அவசியம் முயற்சி செய்து பார்க்க வேண்டிய அழகு குறிப்புகள்.!

  • by
beauty tips that you need to follow

அனைவருமே தாம் அழகாக இளமையாக இருக்க வேண்டும் என்று ஆசைப்படுவார்கள். குறிப்பாக பெண்கள் அவர்களுடைய இயற்கை அழகை மேம்மபடுத்தும் ஆசையின் விளைவாகவே அழகு சாதனைப்பொருட்கள் பயன்படுத்துகின்றனர். அத்தகை பொருட்களை இரசாயன கலப்பினம் இல்லாமல் வீட்டில் நாமே தயார் செய்தால் சிறப்புதானே.

நீங்கள் லிப் பாம் பயன்படுத்துவீர்களா?

இதோ உங்களுக்கான தயாரிப்பு முறை. ஒரு பீட்ரூட்டை எடுத்துக்கொள்ளுங்கள். அதை மிகவும் பொடியாகத் துருவி ஒரு கிண்ணத்தில் தனியாக வைக்கவும். உறைந்தநிலையில் இருக்கும் தேங்காய் எண்ணெயை இரண்டு தேக்கரண்டி எடுத்துக்கொள்ளுங்கள். இப்பொது இரண்டையும் நன்றாக கலக்குங்கள். அது இறுகி நாம் பயன்படுத்தும் லிப் பாம் பதத்திற்கு வந்துவிடும். இதை நீங்கள் தினசரி பயன்படுத்தலாம்.

மேலும் படிக்க – ஜீன்ஸ் பேண்டில் இருக்கும் வகைகள்..!

முடி உதிர்கிறதா? கவலை எதற்கு?

நாம் அன்றாடம் பயன்படுத்தும் பெரிய வெங்காயம் இரண்டு அல்லது ஒன்று எடுத்துக்கொள்ளுங்கள். ஒரு கைப்பிடி கருவேப்பிலை நன்றாக கழுவி வைத்துக்கொள்ளுங்கள். இரண்டு கப் தேங்காய் எண்ணெய் எடுத்துக்கொள்ளுங்கள். இப்போது அடுப்பில் இரும்பு கடாய் சூடேற்றி அதில் முதலில் தேங்காய் எண்ணெயை சேர்க்கவும். கொஞ்சம் சூடான பிறகு பொடியாக நறுக்கிய பெரியவெங்காயம் மற்றும் நாம் கழுவி வைத்திருக்கும் கருவேப்பிலையை அத்துடன் சேர்த்து நன்கு வதக்கவும். வெங்காயம் பொன்னிறமாகும் வரை நன்றாக வதக்கவும். அதன்பிறகு அந்த கலவையை சிறிது நேரம் ஆறவைத்து வடிகட்டியினால் எண்ணையை மட்டும் வடிகட்டி எடுக்கவும். இந்த எண்ணையை இளசூட்டிலயே தலையில் தேய்த்து நன்றாக மசாஜ் செய்யவும். வாரம் ஒருமுறை இந்த கலவையை செய்து உபயோகப்படுத்தலாம். பெரிய வெங்காயதத்திற்கு பதில் சின்ன வெங்காயம் பயன்படுத்துவதும் சிறப்பு. வெங்காயத்தில் சல்பர் நிறைந்துள்ளது இது முடி உடைதல் மற்றும் முடியின் நுனியில் இருக்கும் வெட்டுகளை தவிர்த்து வளர்ச்சிக்கு உதவுகிறது. கருவேப்பிலையில் பீட்டா கேரோட்டின் மற்றும் புரத சத்து அதிகமாக இருக்கிறது இது முடி உதிர்வதை தடுத்து வளர்ச்சியை அதிகரிக்கப்போதோடு முடியிலிருக்கும் மெலனினை பாதுகாக்கின்றது. அதனால் இளநரையும் தவிர்க்கப்படும். இம்முறையை தொடர்ந்து முயற்சித்து பாருங்கள் கண்டிப்பாக நல்ல பயன் கிடைக்கும்.

பொடுகு தொல்லையா? இதோ அதற்கான தீர்வு..

வெள்ளரிக்காயை நன்றாக துருவி வைத்துக்கொள்ளுங்கள். அத்துடன் ஒரு முட்டை மற்றும் சிறிது உப்பு சேர்க்கவும். இவற்றை நன்றாக கலந்துக்கொள்ளுங்கள். இந்த கலவையை உங்கள் கூந்தலின் வேரில் தடவி 15 நிமிடம் ஊறவைக்கவும். அதன் பிறகு நன்றாக கூந்தலை அலசவும். இவ்வாறு வாரம் ஒருமுறை செய்து வர பொடுகு தொல்லை வராது.

நல்லெண்ணெய், தேங்காய் எண்ணெய், பாதாம் எண்ணெய், விளக்கெண்ணெய் ஆகியவற்றில் தலா ஒரு தேக்கரண்டி எடுத்துக்கொள்ளவும். இந்த கலவையை இரும்பு கடாயில் சூடேற்றவும். மிதமான சூட்டில் காட்டன் மூலம் கூந்தலின் வேரில் நன்றாக மசாஜ் செய்துவர நாளடைவில் பொடுகு தொல்லை மறைந்துவிடும்.

மாய்ச்சுரைசர் உபயோகிப்பீர்களா?

வீட்டிலேயே உங்கள் மாய்ச்சுரைசரை தயாரிப்பதற்கான முறை. உலர்ந்த ரோஜாப்பூவின் இதழ்கள் மற்றும் 5தேக்கரண்டி பால் ஆகியவற்றை எடுத்துக்கொள்ளவும். இதை நன்றாக அரைத்து அதன் சாற்றை வடிகட்டி எடுத்துக்கொள்ளவும். இந்த கலவையுடன் சிறிது ஜோஜுபா எண்ணெய் சேர்த்து நன்றாக கிளறவும். கத்தாழையிலிருக்கும் ஜெல்லியை மற்றும் எடுத்து இந்த கலவையுடன் சேர்த்து நன்று கலக்க நாம் அன்றாடம் பயன்படுத்துவதற்கான மாய்ச்சுரைசர் தயார். உலர் சருமத்தை பொலிவு பெற செய்வதுடன் நறுமணம் கமழும் இரசாயனம் கலக்கப்படாத மாய்ச்சுரைசரை பயன்படுத்திப்பாருங்கள் கண்டிப்பாக மாற்றத்தை உணர்வீர்கள்.

வெயிலின் வெளிப்பாட்டினால் சருமம் கன்றுபோய்விடுகிறதா(சன் பர்ன்)? இதோ அதற்கான தீர்வு.

நமது சருமத்தை குளுமை படுத்த உகந்தது வெள்ளரிக்காய். அதை நன்றாக துருவி அத்துடன் சிறிது கத்தாழை ஜெல்லியை சேர்த்துக்கொள்ளவும். இவற்றுடன் சிறிது குளிர்ந்த நீர் சேர்த்து நன்றாக அரைத்து அதன் சாறை எடுத்துக்கொள்ளுங்கள். கன்றிப்போயிருக்கும் இடங்களில் இந்த சாறை உபயோகிக்கவும். மூன்றே நாட்களில் சிவந்திருத்தல் இயல்பான சருமத்திற்கு மாறிவிடும்.

மேலும் படிக்க – சினிமா நட்சத்திரங்களை போல் ஜொலிக்க சில அழகு குறிப்புகள்!!!

கருவளையம் இருக்கிறதா?

பெரும்பாலும் கருவளையம் தூக்கமின்மை மாற்றும் அதிக வேலைப்பளுவினாலையே ஏற்படும். நேரத்திற்கு ஏற்ற உணவு மற்றும் தூக்கம் இதற்கான நிரந்திர தீர்வு. தினசரி உருளைக்கிழங்கின் சாறை கண்களின் அடியில் தேய்த்து வர மாற்றத்தை உணரலாம். வெள்ளரிக்காயின் மகத்துவமும் இதற்கு உதவும். தினசரி காலையில் ஒரு துண்டு வெள்ளரிக்காயை கண்களில் வைத்து வர கண்கள் குளுமையாகி நாளடைவில் கருவளையம் மறைந்துவிடும்.

இந்த குறிப்புகளை பயன்படுத்தி பாருங்கள் கண்டிப்பாக உபயோகமானதாக இருக்கும். உடல் மற்றும் சரும ஆரோக்கியம் மிகவும் அவசியம்.எனவே அதிக இரசாயன கலப்பினமில்லாத பொருள்களை உபயோப்பது சாலச்சிறந்தது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன