தினமும் உணவில் மீன் சேர்த்துக் கொள்வதால் கிடைக்கும் நன்மைகள்..!

  • by
benefits of adding fish in your regular food habit

மாமிச உணவுகள் என்று எடுத்துக்கொண்டாலே அதில் அதிகமான கொழுப்புகள் இருக்கும். உடல் பருமன் பிரச்சனைகளை உண்டாக்கும், ரத்த அழுத்தம் மற்றும் இதய பிரச்சனைகள் ஏற்படுத்தும் என்று பலரும் சொல்லி வருவார்கள். ஆனால் மாமிச உணவுகளில் அதிகப்படியான ஆரோக்கியத்தை அள்ளித் தரும் உணவாக பார்ப்பது நீர் நிலைகளில் வாழும் மீன்கள் தான். தினமும் நம் உணவில் மீன் சேர்ப்பதன் மூலமாக நமக்குக் கிடைக்கும் நன்மைகளை இந்த பதிவில் காணலாம்.

புற்றுநோயை தடுக்கும்

மீன் உணவுகளில் ஃபோலிக் ஆசிட் மற்றும் ஒமேகா-3 அதிகமாக இருக்கிறது. எனவே இந்த சக்திகள் நமக்கு புற்றுநோய்களை உண்டாக்காமல் தடுக்கிறது. அதிலும் வாய் புற்றுநோய், குடல் புற்றுநோய், கர்ப்பப்பை புற்றுநோய், மார்பக புற்றுநோய் மற்றும் புரோஸ்டேட் புற்றுநோய் போன்ற அனைத்தையும் 30-லிருந்து 50 சதம் வரை தடுக்கிறது.

மேலும் படிக்க – ஆப்பிள் சீடர் வினிகரின் பயன்கள்.!

இருதய நோய்

ஒவ்வொரு வாரமும் மீன் உணவை சாப்பிட்டு வந்தால் நமது இருதயம் ஆரோக்கியமடையும். இதனால் இருதயம் சீராக இயங்கி இருதய நோய் மற்றும் பக்கவாதம் போன்ற பிரச்சனைகள் ஏற்படாது.

கர்ப்ப காலத்தில் பெண்கள்

கர்ப்பமாக இருக்கும் பெண்கள் மீன் உணவுகளை அதிகமாக உட்கொள்ள கூடாது என்பார்கள். ஆனால் அதை தவிர்த்து மாதம் ஒரு முறை சிறிதளவு மீன் உணவு சாப்பிடுவதன் மூலமாக உங்களுக்கு ஏற்படும் குறை பிரசவம் தடுக்கப்படும்.

குழந்தை பிறந்த பிறகு மீன் உணவுகளை சாப்பிட்டுவதினால் உங்கள் தாய் பாலில் அதன் சக்திகள் சென்று அதை அருந்துவதன் மூலமாக குழந்தையின் பார்வை அதிகரிக்கும்.

மேலும் படிக்க – கற்றாழை ஜெல்லில் இருக்கும் மருத்துவ குணங்கள்.!

சக்கரை நோய்

உங்கள் ரத்தத்தில் இருக்கும் சர்க்கரையை குறைக்கும் வேலையை மீன் உணவு செய்கிறது. எனவே தினமும் உங்கள் உணவில் மீன் சேர்த்து நீரிழிவு போன்ற பிரச்சனைகளில் இருந்து விடுபடுங்கள்.

ஞாபக மறதி மற்றும் மன இறுக்கம்

முதியவர்கள் வாரம் ஒருமுறை மீன் உணவுகளை சாப்பிடுவதன் மூலம் வயதாகும் சமயத்தில் ஏற்படும் மறதி பிரச்சனை விலகும். ஒமேகா 3 மற்றும் ஃபோலிக் அமிலம் குறைபாட்டினால் நமது மூளை இருக்கமடையும் இதனால் நமக்கு மன அழுத்தம் ஏற்படும். இதைத் தடுப்பதற்கு நாம் மீன் உணவை உட்கொள்ள வேண்டும். இதனால் நம்முடைய மன பதட்டம் குறைந்து எப்போதும் மகிழ்ச்சியாக இருக்க முடியும். அதேபோல் உங்களில் மூளையின் செயல் திறனையும் அதிகரித்து உங்கள் கண் பார்வையும் அதிகரிக்கும்.

மாமிச உணவுகளில் மிக மலிவான விலையில் கிடைக்கும் மீன் உணவை உண்பதால் நமக்கு ஏராளமான நன்மைகள் கிடைக்கின்றன. இதை தவிர்த்து மற்ற மாமிச உணவுகளை ஒப்பிடுகையில் மீன் உணவில் கொழுப்பு சத்துக்கள் குறைவாக உள்ளது. எனவே இதை உண்ணுவது மூலமாக உங்கள் ஆரோக்கியம் முழுமை அடையும்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன