்கள் அதாவது மலையாள மக்கள் இதை அதிகமாக பின் தொடர்ந்து வருகிறார்கள். இதை தவிர்த்து. திருவோண விரதத்தை வைணவர்கள் மற்றும் தீவிர பக்தர்கள் ஒவ்வொரு மாதமும் மேற்கொண்டு வருகிறார்கள்.

மேலும் படிக்க – மாசி மாதத்தின் சிறப்புகள்..!

திருவோண விரதம் வந்ததற்கான காரணம்

பெருமாளின் பத்து அவதாரங்களில் ஒன்றான வாமன அவதாரம் திருவோண நட்சத்திரத்தில் தான் உண்டானது. அதனால்தான் ஒவ்வொரு ஆவணி மாதத்தில் வரும் திருவோண நட்சத்திரத்தை ஓணம் பண்டிகையாகக் கொண்டாடுகிறார்கள். இது மிகவும் சிறப்புமிக்க பண்டிகை இதை பெரும்பாலான தென்னிந்திய பகுதிகளில், அதிலும் குறிப்பாக கேரளாவில் இதை கொண்டாடுகிறார்கள்.

கோவில் திருவிழா

பங்குனி மாத திருவோண நடசத்திரத்தில் மார்கண்டேய மகரிஷியின் மகளான பூமி தேவியை ஒப்பிலியப்பர் பெண் கேட்டு சென்றார். ஐப்பசி மாத திருவோண நடசத்திரத்தில் தான் தேவியை ஒப்பிலியப்பன் பெருமான் மணந்து கொண்டார். இதனால் ஒப்பலியப்பன் பெருமாள் கோயிலில் ஒவ்வொரு திருவோண நட்சத்திர தினமும் விழா கோலமாக இருக்கும்.

விரதம் மேற்கொள்ளும் முரை

திருவோண விரதத்தை மேற்கொள்பவர்கள் முந்தைய நாள் இரவு எந்த உணவையும் அருந்தக்கூடாது. பின்பு திருவோணத்தன்று அதிகாலை எழுந்து நீராடி விட்டு பெருமாள் கோயிலுக்கு சென்று அவர்களுக்கு துளசி மாலையை சார்த்த வேண்டும். பின்பு பெருமாளை தரிசித்து துளசி தீர்த்தத்தை மட்டும் அருந்த வேண்டும். இதைத்தொடர்ந்து பெருமாள் பாடல்களைப் பாடுவது சிறந்தது.

மேலும் படிக்க – குபேர பூஜை எப்படிசெய்வது, அதனால் கிடைக்கும் நன்மைகள்..!

மதிய உணவில் உப்பு சேர்க்காமல் சாப்பிட வேண்டும். மாலையில் சந்திரனையும் தரிசிக்க வேண்டும், இதனால் சந்திரனின் அருள் கிடைப்பதோடு சந்திர தோஷங்கள் ஏதாவது இருந்தால் அது விலகி விடும்.

இந்த திருவோணம் விரதம் இருப்பதனால் நமக்கு நல்ல வாழ்க்கை அமையும். இந்த விரதத்தை ஒருமுறை இருந்தால் போதும் என பெரியவர்கள் நமக்கு அறிவுறுத்துகிறார்கள். திருப்பங்களை ஏற்படுத்தும் திருவோண விரதத்தை மேற்கொள்வதால் பெருமான் அருள் நமக்குக் கிடைக்கும்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன