ஆண்களுக்கான அழகுக் குறிப்பு..!

  • by
beauty tips for men

அழகு என்பது ஆண், பெண் இருவருக்கும் சமமான ஒன்று. இருந்தாலும் பெண்கள், அழகு என்பது அவர்களுக்கானது என்ற கர்வத்தில் வாழ்ந்து வருகிறார்கள். ஆனால் உண்மையில் பெண்களைக் காட்டிலும் ஆண்களுக்கும் அழகு மிக முக்கியமான ஒன்று. எனவே இவர்கள் வீட்டில் இருந்தபடியே எளிமையான முறையில் எப்படி உங்கள் அழகை அதிகரிக்கலாம் என்பதை இந்த பதிவில் காணலாம்.

தக்காளி ஃபேஸ் பேக்

தக்காளி ஃபேஸ் பேக் செய்வதற்கு நீங்கள் முதலில் தக்காளியை நன்கு அரைத்துக் கொண்டு, அதை வடிகட்டி வைத்துக்கொள்ள வேண்டும். பின்பு அதில் சிறிதளவு அரிசி மாவு மற்றும் கொதிக்க வைத்த கிரீன் டீயை சேர்க்க வேண்டும். கடைசியாக அதில் எலுமிச்சை சாறு சிறிதளவு சேர்த்து முகத்தில் ஃபேஸ் பேக் போட வேண்டும். ஃபேஸ் பேக் போடுவதற்கு முன்பாக ஆவி பிடித்தாள் அது கூடுதல் அழகை உங்களுக்குத் தரும்.

மேலும் படிக்க – கோடைகால சரும பராமரிப்பு குறிப்புகள்

கரும்புள்ளியை அகற்ற

உங்கள் முகத்தில் உள்ள கரும்புள்ளியை அகற்ற வேண்டும் என்றால் சிறிதளவு தக்காளிச்சாறு, ஓட்ஸ் மற்றும் சிறிதளவு எலுமிச்சை சாறை ஒன்றாக கலந்து முகத்தில் தடவிக் கொள்ள வேண்டும். மேலும் சிறிதளவு அதை முகத்தில் நன்கு தேய்த்து மசாஜ் செய்ய வேண்டும். இதன் மூலமாக உங்கள் சருமத்தில் இருக்கும் இறந்த செல்கள் அனைத்தும் விலகி கரும்புள்ளிகளை அகற்றும்.

பொலிவான சருமம்

இயல்பு நிலையை விட உங்கள் சருமம் பொலிவாக தெரிய வேண்டுமா, அதற்கு நீங்கள் துவரம் பருப்பை நன்கு அரைத்துக்கொண்டு அதில் சிறிதளவு அரிசி மாவு, அரைத்த ஆரஞ்சு பழத்தோல், பின்பு சிறிதளவு முல்தானிமட்டி, தேன் மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்து ஒன்றாக கலந்து முகத்தில் பேக் போட்டு கொள்ளுங்கள். 20 நிமிடங்கள் கழித்து வெதுவெதுப்பான நீரில் முகத்தைக் கழுவி உங்கள் பொலிவை நீங்கள் உணரலாம்.

முகப் பருக்களை அகற்ற

உங்கள் முகத்தில் இருக்கும் பருக்களை அகற்றுவதற்கு நீங்கள் சிறிதளவு அரிசி மாவு, சிறிதளவு தயிர் மற்றும் சோடா உப்பை ஒன்றாக கலந்து கொள்ள வேண்டும். பிறகு அதை உங்கள் முகத்தில் தேய்த்து 15 நிமிடங்கள் காயவிட வேண்டும், இறுதியாக வெதுவெதுப்பான நீரில் கழுவுங்கள். சோடா உப்பு உங்கள் பருக்களை உடனடியாக குணப்படுத்தும் தன்மையுடையது.

முகச் சுருக்கங்கள்

ஒரு சில ஆண்களுக்கு மிகப்பெரிய பிரச்சினையாக இருப்பது முகத்தில் ஏற்படும் சுருக்கங்கள். இளமையில் இதுபோன்ற சுருக்கங்கள் ஏற்படுவதைத் தடுக்கும் சக்தி பப்பாளி இலைக்கு உண்டு. நான்கு அல்லது ஐந்து பப்பாளி இலைகளை எடுத்து அதை சிறிதாக நறுக்கி தண்ணீரில் நன்கு கொதிக்கவிடவும். பிறகு அந்தத் தண்ணீரை வடிகட்டி குடித்து வந்தால் முகத்தில் ஏற்படும் சுருக்கங்கள் இயற்கையாக குறையும்.

மேலும் படிக்க – கோடை காலத்தில் உங்கள் அழகை பராமரிப்பது எப்படி..!

வறண்ட சருமத்தை அகற்ற

வறண்ட சருமம் உடையவர்களுக்கு அவ்வப்போது தோள்களில் பாதிப்புகள் ஏற்படும். எனவே இவர்கள் இதை தயிர் மற்றும் ஆலிவ் எண்ணெய் கொண்டு எளிமையாக அகற்ற முடியும். நீங்கள் சிறிதளவு தயிர் பிறகு அதில் ஆலிவ் எண்ணெய் சேர்த்துக் கொள்ள வேண்டும். பிறகு சிறிதளவு எலுமிச்சை சாறு மற்றும் பாதாம் பருப்பு பொடி அதில் சேர்த்து நன்கு கலக்கி முகத்தில் பேஸ் பேக் போடவேண்டும். 20 நிமிடங்கள் கழித்து முகத்தை இதமான சூடு உள்ள தண்ணீரில் கழுவுங்கள். இதனால் வரட்சி விலகி உங்கள் சருமத்தில் ஈரப்பதம் அதிகரிக்கும்.

மேலே குறிப்பிட்டுள்ள குறிப்புகள் அனைத்தையும் பெண்களும் பயன்படுத்தலாம். எனவே ஆண் பெண் பாகுபாடு இல்லாமல் இருவரும் பயன்படுத்தக்கூடிய இந்த இயற்கை ஃபேஸ் பேக்கை வீட்டில் செய்து உங்கள் முக அழகை அதிகரியுங்கள்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன