மே 3க்குப்பின் கவனமாக பாதுகாப்பாக வீட்டில் இருக்கவும்.

  • by

இந்தியாவில் கொரானாவின் தாக்கம் மேலும் அதிகரிக்க கூடும் இந்தியா மூன்றாவது கட்டத்திற்கு சென்றுவிட்டது மேலும் இந்த  வைரஸின் தொற்றானது குறைந்த பாடில்லை. சிகிச்சைகள் முறையாக வழங்கப்பட்டாலும் இதன் தாக்கம் குறையவில்லை. 30 ஆயிரத்தை தொட்டு கொரானா பல்லிளிக்கும் என்பது தெளிவாக தெரிகின்றது. 

முதலமைச்சர்களுடனான வீடியோ கான்பிரான்சின் பொழுது  போது மே 3 க்குப் பிறகு கோவிட் -19 ஹாட்ஸ்பாட்களில்  ஊரடங்கு மற்றொரு விரிவாக்கம் குறித்து பிரதமர் நரேந்திர மோடி திங்களன்று   கலந்துரையாடியுள்ளார்.  லாக் டவுன்  கொள்கையைத் தயாரிக்கும்படி கேட்டுக்கொண்டபோது, ​​கொரோனா வைரஸ் தொற்றுநோயைக் கட்டுப்படுத்த இந்தியா முழுவதும் மாநிலங்கள் மேற்கொண்ட முயற்சிகளையும் பிரதமர் பாராட்டி நாட்டை காக்க வேண்டுமெனில்  ஆக்கப்பூர்வமான  வழிநடத்தல் அவசியம் என்பதை சுட்டிக்காட்டியுள்ளார். 

ஊரடங்கு  நீட்டிப்பு தொடர்பாக முதலமைச்சர்களுடனான மறுஆய்வுக் கூட்டத்தில், பிரதமர் கூறுகையில், மாநிலங்களின் கூட்டு முயற்சிகள் தற்போதைய நெருக்கடியை நிர்வகிக்க உதவியுள்ளதாகும், மேலும் மாநில அரசுகள் எடுத்த நடவடிக்கைகளால் ஆயிரக்கணக்கான உயிர்கள் காப்பாற்றப்பட்டுள்ளன என்பதை  பிரதமர் வலியுறுத்தி பாராட்டினார். 

ஊரடங்கை நீட்டிக்க ஆலோசனை:

பிரதமர் மோடி  ஊரடங்கால் முடங்கி கிடக்கும் நாட்டின் மக்கள் மற்றும் தொழில்கள் வேலைகள் மற்றும் பொருளாதாரத்திற்கும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்றார். தொழில்நுட்பத்தின் பயன்பாட்டின் முக்கியத்துவத்தையும், சீர்திருத்த நடவடிக்கைகளைத் தழுவுவதற்கு நேரத்தைப் பயன்படுத்துவதையும் அவர் வலியுறுத்தினார். இதன் மூலம் அடுத்த லாக்டவுனில் சில துறைகளுக்கு சலுகை வழங்கி லாக்டவுனை மேலும் அதிகப்படுத்தலாம் என்றத் தகவல்கள் கிடைத்த வண்ணம் உள்ளன. 

 நாட்டின்  பெரும்பகுதி  தொழிகள், வேலைகள், மந்தநிலை தொடர்ந்தால் வேலை இழக்கும் கோடிக்கணக்கான மக்களுக்கு நிவாரணம் வழங்க மத்திய அல்லது மாநில அரசுகளுக்கு சாத்தியமில்லை; உண்மையில், சில சிறந்த நிறுவனங்கள் கூட சப்ளையர்களிடமிருந்து வாங்குவதை நிறுத்துவதாக அறிவித்திருந்தால், அமைப்புசாரா துறையில் உள்ள சிறிய நிறுவனங்கள் எதை நோக்கிச் செல்லும் என்பதை கற்பனை செய்வது எளிது. ஆனால், உற்பத்தியை மறுதொடக்கம் செய்ய அனுமதிக்க இந்த வாதத்தைப் பயன்படுத்துவதால், ஒரு பெரிய தொற்றுநோயை எதிர்கொள்ள வேண்டிய அவசியம் இல்லை, மாதிரிகள் பரிந்துரைக்கின்றன, அனைத்து இந்தியா முழுவதும்   குறைந்த சதவீதம் நோய்த்தொற்று ஏற்படலாம்.  ஆனால் அதனால் ஏற்படும் இழப்பை மக்கள் சமாளிக்க அரசானது வழி நடத்தி உதவ் வேண்டும். 

மேலும் படிக்க:என்றும் பதினாறாக பளப்பளக்க இதை செய்யுங்க

சேமிப்பு:

மக்கள்  தங்கள் சேமிப்பை இந்த  காலத்தில் பயன்படுத்தலாம். அத்தியாவசியம் தவிர மற்ற வீண் செலவுகளை தவிர்க்க வேண்டும்.  இது சிறப்பானது ஆகும். கல்வி செலவு, வீட்டு நிர்வாக செலவு, மருத்துவ செலவுக்கு முக்கியத்துவம் கொடுங்கள் மற்றப்படி வீட்டில் எதேனும் விழாக்கால திட்டம் இருந்தால் அதனை  அடுத்த ஆண்டு தள்ளிப் போடுங்கள். தற்சார்பு பொருளாதாரக் கொள்கையைப் பின்பற்றி செலவை குறைத்து  தேவையை செலவில்லாமல் நிறைவேற்றுவது குறித்து திட்டமிடுங்கள்.   

மே 3க்கு பிறகு  சமையலில் கீரை,   மிளகு ரசம், மூலிகை  தேநீர்,   வீட்டில் இருந்து  செய்ய வேண்டிய சிறிய அளவில் உடற் பயிற்சி அவரவர்களுக்கான இறை வழிபாடு இயற்கை வழிபாடு செய்யலாம்.  மன உலைச்சலை தவிர்க்கவும்.  நல்ல  புத்தகங்கள படிக்கவும். ஆரோக்கியமாக இருக்க முயற்சிக்க வேண்டும். 

பாசிட்டிவிட்டி:

பாசிட்டிவாக இருக்க  முயற்சி செய்யபும். இதுதான்  உங்களுக்கு சிறந்த பலனை கொடுக்கும். தேவைப்படுவோர்க்கு சிறிதளவேனும் உதவி செய்ய வேண்டும். பறவைகளுக்கு நீர் சிறிதேனும் சாதம் தினமும் வீட்டுக்கு வெளியே வைத்து வர சுற்றுப்புற  உயிர்களுக்கு உதவுங்கள். உங்களால் இயன்ற தொகையை அரசின் கொரானா நிதிக்கு அனுப்புங்கள். 

 காவல்த்துறையின்  பாதுகாப்பு பணிகளுக்கு மதிப்பு கொடுத்து பொறுப்புடன் வீட்டில் இருந்து கழிக்க வேண்டும்.   இந்த லாக்டவுனில் பாதுகாப்பு அவசியம் ஆகும். அதனால்  அரசுக்கு ஒத்துழைக்க வேண்டும். 

மேலும் படிக்க:மனிதனை சீராக இயக்க வைக்கும் மனதை வழி நடத்தும் ரிகி ஜார்ஜ் !

Tags:

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன