கேரளா பெண்கள் தேவதையாக இருப்பதற்கு இதுதான் காரணம்.!

  • by
beauty secrets of kerala girls

தமிழ் பெண்கள் எவ்வளவுதான் அழகாக இருந்தாலும் தமிழக ஆண்கள் மயங்குவது கேரளத்து பெண்களிடமே. இதனால்தான் சினிமா உலகில் கூட கேரளாவை சேர்ந்த பெண்களுக்கு அதிகமான வாய்ப்புகளை தருகிறார்கள். ஏன் கேரளா பெண்கள் இவ்வளவு அழகாக இருக்கிறார்கள். அவர்களின் அழகிற்க்கான காரணம் என்ன என்பதை இந்த பதிவில் காணலாம்.

கேரளப் பெண் அழகு காரணம்

கேரளத்து பெண்கள் அழகாக இருப்பதற்கு அவர்களின் நீளமான கூந்தல் அவர்களின் பெரிய கண்கள் மற்றும் மென்மையான சருமம்தான் காரணம். இதை போல் உங்களுக்கும் சருமம் மற்றும் கூந்தல் அழகை சில குறிப்புகள் மூலமாக பெறலாம்.

மேலும் படிக்க – இளநரையை விரட்டணுமா? அப்ப இந்த எளிய வழிகளை முயற்சி செய்து பாருங்க..!

கூந்தல் அழகு

தேங்காய் எண்ணெய் உற்பத்தி அதிகமாக செய்யப்படும் மாநிலங்களில் கேரளா உள்ளது. எனவே இங்கு பெண்கள் தேங்காய் எண்ணெயை தலையில் தேய்த்து ஷாம்பு ஏதும் பயன்படுத்தாமல் அப்படியே குளிப்பார்கள். இதனால் இவர்கள் கூந்தல் மிக ஆரோக்கியமாக உள்ளது. இதுவே அவர்களின் கூந்தல் கருமையாகவும் நீளமாக வளர்வதற்கு காரணமாக உள்ளது.

ஷாம்பூக்கு பதிலாக ஒரு சில பெண்கள் சீயக்காயை பயன்படுத்துகிறார்கள். இவர்கள் கூந்தல் ஆரோக்கியத்தை அதிகப்படுத்துகிறது. இதனால் நீளமான மற்றும் கருமையான கூந்தல் இயற்கையாகவே இவர்களுக்கு கிடைக்கிறது.

மேலும் படிக்க – இதழ்களுக்கு அழகு இந்த லிக்வ்யூடு லிப்ஸ்டிக் டிரெண்டிங்

சரும அழகு

கேரளா பெண்கள் தங்களது சரும அழகைப் பெறுவதற்காக தினமும் குளிப்பதற்கு பத்து நிமிடத்திற்கு முன்பாக கற்றாழை ஜெல்லைப் பயன்படுத்து உடல் முழுக்க ஊற வைத்து மஞ்சள் தேய்த்து குளிக்கிறார்கள் இதன்  மூலம் அவர்களின் சருமம் மென்மையாகவும், பொலிவுடனும் இருக்கிறது.

கேரள பெண்கள் வாரத்திற்கு ஒரு முறையாவது கடலை மாவை கொண்டு ஃபேஸ் பேக் போடுவார்கள். இதனால் இவர்கள் சருமத்தில் கருமை, கரும்புள்ளிகள் போன்ற எதுவும் அண்டாமல் எப்போதும் பளபளப்பாக இருக்கிறார்கள்.

ஒருசில கடலைமாவுடன் ரோஸ் வாட்டரை கலந்து பயன்படுத்துவார்கள். இதுவும் சரும ஆரோக்கியத்திற்கு உகந்ததாகும்.

மேலும் படிக்க – நைட் க்ரீம் செய்யும் அற்புதத்தை பாருங்கள்..!

கண்கள் அழகு

கேரளத்து பெண்களின் கண்கள் எப்பொழுதும் ஆண்களை ஈர்க்கும் அளவுக்கு கருமையாக இருக்கும். இதற்கு காரணம் அவர்கள் கடைகளில் விற்கப்படும் அழகு சாதனப் பொருட்களைப் பயன்படுத்தாமல் வீட்டிலேயே கண்மை போன்றவைகளை தயாரித்து பயன் படுத்துவார்கள்.

எனவே கேரளத்து பெண்கள் தங்கள் அழகை இயற்கை மூலமாக அதிகரிக்கிறார்கள் ஒரு சிலர் தங்கள் சரும அழகை அதிகரிப்பதற்காக சந்தனக்கட்டையை தண்ணீரில் ஊறவைத்து முகம் கழுவி உறங்குவார்கள். அதேபோல் தலைகள் மற்றும் கூந்தலுக்கு செம்பருத்திப்பூ, சீயக்காய் என இயற்கை எண்ணெய் என இதுபோன்று பராமரிப்பதினால் அவர்கள் மற்ற மாநில பெண்களை விட மிக அழகாக இருக்கிறார்கள்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன