கணபதி ஹோமம் செய்வதனால் கிடைக்கும் நன்மைகள்..!

  • by
benefits of doing ganapathi homam

எந்த ஒரு சுபகாரியங்களாக இருந்தாலும் நாம் கணபதியை வழிபடுவது வழக்கமாக வைத்துள்ளோம். அதேபோல் எந்த செயலை செய்வதற்கு முன்பாக நாம் கணபதி ஹோமம் செய்த பிறகு அதனை தொடங்குவதன் மூலம் நமக்கு நல்ல பலன்கள் கிடைக்கும். எனவே உங்கள் காரியங்கள் சிறப்பாக தடையின்றி நடக்க வேண்டுமென்றால் கணபதி ஹோம பூஜை செய்ய வேண்டும் என்பது ஐதீகம்.

பிரம்ம முகூர்த்த பூஜை

கணபதி பூஜை செய்வதன் மூலமாக நாம் அதிக பலன்களை பெறலாம். அதிலும் இதை பிரம்ம முகூர்த்தத்தில் செய்வதன் மூலமாக கூடுதல் பலன்களை தரும். தேன், பால், நெய் போன்றவைகளை கலந்து ஹோமத்தில் விட்டால் ராஜ வசியம் மற்றும் அரசுப் பதவிகள் கிடைக்கும்.

மேலும் படிக்க – அன்னதானம் செய்வதால் கிடைக்கும் அற்புத பலன்கள்..!

தடைப்பட்ட சுபகாரியங்கள்

கணபதி ஹோமம் செய்வதன் மூலமாக நம் வாழ்வில் ஏற்பட்ட எல்லாத் தடைகளையும் தீர்க்க முடியும். அதற்கு ஏற்ப பொருட்களை ஹோமத்தில் சேர்த்து அதன் பலன்களை பெறலாம்.

திருமணத்தடை நீங்க வேண்டுமென்றால் நெல்பொரி மற்றும் திரிமதுரம் கொண்டு வேள்வி செய்ய வேண்டும். கடன் தொல்லை உள்ளவர்கள் மற்றும் வறுமையில் வாடுபவர்கள் கருங்காலி குச்சியால் வேள்வி செய்வதன்மூலம் அவைகளிலிருந்து விடுபடலாம்.

பிரச்சினைகளிலிருந்து விடுபட

தேன் கொண்டு ஹோமம் செய்வதன் மூலமாக நம் கடன் தொல்லைகளிலிருந்து விடுபடலாம். அதை தவிர்த்து செல்வச் சிறப்போடு சகல பாக்கியமும் கிடைக்கும்.

மேலும் படிக்க – ராகு கேது பெயர்ச்சி பலன்கள்..!

நினைத்த காரியம் நிறைவேற

கொழுக்கட்டை மூலம் ஹோமம் செய்தால் நீங்கள் எடுத்த காரியங்கள் அனைத்தும் வெற்றியடையும். பொருள் வளம் பெற வேண்டுமெனில் கருப்பு துண்டால் ஓமம் செய்ய வேண்டும்.

நெய், தேங்காய்த், துண்டு, சத்து மாவு, அப்பம், மோதகம், கருப்புத் துண்டு, எள்ளுருண்டை, நெல் பொரி, அவள், வாழைப் பழம், வில்வ சமத்து, அருகம்புல், சக்கரை பொங்கல் இவைகளைக் கொண்டு ஹோமம் செய்வதன் மூலமாக நமக்கு ஐஸ்வரியம் கிடைக்கும்.

மேலும் படிக்க – காசியின் காவலர் காலபைரவர் வேண்டியதை தருபவர்..!

சிறப்புமிக்க காலங்கள்

கணபதி ஹோமத்தை செய்வதற்கான சிறப்பு மிக்க நாட்கள் பௌர்ணமி, மாதப் பிறப்பு, சதுர்த்தி, சங்கடஹர சதுர்த்தி, செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் செய்தால் நம் வேண்டுதல்கள் அனைத்தும் பலிக்கும்.

உங்களால் கணபதி பூஜையை செய்ய முடியாமல் போனால் நீங்கள் ஹோமங்கள் நடக்கும் இடத்திற்கு சென்று. முழுத் தேங்காய், பழங்கள், மஞ்சள் கிழங்கு, குங்குமம், மலர் வகைகள், தாமரை மலர் மற்றும் சிவப்பு வஸ்திரம் போன்றவர்களை வைத்து வழிபடுவதன் மூலம் உங்கள் மேல் கடைக்கண் கணபதி பார்வை படும்.

எனவே கணபதி பூஜை செய்வதன் மூலமாக உங்கள் மேல் இருக்கும் அனைத்து பாவங்களும் விலகும், ஞானம் பெருகும் தொழில் அதிகரிக்கும், சுப காரியங்கள் நடக்கும். உங்கள் வாழ்க்கையில் இருக்கும் எல்லா தடங்கல்களும் விலகி நினைத்த காரியத்தை செய்ய உதவும்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன