சருமத்திற்கு சாக வரம் தரும் வைட்டமின் ஈ மாத்திரைகள்

  • by

முகம் பளபளக்கனுமா, உங்களுடைய லுக் நீட்டாக இருக்கனுமா, இதற்காக பல  ரிமெடிகளை பயன்படுத்தியும் பலனில்லையா இந்த ரிமெடியை பயன்படுத்திப் பாருங்கள், இது எளிமையானது பயன்படுத்தகூடியது சீப் அண்ட் பெஸ்டா இருக்கும். 

மென்மையான சருமம்:

 நீங்கள்  எதிர்பார்த்த மென்மையான சருமத்தை பெற வைட்டமின் ஈ ஆயிலை பயன்படுத்தினால் நினைத்தது போல்  சருமத்தை விரைவாக மென்மையாக்க முடியும். அவை தவிர இதை எதற்கு எப்படி பயன்படுத்தலாம் என்பதையும் இங்கு விளக்கியுள்ளோம்.

மேலும் படிக்க – காதலில் நீங்கள் எந்த வகை என தெரிந்து காதலியுங்கள் !

சாகவரம் தரும் வைட்டமின் ஈ:

தினமும் குளித்து முடித்ததும் பொதுவாக மாய்சுரைசர் அப்ளை செய்து வருவது வழக்கமாக வைத்துள்ளோம். இதற்கு மாறாக நாம் வைட்டமின் ஈ ஆயிலை தடவி வரலாம். குறைந்த நாட்களில் இவை சருமத்திற்குள் சென்று சருமத்தை மிருதுவாக  மாற்றும். நாம் பயன்படுத்தும் அழகு க்ரீம்களை அந்தந்த காலத்துக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும்.

உடனடி ரிசல்ட் தரக்கூடிய  வைட்டமின் இ ஆயில் எல்லா காலங்களிலும் இதை பயன்படுத்தலாம். க்ரீம்களை உடல் முழுக்க பயன்படுத்த முடிவதில்லை. வைட்டமின் ஈ ஆயிலை உடல் முழுவதும் பயன்படுத்தி பயன் பெறலாம்.  வைட்டமின் ஈ ஆயிலை முகத்தில் இரவு நேரத்தில் மசாஜ் செய்து படுக்கும் முன் அப்ளை செய்யலாம். 

இமைகளை காக்கும் ஈர்ப்புமிக்கது:

தினமும் நாம் வைட்டமின் ஆயிலை  புருவத்தின் அடர்த்தி அதிகரிக்க  மசாஜ் செய்து வரலாம். இமைகளை காக்கும் வைட்டமின் ஈ ஆயில் பயன்படுத்தி மசாஜ் செய்யலாம். நம்முடைய புருவங்கள் அடர்ந்து வளருவதற்கு, கண்களுக்கு கீழ் வரும் கருவளையத்தால் சருமத்தில் மென்மையாக்கலாம். 

கருவளையத்துக்கான பராமரிப்பு செய்கையில்  இந்த ஆயில் கொண்டு மசாஜ் செய்துவிடுவது சிறப்பானதாகும். சாதாரணமாக புருவத்தின் அடர்த்தி அதிகரிக்க புருவத்துக்கு மசாஜ் செய்ய சொல்வார்கள், அதற்கு இந்த வைட்டமின் ஈ ஆயில் பயன்படுத்தி மசாஜ் செய்யலாம். இதனால் புருவங்கள் அடர்ந்து வளரும். கண்களுக்கு கீழ் வரும் கருவளையத்தால் சருமத்தில் கடினத்தன்மை கூடும். கருவளையத்துக்கான பராமரிப்பு பின்பற்றுங்கள் முடிந்தவுடன் இந்த ஆயில் கொண்டு மசாஜ் செய்து விடுங்கள்.

அதிக மேக்கப் போடுவதால்  விரைவில் வயதான தோற்றம் உண்டாகும், சுருக்கம் ஏற்படும். பெண்கள் பெரும்பாலோனோர்க்கு இயல்பாகவே உணவில் போதிய சக்தியற்ற தன்மையால் சருமங்கள் சுருக்கம் அடைகிறது. தினமும் வைட்டமின் ஈ ஆயில் கொண்டு மசாஜ் செய்வதன் மூலம் சருமத்தை இளமையாகவும் மென்மையாகவும் வைத்திருக்கலாம். இது  சருமத்தினை மாசு,மங்கு, அழுக்குகளில் இருந்து காக்கின்றது. ஆரோக்கியமான சரும பொலிவிற்கு இதுவே காரணமாக இருக்கின்றது. 

மேலும் படிக்க – காலனிகளின் அற்புத வகைகள்..!

வைட்டமின் ஈ நிறைந்த பட்டர் பூருட் எனப்படும் அவகேட்டா பழத்தை சாப்பிடுவதால் இயற்கையாக சருமத்தினை பொலிவூட்டலாம்


மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன