சினிமா நட்சத்திரங்களை போல் ஜொலிக்க சில அழகு குறிப்புகள்!!!

  • by
beauty tips to glow like cinema stars

சில நேரங்களில் நமக்கு கடைசி நிமிஷத்தில் தான் நமது நண்பர்களின் அல்லது உறவினர்களின் திருமண அழைப்பிதழ் வந்து சேரும். இந்த மாதிரி சமயங்களில் ஏற்கனவே நமக்கு இருக்கும் வேலைப் பளுவின் காரணமாக பியூட்டி பார்லருக்கு செல்லக் கூட நேரம் இருக்காது. இந்த மாதிரி சமயங்களில் இங்கு குறிப்பிட்டுள்ள சில குறிப்புகளை செய்து வந்தீர்களானால் உங்களுக்கு நல்ல பலன் கிடைக்கும். இந்த மாதிரி சமயங்களில் வீட்டிலேயே ஒரு பேஸ்பேக் நீங்கள் உருவாக்க முடியும். தேவையான பொருட்கள் பால் மற்றும் ஜெலடின். ஒரு பவுலில் 2 அல்லது 3 டீ ஸ்பூன் பாலை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் ஒரு டீஸ்பூன் ஜெலட்டின்  கலந்து நன்றாக ஊற வையுங்கள். உங்களிடம் மைக்ரோவேவ் இருந்தால் இந்த இந்த மிக்ஸை 30 நிமிடத்திற்கு வைத்து எடுங்கள். அல்லது ஒரு கிரீமி பதத்திற்கு வரும் வரை இதே மாதிரி செய்திடுங்கள். இந்த கலவை மிதமான சூட்டிற்கு வந்தவுடன் அதை உங்கள் முகத்தில் அப்ளை செய்து விடுங்கள். நன்றாக இந்த மாஸ்க்கை உலர விட்டு பின்னர் அதை பிரித்து எடுத்தால் உங்கள் முகம் பளபளப்பாக இருக்கும்.

பிளாக் ஹெட்ஸ்

சிலருக்கு மூக்கு பகுதிகளில் பிளாக்ஹெட்ஸ் இருக்கும். இந்த பிளாக் ஹெட்ஸ் களை நீக்குவதற்கு நீங்கள் ஒரு மாஸ்க்கை பயன்படுத்தலாம். தேன் மற்றும் ஏலக்காய் பொடியை நன்றாக சேர்த்து பேஸ்ட் போல் வரும் வரை மிக்ஸ் செய்யுங்கள். இந்த கலவையில் உங்கள் மூக்கில் நன்றாக தடவி அதற்கு மேல் ஒரு லேசான துணியைப் போட்டு விடுங்கள். 5 நிமிடம் கழித்து எடுத்தால் உங்கள் மூக்கு பளபளப்பாக இருக்கும். 

மேலும் படிக்க – கோடைக் காலங்களில் நாம் எந்த விதமான ஆடைகளை அணியலாம்..!

உங்கள் முகம் சோர்வாக காணப்பட்டால் ஆப்பிள் ஜூஸ் எடுத்துக் கொள்ளுங்கள் அதனுடன் சிறிது தேனை கலந்து உங்கள் முகத்தில் அப்ளை செய்து 5 நிமிடம் கழித்து கழுவினால் முகம் பளபளப்பாக இருக்கும்.

கருவளையங்கள்

கருவளையங்கள் அல்லது கண்ணுக்கு கீழ் வீக்கம் இதுபோன்ற பிரச்சினைகள் இருந்தால் ஒரு உருளைக்கிழங்கை எடுத்துக் கொள்ளுங்கள். உருளைக்கிழங்கை நன்கு சிறியதாக வெட்டி அதை உங்கள் கண் பகுதியில் கருப்பாக உள்ள இடங்களில் வைத்து 15 நிமிடம் ஊறவிடுங்கள். அதன் பிறகு எடுத்தால் கருவளையம் இருக்காது. 

சிலருக்கு வறண்ட சருமம் காணப்படும். நீங்கள் தயிர் மற்றும் ஏதேனும் ஒரு கிரீமை நன்றாக கலந்து முகத்தில் மாஸ்க் போல அப்ளை செய்து கொள்ளுங்கள். சிலருக்கு எண்ணெய் பசையுள்ள சருமம் இருக்கும். அப்படி இருப்பவர்கள் அந்த கலவையுடன் முட்டையின் வெள்ளைக் கருவை சேர்த்து சிறிது ஆலிவ் ஆயில் மற்றும் லெமன் ஜூஸ் சேர்த்து கலந்து, பின்னர் உங்கள் முகத்தில் பூசிக் கொள்ளுங்கள். சாதாரண சருமம் உள்ளவர்கள் வாழைப்பழம் போன்ற பழங்களை பயன்படுத்தி உங்கள் முகத்திற்கு மாஸ்க் செய்து கொள்ளலாம். ஒரு ஐந்து நிமிடம் ஊற வைத்து பின்னர் முகத்தைக் கழுவி பார்த்தால் மினுமினுப்பான முகம் உங்களுக்கு கிடைக்கும்.

சிலருக்கு சருமம் எப்போதும் எரிச்சல் ஊட்டிக் கொண்டே இருக்கும். இதற்கு வெண்ணையை ஒரு மாஸ்க் போல் உங்கள் முகத்தில் நன்றாக தடவி மசாஜ் செய்து ஒரு 15 நிமிடம் கழித்து கழுவ உங்களது முகத்தில் அந்த எரிச்சலூட்டும் தன்மை மறைந்து முகம் பளபளப்பாக இருக்கும்.

சூரிய ஒளி

சூரிய ஒளியினால் ஏற்பட்டு இருக்கும் கருமை நிறத்தை போக்க உங்களது மாய்ஸ்சுரைசிங் க்ரீம் உடன் சிறிது கொக்கோ சேர்த்து நன்றாக கலந்து பின்னர் உங்கள் சருமத்தில் கருமையாக இருக்கும் இடங்களில் மசாஜ் செய்யுங்கள். இவ்வாறு தொடர்ந்து ஒரு வாரம் செய்துவர சூரிய ஒளியினால் ஏற்பட்ட கருமை நிறம் நீங்கி சருமம் பழைய நிறத்தை திரும்பப் பெறும்.

மேலும் படிக்க – கண்களின் மேல் உள்ள கருவளையங்களை போக்குவதற்கான வழிகள்..!

இதுபோன்ற வீட்டுக் குறிப்புகளை நீங்கள் செய்து பார்க்கும் பொழுது முதலில் உங்களுக்கு ஏதேனும் அலர்ஜி ஏற்படுகிறதா என்று டெஸ்ட் செய்து பின்னர் அதை தொடர்ந்து பயன்படுத்துங்கள். அவசரகால சமயங்களில் நிகழ்ச்சிகளுக்கு நீங்கள் தயாராகிக் கொண்டிருக்கும் பொழுது இந்த மாதிரி சில டிப்ஸ்கள் உங்களுக்கு உதவிகரமாக இருக்கும். மீண்டும் ஒரு நல்ல பியூட்டி டிப்ஸ் உடன் நான் உங்களை சந்திக்கிறேன் நன்றி.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன