ஜிம்மிற்கு சென்று உடற்பயிற்சி செய்வதன் மூலம் நமக்கு கிடைக்கும் நன்மைகள்!

  • by
benefits of doing exercise by going to gym

உடற்பயிற்சி செய்வதினால் நம் உடலின் அழகை அதிகரிக்கும் என எல்லாருக்கும் தெரியும். இருந்தாலும் நம்முடைய சோம்பேறித்தனத்தால் ஒருசிலர் உடற்பயிற்சியை செய்து பழகுவதில்லை. இதனால் அவர்களின் உடல் ஆரோக்கியம் குறைந்து இளம் வயதில் முதுமை குணம் அவர்களுக்குத் தோன்றும். இதைத் தடுப்பதற்கு நாம் தினமும் உடற்பயிற்சியை அவசியமாக செய்ய வேண்டும்.

இளமையில் ஆர்வம்

நம்முடைய உடலில் சில மாற்றங்கள் ஏற்படும் பொழுது நமக்குள் காதல் எண்ணம் உருவாகும். இதற்காக நம்முடைய தோற்றத்தை அழகாக வைப்பதற்காக ஒரு சிலர் பதினைந்து, பதினாறு வயதிலேயே ஜிம்மிற்கு செல்ல துவங்கி விடுவார்கள். இது தங்களின் உடல் கட்டு மான அழகை வலுப்படுத்துவதற்காக செல்லும் இவர்களுக்கு ஜிம்முக்கு செல்வதினால் ஏகப்பட்ட நன்மைகள் இருக்கின்றது என இவர்களுக்கு தெரிவதில்லை. தினமும் காலை அல்லது மாலை ஜிம்மிற்கு சென்று உடற்பயிற்சி செய்வதன் மூலமாக நமக்கு ஏராளமான நன்மைகள் கிடைக்கின்றன. அதில் ஒரு சிலவற்றை இந்த பதிவில் காணலாம்.

மேலும் படிக்க – இயற்கை பான இளநீர் குடிப்பதால் நமக்கு கிடைக்கும் நன்மைகள்..!

மன வலிமை அதிகரிக்கும்

தினமும் ஜிம்மிற்கு சென்று உடற்பயிற்சி செய்வதன் மூலமாக உங்கள் மனப் பதற்றம், மன அழுத்தம் போன்ற பிரச்சினைகள் தீர்ந்து மனநிறைவு கிடைக்கும். பொதுவாக உடற்பயிற்சி செய்யும் பொழுது புதிய நியூரான்கள் உருவாகும், இதனால் எல்லா வித மன நோயும் விலகும்.

இருதய ஆரோக்கியம்

இருதய நோய் என்பது போதுமான அளவு உடற்பயிற்சி இன்மையினால் ஏற்படக்கூடியது. எனவே தினமும் ஜிம்மிற்கு சென்று உடற்பயிற்சி செய்தால் உங்களின் இதய ஆரோக்கியம் அடையும். இதைத்தவிர்த்து பரம்பரை பரம்பரையாக இதய நோய் உள்ள குடும்பத்தில் இருப்பவர்களுக்கு இருதய நோய் தொற்றிக்கொள்ளும் என்ற பயம் இருக்கும். இவர்கள் உடற்பயிற்சி செய்வதன் மூலமாக இந்த தொடர்ச்சியை தடுக்க முடியும்.

உடல் எடை குறைந்து உறுதியாக இருக்கலாம்

ஒரு சிலர்கள் தங்களின் உடல் எடை குறைவதற்கு ஜிம் செல்கிறார்கள். மற்றவர்கள் தங்களின் உடல் வலுவாக இருப்பதற்காக செல்கிறார்கள். இவர்கள் இருவரும் தொடர்ந்து தினமும் இருவேளை ஜிம்மிற்கு சென்று வந்தால் நிச்சயம் இவர்களின் உடல் எடை குறைந்து ஆணழகனாக மாறுவார்கள்.

மேலும் படிக்க – தினமும் செவ்வாழை சாப்பிடுவதால் நமக்கு கிடைக்கும் நன்மைகள்.!

நீரிழிவு நோய்

தினமும் உடற்பயிற்சி செய்வதன் மூலமாக உங்கள் ரத்தம் சுத்திகரிக்கும். அதை தவிர்த்து ரத்தத்தில் உள்ள சக்கரை அளவை குறைத்து உங்களுக்கு நீரிழிவு போன்ற நோய்களை தடுக்கும்.

உடல் உறவை வலுப்படுத்தும்

தினமும் செய்யப்படும் உடற்பயிற்சி மூலமாக உங்கள் இல்லற வாழ்க்கை அழகாகும். இதனால் உங்களால் கூடுதலான நேரம் உடலுறவில் ஈடுபட முடியும். உடற்பயிற்சியினால் ஏற்படும் வியர்வை உங்கள் உறவுக்குள் ஈர்ப்பு சக்தியை அதிகரிக்கும். அதை தவிர்த்து நோய் தடுப்பாற்றலை உண்டாக்கி காய்ச்சல், ஜலதோஷம், தலைவலி போன்ற பிரச்சினைகளை அகற்றும்.

உங்கள் நாட்களை அழகாக்கும்

உங்களுக்கு விரைவில் தூக்கம் உணர்வை அளித்து அதிக அளவில் உடலுக்குத் தேவையான ஆற்றலை தருகிறது. உங்களின் மனநிலையை புத்துணர்ச்சியாக வைத்து உங்கள் எண்ணங்களின் மேல் கவனம் செலுத்த பெரிதும் உதவுகிறது.

புற்றுநோயை தடுக்கும்

ஜிம்மிற்கு சென்று உடற்பயிற்சி செய்வதன் மூலம் உங்கள் உடலில் ஏற்படும் பலவிதமான புற்று நோயை தடுக்கும். அதில் குடல் புற்றுநோய், மார்பகப் புற்றுநோய் மற்றும் நுரையீரல் புற்றுநோய் என எல்லாவற்றினால் ஏற்படும் ஆபத்திலிருந்து உங்களை காக்கும்.

நீண்ட ஆயுள்

ஒரு சிலர் முதுமையிலும் ஆரோக்கியமாக இருப்பதற்கு காரணம் அவர்களின் இளம் வயதில் செய்த வேலைகள் தான், ஆனால் இப்போது நாம் இளம் வயதில் ஒரே இடத்தில் இருந்து வேலைகளைச் செய்கிறோம். இதற்கு தீர்வாக தினமும் ஜிம்மிற்கு சென்று உடற்பயிற்சி செய்யுங்கள். இதன் மூலமாக உங்கள் முதுமைக் காலம் இனிமையாக அமையும்.

மேலும் படிக்க – மஞ்சள் பாலில் இத்தனை நன்மைகளா ?

எலும்புகள் வலுவடையும்

உடற்பயிற்சியின் மூலமாக உங்கள் எலும்புகள் வலுவடையும். இதன் மூலமாக முதுகெலும்பு, கை, கால்கள், முட்டி என எல்லா எலும்புகளும் உறுதி அடைந்து உங்களை என்றும் ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளும்.

உடல் சோர்வாக இருந்தாலும் முடிந்தவரை ஒரு நாளைக்கு 45 நிமிடங்கள் முதல் ஒரு மணி நேரம் வரை உடற்பயிற்சி செய்யுங்கள். நாளடைவில் இது உங்களுக்கு ஒரு அழகிய பழக்கத்தை உண்டாக்கி உங்கள் உடல் ஆரோக்கியத்தை அதிகரிக்கும்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன