கோடை காலத்தில் உங்கள் அழகை பராமரிப்பது எப்படி..!

  • by
beauty tips for ladies to follow during summer season

குளிர்காலம் முடிந்து, கோடை காலம் தொடங்கி உள்ளதால் பெண்கள் அனைவரும் ஏராளமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை செய்து வருகிறார்கள். இன்னும் சில நாட்களில் ஊரடங்கு முடிவிற்கு வருவதினால் பெண்கள் கோடை காலத்தில் வெளியே செல்லும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதை பாதுகாப்பாகவும் மற்றும் எந்த ஒரு பாதிப்பும் இல்லாமல் பெண்கள் தங்கள் சருமத்தை எப்படி பாதுகாக்க வேண்டும் அதற்கு வீட்டில் இருந்தபடி என்னென்ன செய்ய வேண்டும் என்பதை இந்த பதிவில் காணலாம்.

மாய்ச்சுரைசர் செல்

கோடை காலத்தில் உருவாகும் வெயில் உங்கள் உடலை வெப்பமடையச் செய்யும், இதைத் தவிர்த்து சருமத்தின் தன்மையை மாற்றியமைத்து உடலில் எண்ணெய்ப் பசையை அதிகரிக்கும். இதனால் பெண்கள் கோடைக்காலங்களில் மாய்ஸ்சுரைசர் க்ரீம்களை பயன்படுத்துவதை தவிர்த்து மாய்ச்சுரைசரை ஜெல்களை பயன்படுத்த வேண்டும். ஜெல்லானது உங்கள் சருமத்தை உடனடியாக குளிர்ச்சியடையச் செய்து ஈரப்பதத்தை அளிக்கும்.

மேலும் படிக்க – லாக்டவுன் சமயத்தில் உங்களை அழகாக வைத்துக் கொள்வது எப்படி..!

ஸ்க்ரப் செய்யுங்கள்

கோடைக் காலங்களில் வாரத்திற்கு 2 முறையாவது நாம் ஸ்கரப் செய்ய வேண்டும். வெயிலின் தாக்கத்தினால் நம் சருமத்தில் பாதிப்பு அதிகரித்து, இறந்த செல்கள் மற்றும் அழுக்குகளை அதிகமாகச் உருவாக்கும். இதை தடுப்பதற்கு நீங்கள் க்ரப் செய்ய வேண்டும். இதன் மூலமாக சருமத்தில் இறந்த அனைத்து செல்களையும் அகற்றி அழுக்குகளையும் விளக்கும். இதைத்தவிர்த்து நீங்கள் இழுந்த நிறத்தையும் மீட்டுத்தரும்.

ஆல்கஹால் சீரம்

கோடைக் காலங்களில் உண்டாகும் சரும பிரச்சனையை சாதாரண தண்ணீரைக் கொண்டு அகற்றாமல் ஆல்கஹால் சீரம் போன்றவற்றை பயன்படுத்துங்கள். இது உங்கள் சருமத்தில் உண்டாகும் எண்ணெய் தன்மையை முழுமையாக உறிஞ்சும். அதைத் தவிர்த்து உங்கள் சருமத்தை பளபளப்பாகவும் எப்போதும் பொலிவாகவும் வைத்துக் கொள்ளும்.

வைட்டமின் சி

பெண்கள் முகத்திற்கு பயன்படுத்தப்படும் சீரத்தில் வைட்டமின் சி உள்ளத என்பதைப் பார்த்து தேர்ந்தெடுங்கள். இது உங்கள் சருமத்தில் உண்டாகும் நிற திட்டுக்களை தடுத்து, சருமத்தில் உள்ள கோடுகளையும் அகற்றுகிறது. இது அனைத்திற்கும் மேலாக உங்கள் சருமம் விரைவில் தோய்வடைவதை தடுக்கும். இதனால் உங்கள் சருமம் எப்போதும் இளமையாக இருக்கும். உங்கள் முகத்தை நன்கு சுத்தப்படுத்திய பிறகு இந்த சீரகத்தைப் பயன்படுத்துங்கள், அதன் பிறகு மாய்ஸ்சுரைசர் க்ரீம்களை போட வேண்டும்.

கோடைக்கால பருக்கள்

கோடைக்காலங்களில் உள்ள வெப்பத்தினால் உங்கள் முகத்தில் பருக்கள் உண்டாகலாம். இதைத் தடுப்பதற்கு பருக்களை ஒழிக்கும் சாலிசிலிக் அமில க்ளீன்சரை பயன்படுத்துங்கள். இது உங்கள் சருமத்தில் உள்ள துளைகளை அடைத்து பருக்கள் வருவதை முழுமையாக தடுக்கும். இதற்கு மாற்றாக நீங்கள் யூகலிப்டஸ் எண்ணெயும் பயன்படுத்தலாம்.

மேலும் படிக்க – ஷாப்.ஸ்பார்க்கில் டீப் ஹேர் மாஸ்க் வாங்குங்க!

தண்ணீர் அவசியம்

கோடைக்காலங்களில் முடிந்தவரை குளிர்ந்த நீரில் குளியுங்கள், காலை மற்றும் இரவு உறங்குவதற்கு முன்பு இரண்டு வேளை குளிப்பது மூலமாக உடல் உஷ்ணம் அனைத்தும் குறைந்து நிம்மதியான உறக்கத்திற்கு வழிவகுக்கும். அதேபோல் சருமத்தில் ஏற்பட்டிருக்கும் அழுக்குகள் போன்ற அனைத்தையும் குளிப்பதன் மூலம் அகற்ற முடியும். வீட்டில் இருந்தாலும் சரி, வெளியே சென்றாலும் சரி, இச்சமயத்தில் அதிகமான நீராகாரத்தை எடுத்துக் கொள்ளுங்கள். கோடைக்காலங்களில் நாம் குறைந்தது ஐந்து லிட்டர் தண்ணீராவது குடிக்க வேண்டும். இல்லையெனில் நீர் சக்தி அதிகமாக உள்ள உணவுகள் எடுத்துக்கொள்ளுங்கள்.

இது அனைத்திற்கும் மேலாக வெளியே செல்வதாக இருந்தால் சன் ஸ்கிரீனை பயன்படுத்துங்கள். உங்கள் முகம், கைகள், கால்கள் என சூரிய ஒளி படும் அனைத்து இடங்களிலும் சன் ஸ்கிரீனை பயன்படுத்த வேண்டும். இதன் மூலமாக சூரிய ஒளியால் ஏற்படும் பாதிப்புகளும் குறையும். எனவே பெண்கள் இந்த கோடை காலத்தை இந்த வழிகளை பின் தொடர்ந்து சரியாக கடக்க வேண்டும். அதேபோல் இந்த வழிகளை உங்களுக்கு தெரிந்தவர்களுக்கும் பகிர்ந்து கோடைகால பிரச்சினைகளில் இருந்து அவர்களை காப்பாற்றுங்கள்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன