கொரோனாவால் குழப்பத்தில் இருக்கும் மக்கள்..!

  • by
because of corona virus people are in confused state

எல்லாவித உயிரினங்களையும் அடக்கி ஆதிக்கம் செலுத்தி வந்த மனிதர்கள் இப்போது கூண்டுக்குள் அடைக்கப்பட்ட கிளி போல் வீட்டிற்குள்ளே இருக்கிறார்கள். ஒரு சிலர் தங்கள் மனதை கட்டுப்படுத்த முடியாமல் வீட்டை விட்டு வெளியேறி காவல்துறையிடம் சிக்கிக் கொள்கிறார்கள். இதனால் அவர்கள் மேலும் மனம் உடைந்து என்ன செய்வது என்று தெரியாமல் குழப்பத்தில் வாழ்ந்து வருகிறார்கள். இவர்களின் மனநிலையை ஒரு நிலைப்படுத்துவதற்காக ஒரு சில அறிவுரைகள்.

நன்கு சிரியுங்கள்

மக்கள் நாளையை பற்றி சிந்தித்து வாழ்க்கையை நரகமாக மாற்றிக் கொள்கிறார்கள். எனவே இன்றைய தினத்தை எப்படி மகிழ்ச்சியாகக் கழிக்க வேண்டும் என்பதற்கான திட்டங்களை தீட்டுங்கள். வீட்டில் உள்ளவர்களுடன் குறும்புகளை செய்யுங்கள், அதைத் தவிர்த்து விதவிதமான முறையில் எப்படி விளையாடலாம் மற்றும் எப்படி அனைவரையும் மகிழ்ச்சியாக வைக்கலாம் என்பதை எண்ணுங்கள். வீட்டில் உள்ள அனைவரையும் ஒன்றாக இணைத்து அவர்களின் வாழ்க்கையில் நடந்த சுவாரஸ்யமான சம்பவங்களை பற்றி விவரிங்கள்.

மேலும் படிக்க – கொரோனா வைரஸை அழிக்கும் பிளாஸ்மா சிகிச்சை..!

புதிய செயல்

இணையத்தளத்தில் ஏராளமான பதிவுகள் இருக்கின்றன, அதில் வீட்டை சுத்தம் செய்வதற்கான வழிகள் மற்றும் வீட்டில் இருக்கும் தேவையில்லாத பொருட்களை வைத்து செய்யப்படும் தேவையான பொருட்கள், என தினமும் ஏதாவது ஒரு செயலை இணையதளத்தில் பார்த்து அதை குடும்பமாக இணைந்து செய்து பாருங்கள். அதேபோல் மூன்று வேளை உணவுகளை ஒவ்வொருவராக பிரித்து தங்களுக்கு பிடித்தமான உணவை சமைத்து பகிருங்கள். இதைத் தவிர்த்து சிறுவர்களுக்கு ஓவியங்கள், இசை போன்றவற்றைக் கற்றுக் கொடுங்கள்.

உடற்பயிற்சி செய்யுங்கள்

உங்கள் மனநிலை ஆரோக்கியமாக இருக்க வேண்டுமென்றால் தினமும் காலை அல்லது மாலையில் நடைப்பயிற்சி மற்றும் உடற்பயிற்சி செய்யுங்கள். உங்கள் மனநிலை அமைதியாகவும் மற்றும் தெளிவாகவும் இருக்க வேண்டுமென்றால் உங்கள் உடல் வலுவாக இருக்க வேண்டும். எனவே குடும்பத்தில் இருக்கும் அனைவரும் செய்வதற்கு உகந்த உடற்பயிற்சிகளை ஒன்றாக இணைந்து செய்திடுங்கள். அதைப்போல் தனிமையில் வீட்டில் இருப்பவர்களும் இது போன்ற உடற்பயிற்சிகளை செய்து உங்கள் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகளை குறைத்து விடுங்கள்.

வீட்டில் சுதந்திரம்

வெளியே செல்ல முடியாமல் தவித்து வருபவர்கள் ஏதோ ஆங்கிலேயர் ஆட்சியின் கீழ் வாழ்வதைப் போல் உணர்கிறார்கள். இது அனைத்தும் நமது நன்மைக்கே என்று நினைத்து வீட்டில் சுதந்திரமாக இருங்கள். அதைத் தவிர்த்து வீட்டில் உள்ள அனைவருக்கும் சுதந்திரத்தை அளியுங்கள், யார் வேண்டுமானாலும் எதை வேண்டுமானாலும் பேசி தங்கள் கருத்துக்களை வெளியிடும் தன்னம்பிக்கையை கொடுங்கள். இந்த சூழ்நிலையை நீங்கள் எப்படி எதிர்கொள்கிறீர்களே அதை பொருத்துதான்  உங்கள் வாழ்க்கையில் மட்டுமல்லாமல் உங்களை சுற்றியுள்ளவர்களின் வாழ்க்கையிலும் ஒரு நல்ல அனுபவம் கிடைக்கும். இதன் மூலமாக நீங்கள் எந்த பிரச்சினை வந்தாலும் அதை நேர்மறையாக எதிர்கொள்ளலாம்.

மேலும் படிக்க – கொரோனாவை கொள்ளுமா கபசுரக் குடிநீர்..!

விளையாடுங்கள்

உங்கள் கைகளில் இருக்கும் செல்போன்களை ஒரு சில மணி நேரம் மேஜையில் வைத்து விட்டு குடும்பத்துடன் ஒன்றாக இணைந்து ஏதேனும் விளையாட்டுகளை விளையாடுங்கள். விளையாடுவதற்கான இடங்கள் இருந்தால் கிரிக்கெட், புட்பால், பேட்மிட்டன் போன்ற விளையாட்டுக்களை விளையாடலாம். சிறிய இடங்களில் இருந்தால் வீட்டிற்குள் விளையாட முயற்சி செய்யுங்கள். இல்லையெனில் கேரம், செஸ், லுடோ போன்ற விளையாட்டுக்களை விளையாடலாம். இதன் மூலமாக குடும்பம் அனைத்தும் ஒன்றிணைந்து மகிழ்ச்சியாக இந்த ஊரடங்கை கழிக்கலாம்.

எல்லோர் வாழ்க்கையிலும் இதுபோன்ற சூழ்நிலையை முதல் முறையாக அனுபவித்து வருகிறோம். எனவே எல்லாரும் இதற்கு தயாராக இருக்கிறார்கள், அதை தவிர்த்து இதை அனைவரும் நேர்மறையாக எதிர்கொள்ளுங்கள். இதற்கு இடையில் உங்கள் மணம் மட்டும் ஏன் சோர்வடைகிறது என்பதை ஆராய்ந்து பாருங்கள். இது போன்று பலவீனமான மனநிலையைக் கொண்டு இல்லாமல் உங்களுக்கு ஊக்கம் அளித்து நேர்மறையாக செயல்படுங்கள்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன