சீரகம் கலந்த உணவு சாப்பிட்டால் நம்மை சீராக்கும்

  • by

சீரகம் ஒரு பெருமூலிகை அகத்தை சீர்படுத்தி நம்மை சீராக இயங்க வைக்கும். உடலில் அகத்தை குணமாக்கும்.  சீரகம் இந்திய சமையலில் முக்கியப் பங்கு வகிக்கின்றது. சீரகம் தனது மருத்துவ குணத்தால் உடலை பாதுகாக்கின்றது. 

சீரகத்தை நாம் தொடர்ந்து சாப்பிட்டு வரும் பொழுது சிக்கல்கள் அனைத்தும் உடனுடக்குடன் சரி செய்யபடும். உடலில்  அதிகப்படியாக உள்ள சூட்டை சரி செய்து நம்மை காக்கும். 

உறுப்புகளை சீராக்கும் சீரகம்:

சீரகம், மிளகு இரண்டையும் நல்லெண்ணையிலிட்டு காய்ச்சி தலையில் தேய்த்து குளித்தால் கண் எரிச்சல் ஆக்கியவை  அனைத்தும் குணமாகும். உடலில் ஜீரண உறுப்புகளை சரி செய்கின்றது. ஓமத்துடன், சீரகத்தை கசாயம் செய்து சாப்பிட்டு வந்தால் உடலில் ஏற்பட்ட பேதியானது நிற்கும். 

சர்க்கரையை கட்டுக்குள் வைக்கும் சீரகம்: 

சீரகத்தை தினமும் சாப்பிட்டு வரும்பொழுது உடலில் உள்ள சர்க்கரை அளவை குறைத்து பாதுகாக்கும். கர்ப்பிணி பெண்கள் சிரகம் சாப்பிடுவதை குறைத்தல் நல்லது என வல்லுநர்கள் கூறுகின்றனர். 

சீரகம் உடலில் நரம்புத்தளர்ச்சியை குறைக்கும்.  இது உடலில் ஏற்படும் தேவையற்ற தலைசுற்றல் மயக்கதை சரி செய்யும்.  மேலும் இது குடல் பிரச்சனைகள் சரிசெய்கின்றது. 

மேலும் படிக்கவும்: விளக்கெண்ணையில் இருக்கும் மருத்துவ குணங்கள்..!

உடல் எடையை குறைப்பதில் சீரகம் முக்கியப் பங்கு வகிக்கின்றது. மோருடன்  சீரகத்தை ஊரவைத்து குடிக்கும் பொழுது உடல் எடையானது குறையும் மற்றும் உடல் நல்ல குளிர்ச்சி அடையும்.  பசியை அதிகரிக்கும் சீரகத்தை பாலுடன் கலந்து குடிக்கலாம். சீரகத்தை வில்வபட்டையுடன் கலந்து சாப்பிட்டு வரும் பொழுது உடலில் சத்துக் குறைவு அனைத்து சரியாகும்.

வாரக்கடைசி நாள்  பார்ட்டியில் அதிகம் குடித்துவிட்டால் அடுத்த நாள் காலை தலை  வலிக்கும். மது போதை மந்தமாக்கும் புத்தியை தெளிவுபடுத்த சீரகம் முக்கியபங்கு வகிக்கின்றது. சீரகத்தை சாப்பிட்டு வர பெண்களுக்கு ஏற்படும் வெள்ளைப் படுதல் சிக்கலை சரி செய்கின்றது. சீரகமானது கருஞ்சீரகம் என்ற வகையும் உள்ளது. 

ரசம், சாம்பார், காரக்குழம்பு அனைத்து வகையிலும்  வெந்தயப் பயன்முக்கியமானதாக இருக்கும். சீரகத்தை மிளகு, கிராம்பு இரண்டையும்  சூப்பில் சேர்த்து குடித்துவந்தால் சளி தொல்லையை சரி செய்யும்.

மேலும் படிக்கவும்: கோவைக்காயில் இருக்கும் மருத்துவ குணங்கள்..!

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன