வேலை தேடும் ஆண்களுக்கு இது அவசியம்!

  • by

ஆண்களின் வாழ்க்கையில் பாதி வருடங்கள் வேலைக்கு செல்வதும், பின்பு அந்த வேலையை தேடுவதுமாகவே இருக்கிறது. ஆனால் ஒரு சில ஆண்களுக்கு இன்று வரை வேலை கிடைக்காமல் கஷ்டப்பட்டு வருகிறார்கள். அவர்கள் அப்படி என்ன தவறு செய்துள்ளார்கள், இல்லையெனில் இதன் பிறகு என்ன செய்ய வேண்டும் என்பதை தெளிவாக இந்த பதிவில் காணலாம்.

வேலைக்கு செல்ல விரும்புபவர்கள் முதலில் என்ன வேலை செய்ய வேண்டும் என்பதை தீர்மானிக்க வேண்டும். ஒருசிலர் அவர்களின் படிப்பிற்கேற்ற வேலையை தேர்ந்தெடுப்பார்கள், மற்றவர்கள் மனசுக்கு பிடித்த வேலையை தேர்ந்தெடுப்பார்கள். இப்படி நீங்கள் எந்த வேலையை தேர்ந்தெடுக்கிறீர்களே அதில் முழு கவனத்தை செலுத்த வேண்டும்.

முதல்முறையாக வேலைக்கு செல்பவர்கள் தங்களின் தற்குறிப்பை சரியாக தயார் செய்ய வேண்டும். முதலில் உங்களின் அடையாளத்தை தெரிவிக்க வேண்டும் பின்பு நீங்கள் எந்தவித வேலையை செய்வீர்கள் என்பதையும், அந்த வேலையில் உங்களின் பங்கு என்ன என்பதை தெளிவாக விவரிக்க வேண்டும். அது மட்டுமல்லாமல் மற்றவர்களை காட்டிலும் இந்த வேலையில் நீங்கள் இருந்தால் என்னவெல்லாம் செய்வீர்கள், எதையெல்லாம் சாதிப்பீர்கள் என்பதை விவரித்து எழுத வேண்டும். சில சமயங்களில் இந்த செயல் கூட உங்களுக்கு வேலை வாங்கித் தர உதவும்.

மேலும் படிக்க – வாழ்வில் யோகம் பெற யோகா செய்யுங்க

வேலை தேடுவதற்கு முன்பு உங்களுக்கு தெரிந்தவர்களிடம் கேளுங்கள், அவர்கள் அலுவலகத்தில் அல்லது அவர்களுக்கு தெரிந்த அலுவலகத்தில் ஏதாவது வேலை இருக்கிறதா என்று. எனவே ஏற்கனவே ஒருவர் வேலை செய்யும் இடத்தில் நீங்கள் வேலைக்கு செல்வதாக இருந்தால் உங்களை அவர் சிபாரிசு செய்யுமாறு கேட்டுக் கொள்ளுங்கள்.

நேர்காணலுக்கு செல்லும் முன்பு உங்கள் சமூக வலைத்தளங்களில் நீங்கள் பதிவிட்டு இருக்கும் தவறான புகைப்படங்கள் மற்றும் பதிவுகளை நீக்கிவிடுவது நல்லது. ஏனென்றால் ஒருவர் உங்களுக்கு வேலை தருவதற்கு முன்பு உங்கள் குணம் எப்படி என்பதை உங்களின் சமூக வலைத்தளங்கள் மூலமாக அறிந்து கொள்கிறார்கள் என்பதை அறிந்து ஒரு சிலவற்றை உங்கள் சமூக வலைத் தளங்களில் இருந்து மறைத்து வைப்பது நல்லது.

பல நிறுவனங்களில் வேலை செய்துவிட்டு புதிய நிறுவனத்தை தேர்வு செய்பவர்கள் தங்களின் தற்குறிப்பை கவனமாக தயார் செய்ய வேண்டும். அவர்களின் பழைய வேளையில் எத்தனை ஆண்டுகள் செய்தார்கள், பிறகு அதிலிருந்து ஏன் விடுபட்டவர்கள் என்ற சரியான காரணங்களும், அதற்கான சரியான பதில்களை அவர்கள் வைத்திருக்க வேண்டும்.

எந்த நிறுவனத்திற்கு வேலைக்கு செல்கிறீர்களோ அந்த நிறுவனத்தை பற்றிய வரலாறை தெரிந்து கொண்டு செல்வது உங்களுக்கு உதவிகரமாக இருக்கும். இது மட்டுமல்லாமல் அந்த நிறுவனத்தைப் பற்றிய முழு விவரம் தெரிந்து இருந்தால் நீங்கள் தன்னம்பிக்கையுடன் நேர்காணலை எதிர்கொள்ளலாம்.

நேர்காணலின் போது நேரத்தை எடுத்துக்கொண்டு சரியான பதில்களைச் சொல்லுங்கள். வேகமாக சொல்வதென்றால் நீங்கள் ஏதேனும் பிழைகள் செய்யலாம். இதனால் உங்களின் வேலை பறிப்போக வாய்ப்புள்ளது. எனவே ஒரு முறைக்கு இரண்டு முறை கேள்விகளை உள்வாங்கி கொண்டு அதற்கேற்ற பதில் அல்லது உங்களுக்கு தெரிந்த பதிலை சரியான எண்ணத்தில் சொல்லுங்கள். இது நீங்கள் எப்படி ஒரு சூழ்நிலையை எதிர் கொள்கிறீர்கள் என்பதை அறிய உதவும்.

நேர்காணல் முடிந்த பிறகு காத்திருப்பது மிக அவசியம் ஒரு சிலருக்கு காத்திருக்க முடியாமல் நேர்காணல் அலுவலகத்திற்கு அடிக்கடி போன் செய்து தொந்தரவு செய்வார்கள். இதுவே இவர்களுக்கு பாதகமாக அமைந்து விடும். எனவே முடிந்த வரை காத்திருங்கள், இல்லை எனில் அதைக் கைவிட்டுவிட்டு மற்றொரு வேலையில் கவனம் செலுத்துங்கள்.

ஒரு சில நிறுவனங்களில் உங்களுக்கு குறைந்த அளவே சம்பளம் தருவார்கள். உங்களுக்கு போதுமான அளவைவிட குறைவாக இருந்தால் அதைத் தேர்வு செய்வதைத் தவிர்த்து போதுமான சம்பளம் வரும் வரை காத்திருப்பது நல்லது. அப்படி பல மாதங்கள் கழிந்தால் உங்களுக்கு சம்பந்தமாக ஏதாவது வேலையில் சேர்ந்து கொண்டு, ஒன்றிலிருந்து இரண்டு வருடங்கள் அனுபவம் பெற்ற பின் வேறு ஒரு நிறுவனத்திற்கு செல்லலாம்.

மேலும் படிக்க – சேமிப்பை பின்பற்றி செழிப்புடன் வாழ்வோம்

எல்லாவற்றிற்கும் மேலாக ஒவ்வொரு நேர்காணலும் உங்களுக்கு கிடைக்கும் அனுபவம் மிகப்பெரியது எனவே அதை உள்வாங்கிக் கொண்டு மற்றொரு நேர்காணலை சரியாக செய்யுங்கள். நிச்சயம் உங்களுக்கான வேலை ஒருநாள் கிடைக்கும். எது நடந்தாலும் மனம் தளராமல் முயற்சி செய்வது நல்லது. எப்போதும் எல்லா சூழ்நிலைகளிலும் புன்னகையுடன் மிக வலிமையுடன் இருங்கல், இதுவே உங்களுக்கு ஒரு சிறந்த வேலையை அமைத்துத்தரும்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன