மணப்பெண்களே உங்களுக்கான பிரத்தியேக டிப்ஸ்.!

  • by
makeup tips for bride

திருமணம் என்பது ஒரு பெண்ணின் வாழ்வில் நடைபெறும் ஒரு முக்கிய நிகழ்வாகும். எந்த ஒரு பெண்ணும் தனது திருமணத்தின்போது மிகவும் அழகாக இருக்க வேண்டும் என்று உள்ளுணர்வு கொள்வாள். நாம் அழகாக இருப்பதற்கு நாம் வாழும் ஒரு வழுக்கை முறையும் முக்கிய காரணமாகும். 

உணவு பழக்கம் 

ஆரோக்கியமான சருமத்தைப் பொறுத்தவரை, சீரான உணவு பழக்கங்கள் மிக முக்கியமான இடத்தை வகிக்கிறது. திருமண நாளில் உங்கள் சருமத்தில் இயற்கையான பளபளப்பு இருக்க வேண்டுமானால், ஆரோக்கியமான உணவு பழக்கங்களை பழப்படுத்திக்கொள்ளுங்கள். தண்ணீரை முறையாக அருந்துங்கள், சத்தற்ற மற்றும் துரித உணவுகளை சாப்பிடுவதை அறவே தவிர்த்திடுங்கள், அதிகமாக பழங்கள் மற்றும் காய்கறிகளை சாப்பிடும் பழக்கத்தை கொண்டு வாருங்கள், அதிகப்படியான இனிப்பு பதார்த்தங்கள் மற்றும் உவர்ப்பு நிறைந்த  பதார்த்தங்கள் உட்கொள்ளலை குறைக்கவும். ஆரோக்கியமான மற்றும் பளபளப்பான சருமத்தைப் பெற உடலுக்கு ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் சரியான தாதுக்களின் எண்ணிக்கையை வழங்குவது மிக முக்கியம் ஆகும்.

மேலும் படிக்க – கோல்டன் ஃபேஸ் மாஸ்க்கை வீட்டில் தயாரிப்பது எப்படி ?

மசாஜ் 

சருமத்தில் காணப்படும் இறந்த செல்கள் மற்றும் பிளாக்ஹெட்ஸிலிருந்து உங்கள் சருமத்தை சரிசெய்ய இது ஒரு சிறந்த நுட்பமாகும். இது உங்கள் சருமத்தின் சோர்வான மற்றும் கருமை தன்மையை நீக்குகிறது. மென்மையான ஃபேஸ் வாஷைப் பயன்படுத்துவதற்கு முன்பு, முகத்தை கழுவ வாரத்திற்கு இரண்டு அல்லது மூன்று முறை உங்கள் சருமத்திற்கு பயன்படுத்த ஒரு ஆர்கானிக் ஸ்க்ரப் தேர்வு செய்து கொள்ளலாம். ரசாயனங்கள் நிரம்பிய தயாரிப்பு பொருட்களை பயன்படுத்துவதை நிறுத்துங்கள். அதற்கு பதிலாக மூலிகை தன்மை நிறைந்த இயற்கையாக கிடைக்கும் பொருட்களை பயன்படுத்துங்கள்.

கிளென்சிங் , டோனிங் மற்றும் ஈரப்பதமூட்டுதல்

சடங்குகள் நடக்கும் தருணத்தில், கிளென்சிங், ஈரப்பதமாக்குதல் மற்றும் டோனிங் போன்றவை ரெகுலராக பயன்படுத்தும் அடிப்படையில் இருக்க வேண்டும். இது உங்கள் சருமத்தை பிரெஷாகவும், இளமையாகவும் வைத்திருக்க உதவுகிறது. கிளென்சிங் முறை சருமத்தில் உள்ள அழுக்கை போக்க உதவுகிறது. டோனிங் நேர்த்தியாக முகத்தில் ஏற்படும் கோடுகளைக் குறைத்து சருமத்தை இறுக்கமாக்குகிறது மற்றும் சருமத்தில்  ஏற்படும் சுருக்கங்கள் மற்றும் தொய்வைத் தவிர்க்கிறது. ஈரப்பதமூட்டுதல் சருமத்தை மென்மையாகவும் மிருதுவாகவும் வைக்க உதவுவதோடு சருமத்தில் ஏற்படும் வறட்சியைத் தடுக்க உதவுகிறது.

கேசம் சார்ந்த சிகிச்சைகள்

கேசம் என்பது ஒரு பெண்ணுக்கு தனி அழகை கொடுக்கிறது. பெண்களின் அழகை மேம்படுத்துவதில் இது முக்கிய பங்கு வகிக்கிறது. எனவே, முறையான பராமரிப்பு  மற்றும் சரியான சிகிச்சையானது கேசத்தை மென்மையாகவும், நேர்த்தியாகவும் வைத்திருக்க உதவுகிறது. கேசத்தில் மென்மையைப் பெற சரியான தரம் வாய்ந்த தயாரிப்புகளைத் பயன்படுத்துவத்திற்கு தேர்ந்தெடுக்கவும்.

புரதம் மற்றும் கெரட்டின் சிகிச்சைகள் மூலம் உங்கள் தலைமுடியை ஆரோக்கியமாக வைத்திருக்க முடியும். கெமிக்கல் நிறைந்த சாதனங்களை தலை முடிக்கு பயன்படுத்துவதை விட,வீட்டில் உள்ள வெந்தயம் போன்ற பொருட்களை பயன்படுத்துதல் நல்லது.

நீங்கள் விரும்பிய கேசத்தை பெற  சரியான ஹேர் ஆயிலிங், கண்டிஷனிங் மற்றும் ஷாம்பு தேர்வு செய்வது முக்கியம். உங்கள் திருமணத்திற்கு வித்தியாசமான மற்றும் அழகான ஹேர் ஸ்டைலுக்காக ஹேர் கலரிங், எக்ஸ்டென்சோ அல்லது ரீபவுண்டிங் ஆகியவற்றிற்கும் செல்லலாம்

ஜிம் & தியானம்

நீங்கள் ஒரு கட்டமைப்பான உடலை பெற விரும்பினால், திருமண நாளுக்கு குறைந்தது 6 மாதங்களுக்கு முன்பு உடற்பயிற்சி கூடத்திற்குச்  செல்வதை பழக்கப்படுத்த வேண்டும். 

குறைந்தது தினமும் சுமார் 15 நிமிடங்கள் தியானிப்பதை பழக்கப்படுத்திக்கொள்ளுங்கள். இதன் மூலம், உங்கள் மன அழுத்தத்தைத் தவிர்க்கவும் மற்றும் உங்கள் மனதை அமைதியாக வைத்திருக்க முடியும்.

மேலும் படிக்க – சரும அழகை அதிகரிக்க உதவும் விளக்கெண்ணெய்..!

சரியான தூக்க முறை

உங்கள் திருமண தினத்தில் உங்கள் சருமத்தை பளபளக்கச் வைத்திருக்க வேண்டுமானால் குறைந்தபட்சம் 8 மணிநேரம் சரியான தூக்கம் முறை உங்களுக்கு அவசியம் ஆகும். உறக்கம் என்பது இப்போதைய காலகட்டத்தில் ஆரோக்கியத்தின் மூன்றாவது முக்கிய விஷயமாக கருதப்படுகிறது. நமது மூளை மற்றும் மத்திய நரம்பு மண்டலத்தை அமைதிப்படுத்துவதன் மூலம் மன அழுத்தத்தை குறைக்க ஒரு சரியான தூக்க பழக்கம் நமக்கு உதவுகிறது. 

எல்லாவற்றயும் விட அகத்தின் அழகு உங்கள் முகத்தில் வெளிப்படும். அதனால் எப்போதும் உங்கள் மனதை சந்தோசமாக வைத்திருங்கள். தேவையற்ற டென்ஷன்களை தவிர்த்திடுங்கள். உங்கள் வாழ்நாளில் நடக்கப்போகும் மிகப்பெரிய நிகழ்வு இது எனவே சந்தோசமாக கொண்டாடுங்கள்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன