அவல் சாப்பிடுங்க ஆரோக்கியமா வாழலாம்!

  • by

அவல்  பழமையான ஒரு உணவு முறையாகும் . இது நம் முப்பாட்டன் காலம் முதல் பின்பற்றப்படும் உணவுகளில் ஒன்றாகும்.  இது உடல் ஆரோக்கியத்திற்கு முக்கியப் பங்கு வகிக்கின்றது. 

அவல் தயாரிப்பு: 

அவல் அரிசியிலிருந்து தயாரிக்கப்படும் உணவாகும்.  நெல்லை கொண்டு தயாரிக்கப்படும் உணவாகும், அவலானது நெல்லின் மூலம் கிடைக்கின்றது,  நெல்லை ஊர வைத்து உமியை நீக்கி இதனை அவலானது உருவாக்கப்படுகின்றது. அரிசி வகை மற்றும் நிறம் பொருத்து அவலானது தயாரிக்கப்படுகின்றது. 

அவல்

அவலின் நிறம்: 

அவலானது வெள்ளை மற்றும் சிவப்பு  நிறத்தில் சந்தையில் நாம் அதிகம் காணமுடிகின்றது. அவல்  வெள்ளை நிறத்தில் இருக்கும் அவுலில் தேவைப்படும் கார்போ ஹைட்ரேட், காலோரி  கானப்படுகின்றது. இதுமட்டுமல்லிங்க நமது உடலுக்கு ஆரோக்யத்தை கொடுப்பதில் இது முதலிடம் வகிக்கின்றது. அவலானது கொழுப்பு சத்தையும் உடலுக்கு தருகின்றது. இது நல்ல கொழுப்பை அதிகரிக்கின்றது. 

மேலும் படிக்க: தினமும் பால் குடிப்பதால் ஏற்படும் நன்மைகள்..!

அவலின் சத்துக்கள்:

அவலை  தொடர்ந்து சாப்பிடும் பொழுது உடலுக்கு தேவைப்படும் அனைத்து சத்துக்களும் கிடைக்கப் பெறலாம்.   சிவப்பு அவலில் நார்ச்சத்து , கால்சியம், ஜிங்க், இரும்புச்சக்து ஆகியவை காணப்படுகின்றது. 

உடலை உறுதியாக்கும் ஒன்றாகும்.  நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கின்ற ஒன்றாகும். குடல் ஆரோக்கியத்தை அதிகப்படுத்தும் சக்தி கொண்டது . பசியை போக்கும் ஒன்றாகும்.  அவல் சாப்பிட்டு வந்தால் புத்துணர்ச்சியுடன் செயல்படலாம். அவலில் உள்ள சத்துக்கள் உடலுக்குள் இருக்கும் புண்களை எல்லாம் சரி செய்கின்றது. 

அவல்

அவுல் சாப்பிடும்  பொழுது அதனை வெந்நீரில் ஊரவைத்து பின் அதனை சாப்பிடலாம். அப்பொழுது அதனில் உள்ள கடினத்தன்மையானது மறையும்.  அவுல் கொண்டு பாயசம், உப்புமா மற்றும் அதனை கொண்டு சினேக்ஸ் கூட செய்து சாப்பிடலாம். இவ்வளவு சத்துக்கள் கொண்ட அவலானது    மகாபாரத கண்ணனுக்கும் பிடித்த ஒன்றாகும். அவுல் சமைக்கும் விதத்தில் அதன் சுவையை மெருக்கூட்ட முடியும். அவலில் உள்ள சத்துக்கள் நமது  உடலில் உள்ள சிவப்பணுக்களை அதிகப்படுத்தி கொடுக்கும். அவலை இனிமேல் ஒதுக்காதீர்கள் வாரம் ஒரு முறையாவது அவலை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டியது அவசியம் ஆகும்.


மேலும் படிக்க: வெயிலை தணிக்க வெளிநாட்டு பானங்களா? வேண்டவே வேண்டாம்!!!

ஆரோக்கியம் அதிகம் கொண்ட அவலை நாம் சாப்பிடும் பொழுது அதன் மென்மை தன்மையை கொண்டு வர வேண்டியது அவசியம்  ஆகும். அப்பொழுது தான் அது சாப்பிட விருப்பமாக இருக்கும் இல்லை எனில் அது நமக்கு அவ்வளவு விருப்பமாக இருக்காது. இதனை மனதில் வைத்து அவுலை சமைத்து சாப்பிடுங்கள். அவுல் மற்றும் தேங்காய் துருவல், பால், தண்னீர், வெல்லம் கொண்டு செய்யப்படும் பாயசம் உடலுக்கு ஆரோக்கியத்தை அதிகப்படுத்தும் ஒன்றாகும். அவல் கொண்டு இட்லி மற்றும்  தோசை ஆகியவை செய்ய முடியும் அது இன்னும் சுவையாக இருக்கும். அவல் வைத்து செய்யப்படும் புட்டானது மிகவும் சுவையாக இருக்கும். 

மேலும் படிக்க: பாசிப்பருப்பு என்கிற பச்சை பருப்பில் இருக்கும் மருத்துவ குணங்கள்.!

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன