மிருத்யுஞ்சயா மந்திரம் உங்கள் விதிகளை மாற்றும்..!

  • by
benefits of chanting miruntunjaya mantra

மிருத்யுஞ்சயா என்பது உங்கள் வாழ்க்கையில் எதிர்பாராத விதத்தில் மரணங்கள் ஏற்பட்டாலோ அல்லது விபத்துக்கள் மற்றும் நோய் நொடிகளினாள் உங்கள் உயிர் பிரிந்தாலும், இது அனைத்தும் உங்களுக்கு நிறுவப்பட்ட எதிர்பாராத மரணமாகும். எல்லோரும் தங்கள் வாழ்க்கையை முழுமையாக வாழ்வதற்கான வழிகளை இறைவன் படைத்துள்ளார். ஆனால் நாம் செய்யும் ஒரு சில தவறுகளின் மூலமாக நம் வாழ்க்கையை நாமே முடித்துக் கொள்கிறோம். எனவே இதுபோன்ற நிலை உங்கள் வாழ்க்கையில் ஏற்படாமல் இருப்பதற்காக பயன்படுத்தப்படும் மந்திரம் தான் இந்த மிருத்யுஞ்சயா மந்திரம்.

மிருத்யுஞ்சயா மந்திரம்

ஓம் த்ரயம்பகம் யஜாமஹே ஸுகந்திம் புஷ்டிவர்த்தனம்

உர்வாருகமிவ பந்தனான் ம்ருத்யோர் முக்ஷீய மாம்ருதாத்.

சிவனுக்குரிய இந்த மிருத்யுஞ்சயா மந்திரத்தை நாம் ஜெபிக்கும் பொழுது நம்முடைய வாழ்க்கையில் இருக்கும் அனைத்து எதிர்மறை எண்ணங்களும் விளகும். இதன் மூலமாக நேர்மறை சக்திகள் அதிகரித்து உங்கள் எதிர்காலத்தை செம்மையாக்க உதவும்.

மேலும் படிக்க – நாகா தீவை நோக்கிய பயணத்தில் வேதாளத்தின் கேள்வி!!!

மிருத்யுஞ்சயா மந்திரத்தின் பொருள்

இயற்கையாகவே நறுமணம் கொண்டுவரும் அடியவர்களுக்கு கருணையை ஊட்டி வளர்த்வரும் எம்பெருமானே உங்களை பூஜித்து வழிபடுகிறேன். காம்பிலிருந்து வெள்ளரிப்பழம் எப்படி விடுபடுகிறதோ அதேபோல் மரணத்தின் பிடியிலிருந்து என்னை விடுவித்து சன்மார்க்க நெறியில் இருந்து பிறழயாமல் வாழ்ந்திட அருள்புரிய வேண்டுகிறேன். 

சிவபெருமானைப் போற்றி தன் வாழ்க்கையில் ஏற்படும் எதிர்பாராத மரணத்தில் இருந்து விடுவிக்குமாறு சிவபெருமானைப் போற்றிப் பாடப்படும் மந்திரம் தான் இது.

இதில் கிடைக்கும் நன்மைகள்

இந்த மந்திரத்தை 108 முறை ஜெபிப்பது மூலமாக உங்களுக்கு ஏற்படும் மரண பயங்கள் அனைத்தும் விலகும். அதை தவிர்த்து உங்களின் அகால மரணம் போன்றவை அனைத்தையும் முடித்து உங்கள் ஆயுளை முழுமையாக வாழ வழிவகுக்கும்.

மேலும் படிக்க – மகாபாரதம் – அர்ஜுனனின் கற்பூர புத்தி..!

உங்களுக்கு ஏதேனும் தீராத நோய்கள் இருந்தால் இந்த மந்திரத்தை பொறுமையாக சிவனை நினைத்து பாடும் பொழுது உங்கள் உடலில் பலவிதமான நேர்மறை சக்திகள் ஊடுருவி உங்கள் அனைத்து பிரச்சினையும் தீர்க்கும். ஆன்மிகத்தில் நம்பிக்கை உள்ளவர்கள் இந்த மந்திரத்தை தினமும் பூஜை செய்யும் அறைக்குச் சென்று சிவனைப் போற்றிப் பாடலாம். இதில் நம்பிக்கை இல்லாதவர்கள் இதை பாடும் பொழுது நம் உடலுக்குள் ஊடுருவும் காற்று மற்றும் உடலின் செயல்பாட்டில் மூலமாக உங்களுக்கு ஏராளமான நன்மைகள் கிடைக்கும்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன