குபேர பூஜை எப்படிசெய்வது, அதனால் கிடைக்கும் நன்மைகள்..!

  • by
benefits of doing gubera pooja

குபேரன் என்றாலே எல்லோர் மனதிலும் முதலில் தோன்றுவது செல்வம். எவரொருவர் ஏதேனும் தொழில் தொடங்கினாலும் அவர் தன்னுடைய அலுவலகம் அல்லது தொழில் நடத்தும் இடங்களில் குபேரனின் சிலையை வைப்பார்கள். இதனால் செல்வம் செழிக்கும் என்பது அவரவரின் நம்பிக்கை. ஆனால் குபேரன் சிலையை வழிபடுவதால் மட்டும் செல்வம் செழிக்காது, இதனால் நாம் குபேர பூஜையை செய்ய வேண்டும். அதை எப்படி எப்போது செய்யலாம் என்பதை இந்த பதிவில் காணலாம்.

எப்போது குபேர பூஜை செய்யலாம்

ஒவ்வொரு வியாழக்கிழமை அன்று மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை குபேர காலம் என்பார்கள். இந்த நேரத்தில் செய்யப்படும் பூஜை சிறப்பு மிக்கது. குபேரன் தன் செல்வத்தை அனைத்தும் இழந்து நிற்கும் பொழுது லட்சுமி தேவியை வணங்கி வழிபட்டான். இதனால் குபேரன் கேட்டது அவருக்கு கிடைத்தது.

மேலும் படிக்க – மகத்துவம் நிறைந்த சிவராத்திரி கொண்டாட்டங்கள்

குபேர பூஜை சிறப்பு

நாம் எளிய முறையில் விரதம் இருந்து குபேர பூஜை செய்வதினால் நம்முடைய கடன் தொல்லை அனைத்தும் நீங்கும் அதைத் தவிர்த்து செல்வம் செழிக்கும்.

இதை இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை செய்வதினால் உங்களுக்கு பண தட்டுப்பாடு என்பது இருக்காது.

வட இந்தியாவில் தீபாவளி அன்று தங்கம், வெள்ளி போன்ற பொற்காசுகளை வைத்து குபேர பூஜையை செய்வார்கள்.

லட்சுமி குபேர பூஜை வழிபாடு

லக்ஷ்மி குபேர பூஜை என்பது வேத மந்திரங்கள் ஓத கலசத்தை வைத்து செய்ய வேண்டும். நாம் குபேரன் பூஜையை வீட்டில் எளிமையாக செய்ய வேண்டும் என்றால், மாடத்தில் குபேரன் படத்தை  வைக்க வேண்டும், பின்பு அதற்கு இருபுறமும் இரண்டு குத்து விளக்கை வைத்து விட்டு அவருக்கு வாழை இலையின் மூலமாக நவதானிய படைகளை செய்ய வேண்டும். இலையில் நவ தானியங்களை தனித்தனியாக வைத்து விட்டு, நடுவில் செம்பு பாத்திரத்தில் சுத்தமான நீரை வைக்க வேண்டும். பின்பு அந்த நீரில் மஞ்சள் கலந்து மா இலையை வைக்க வேண்டும். பின்பு அதன் மேல் ஒரு மட்டைத் தேங்காயை வைத்து மஞ்சள், குங்குமம் மற்றும் பூக்கள் கொண்டு அலங்கரிக்க வேண்டும். பிறகு மஞ்சளைக் கொண்டு பிள்ளையார் பிடித்து பூஜை ஆரம்பிக்க வேண்டியதுதான்.

பூஜை மந்திரம்

நமக்குத் தெரிந்த விநாயகர் துதிப் பாடலைப் பாடி பூஜையைத் தொடங்க வேண்டும். பின்பு மகாலட்சுமியை வணங்கி, போற்றி வழிபட வேண்டும். பின்பு குபேர மந்திரத்தை சொல்ல வேண்டும்.

மேலும் படிக்க – ராமர் பாலம் கற்பனையா அல்லது வரலாற்று உண்மையா?

“குபேராய  நமஹ” “தனபதியே நமஹ”

இதை 108 முறை சொல்லி தாமரை மலர்களைத் தூவி பூஜிக்க வேண்டும். தாமரை மலர் குபேரனுக்கு உகந்த மலர் ஆகும்.

இனிப்பும் பலகாரமும்

பூஜைகளை முடித்த பின்பு நைவேத்தியம், இனிப்பு, பால் பாயாசம் மற்றும் பலகாரங்களை படைத்து பூஜை முடித்து விட வேண்டும்.

குபேர பூஜையை மற்ற நாட்களைவிட தீபாவளி அன்று செய்வதினால் வீட்டில மகாலட்சுமி குடிபுகுந்து சகல ஐஸ்வரியம் கிடைக்கும். எனவே பணத்தட்டுப்பாடு பணக் கஷ்டங்கள் உள்ளவர்கள் குபேர பூஜையை செய்து உங்கள் வாழ்க்கையில் மாற்றத்தை கொண்டு வாருங்கள்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன