பீஜ மந்திரத்தால் நமக்கு கிடைக்கும் நன்மைகள்..!

  • by
benefits of chanting beeja mantra

கோவில்களில் நடத்தப்படும் பூஜைகளில் ஒளிக்கப்படும் ஒவ்வொரு மந்திரத்திற்கும் ஒவ்வொரு சிறப்புகள் இருக்கின்றன. நாம் ஒரு மந்திரத்தை ஜெபிக்கும் பொழுது அந்த ஓசையானது நேர்மறை சக்திகளை நம்மைச் சுற்றியிருக்கும் அனைத்திற்கும் கொண்டுசெல்கிறது. இது நம் ஆழ்மனது வரை செல்லும் என நம்புகிறார்கள். மந்திரத்தின் ஓசை அதன் ஏற்றத் தாழ்வுகளுக்கு ஏற்றாற் போல் ஒளித்து நமக்குத் தேவையான அனைத்தையும் ஒளியின் மூலமாக தருகிறது. இத்தகைய சிறப்பு வாய்ந்த பீஜ மந்திரத்தாக் நமக்கு கிடைக்கும் நன்மைகளை இந்த பதிவில் காணலாம்.

பீஜ மந்திரம்

நாம் எப்படி காயத்ரி மந்திரத்தை சொல்கிறோமோ அதேபோல் பீஜ மந்திரத்தை செல்வது சிறப்புடையதாகும். ஒவ்வொரு ராசிக்காரர்களும் அதற்கு ஏற்ப மந்திரங்களை மனதிற்குள் ஜெபிக்கும்போது அவர்களுக்கு ஏராளமான நன்மைகள் நடந்து, நேர்மறை எண்ணங்கள் மனதுக்குள் ஊருடுவும். இது மிகவும் சக்தி வாய்ந்த மந்திரம் என மஹா பெரியவர் தெரிவித்துள்ளார். உங்களுக்கு நிகழ உள்ள அனைத்து தீமைகளிலிருந்தும் உங்களைக் காப்பாற்றி ஒரு பாதுகாப்பு தடுப்பு சுவரை உருவாக்கும். இந்த மந்திரம் உங்கள் வாழ்க்கையில் ஏராளமான அதிசயங்களையும் மற்றும் ஆச்சரியங்களையும் உருவாக்கவல்லது. அதைத் தவிர்த்து எதிரிகளின் எண்ணங்கள் மற்றும் தீமைகளை அழித்து விடும்.

மேலும் படிக்க – மகாபாரதம் – பகுதி 1- வியாச முனிவர் பிறந்த கதை!!!

ஓம் க்ரீம் ஸ்ரீம் 

ஓம் என்பது பிரம்மா, விஷ்ணு மற்றும் சிவனைக் குறிக்கிறது, இந்த வார்த்தையை ஒலிக்கும் போது உங்கள் எண்ணங்கள் முழுமையடையும். க்ரீம் என்பது காளியை குறிக்கிறது, எனவே இந்த வார்த்தை உங்களுக்கு வலிமை, ஞானம் மற்றும் ஆற்றலை தருகிறது. ஸ்ரீம் மகாலட்சுமியை குறிக்கிறது, இது சமூகத்தில் உயர்வு, ஏராளமான செல்வம் மற்றும் பலத்தை அதிகரிக்கும்.

ரூம் தூம் ஹ்ரீம் ஐம்

ரூம் என்ற வார்த்தை சிவனைக் குறிக்கிறது எனவே உங்களுக்கு உண்டாகும் பயம், எதீப்பு மற்றும் நோய்களை தடுக்கிறது. தூம் என்பது துர்காவை குறிக்கிறது, இது உங்களுக்கு வலிமையும் அளித்து தீயவர்களிடம் இருந்து பாதுகாக்கிறது. ஹ்ரீம் புவனேஸ்வரியை குறிக்கிறது, இந்த வார்த்தை உங்களை கஷ்டங்களிலிருந்து வெற்றிப்பாதைக்கு அழைத்துச் செல்கிறது. ஐம் என்பது சரஸ்வதியை குறிக்கிறது, இந்த வார்த்தை உங்களுக்கான ஞானம், ஆசீர்வாதம் மற்றும் ஏராளமான தன்னம்பிக்கையை அளிக்கும்.

காம் ஃப்ராம் தாம் பிராம்

காம் என்பது விநாயகரைக் குறிக்கிறது, எனவே இந்த வார்த்தையின் மூலமாக அறிவு, ஞானம், மகிழ்ச்சி மற்றும் நல்ல எதிர்காலத்தை பெறலாம். ஃப்ராம் அனுமனை குறிக்கிறது, எனவே இது உங்கள் பயத்தை போக்கி வலிமையை அதிகரிக்கிறது, அதேபோல் உங்களை பாதுகாப்பாக வைத்து, உங்களை வெற்றியை நோக்கி பயணிக்க செய்யும். தாம் என்பது விஷ்ணுவை குறிக்கிறது, எனவே இது உங்கள் வாழ்க்கையில் திருமணத்தை அமைக்கும், நல்ல ஆரோக்கியத்தை அளித்து தீமைகளை அழிக்கும். பிராம் என்பது பைரவரை குறிக்கிறது, இது உங்களுக்கு வெற்றி, ஆரோக்கியம் மற்றும் உங்களை பிரபலமாக்க உதவுகிறது.

மேலும் படிக்க – பவுர்ணமி வழிபாடினாள் கிடைக்கும் நன்மைகள்..!

ராசிக்காரர்களுக்கு ஏற்ற மந்திரம்

ஒவ்வொரு ராசிக்காரர்களும் அதற்கேற்ற வார்த்தைகளை ஒலிக்கும் பொழுது அவர்களுக்கு தேவையான அனைத்தும் விரைவில் கிடைக்கும். இதுவரை நீங்கள் எந்தெந்த விஷயங்களில் கஷ்டப்பட்டு வந்தீர்களோ அது அனைத்தையும் போக்கி உங்கள் எதிர்காலத்தை அழகாக்கும். தமிழில் உள்ள 12 ராசிக்காரர்களும் அவர்களுக்கு ஏற்ற வார்த்தைகளை உச்சரிப்பதனால் அவர்களின் பலன் அதிகரிக்கும்.

இந்த மந்திரத்தை ஒளிப்பதற்கான நேரம் மற்றும் காரணங்கள் எதுவும் தேவைப்படாது, எனவே உங்களுக்கு தோன்றும் போதெல்லாம் உங்கள் மனதுக்குள் இந்த மந்திரத்தை ஒலித்து கொண்டே இருக்கலாம். இதன் மூலமாக உங்கள் பயம் அகன்று தன்னம்பிக்கை உண்டாகும்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன