ஈவன்ட் மற்றும் ஃபேஷன் போட்டோகிராபியின் அடிப்படைகள்.!

  • by
basics of event and fashion photography

காலத்தை கட்டுப்படுத்தும் சக்தி இன்று வரை அறிவியலில் சாத்தியமில்லாமல் இருக்கிறது, ஆனால் சாதாரண ஒரு புகைப்படக் கலைஞரின் மூலமாக அதை கட்டுப்படுத்த முடியும். நீங்கள் வாழ்ந்த காலத்தை பதிவு செய்யும் சக்தி போட்டோகிராஃபிக்கு உண்டு. அத்தகைய சிறப்பு வாய்ந்த புகைப்படம் உங்கள் காலத்தைப் பதிவு செய்து, அது என்றும் அழியாமல் பார்த்துக் கொள்கிறது. இப்படியும் மற்றவர்களின் சந்தோஷத்தை பதிவு செய்யும் புகைப்படத்தை நாம் எடுப்பதற்கான வழிகள் மற்றும் தந்திரங்களை நாம் முழுமையாக கற்றுக்கொள்ள வேண்டும். அதை உங்கள் திறனுக்கு எட்டும் வகையில் மிக எளிமையாக கற்றுக் கொடுப்பதற்கு “பாஸ்கோ நவீன்” ஏராளமான வித்தைகளை கற்றுள்ளார். அதை அறிந்து நீங்களும் புகைப்படம் எடுப்பதில் முதுகலைப் பட்டம் வெல்ல வேண்டுமென்றால் இவரின் ஆலோசனையை கேளுங்கள்.

தொழில் தொடங்கலாம்

இன்றைக்கு இருக்கும் சூழலில் அதுவும் இன்றைய நவீன உலகத்தில் நம்முடைய தொழிலை மேம்படுத்திக் கொண்டால் மட்டுமே வாழ முடியும் என்ற நிலை உள்ளது.

தற்போதைய காலகட்டம் மட்டுமல்லாமல் எதிர்காலத்திலும் ஏராளமான வாடிக்கையாளர்களை கொண்டிருக்கும் தொழிலாக போட்டோகிராபி பார்க்கப்படுகிறது. இதுபோன்ற தொழிலை நீங்களும் தொடங்க வேண்டும் என்றால் “பாஸ்கோ” அளிக்கக்கூடிய வகுப்பை பின்தொடருங்கள்.

பாஸ்கோ நவீன்

திறமையை இல்லை என்று வருத்தப்படுபவர்களுக்கு நிச்சயம் ஏதேனும் ஒரு திறமை இருக்கும், அதுபோல் உங்கள் திறமையை வெளிக்கொண்டு வரும் திறமை படைத்தவர் தான் பாஸ்கோ நவின். இவர் அளிக்கக்கூடிய இணையத்தள வகுப்புகளை பின்தொடர்ந்தால் உங்களால் எட்ட முடியாத அளவிற்கு உயரத்திற்குச் செல்ல முடியும். பெங்களூரில் வசித்து வரும் இவர் உங்களுக்கு ஃபேஷன் போட்டோகிரபி, புரோடக்ட் போட்டோகிராபி, திருமணம் மற்றும் சுப காரியங்களுக்காக எடுக்கப்படும் போட்டோகிராபி போன்ற அனைத்தையும் கற்றுக் கொடுத்து அதில் இருக்கும் நுண்ணிய வேறுபாடுகளை உங்களுக்கு புரிய வைத்து போட்டோகிராபியில் தேர்ச்சி பெற இவர் உதவுகிறார்.

பயிற்சி வகுப்புகள்

பாஸ்கோ நவீன் அவர்கள் கேமரா எப்படி செயல்படுகிறது போன்றவற்றில் தொடங்கி போட்டோகிராபியை மேனுவல் மோடில் எப்படி பயன்படுத்தலாம் போன்ற அனைத்தையும் பயிற்சி அளிக்கிறார். இதைத் தவிர்த்து கலர் பேலன்ஸ், டெப்த் ஆப் ஃபீல்ட், கம்போசிஷன், லைட்டிங் போன்றவற்றை எப்படி பயன்படுத்தலாம் போன்றவற்றை தெளிவாக நமக்கு கற்றுக் கொடுக்கிறார். அதுமட்டுமல்லாமல் போட்டோகிராபிக்கு தேவையான கருவிகள் மற்றும் அதை எப்படிப் பயன்படுத்தலாம் போன்றவற்றையும் உங்களுக்குப் புரியும்படி கற்றுக்கொடுக்கிறார்.

போட்டோகிராபி பிசினஸ்

போட்டோகிராபியில் இருக்கும் தொழில்நுட்பங்களை உங்களுக்கு புரியவைத்து அதில் போற்றைடு போட்டோகிரபி, வெட்டிங், ஈவன்ட், போன்றவற்றிற்கு நாம் எப்படி லைடிங்கை செட் செய்வது போன்ற அனைத்தையும் உங்களுக்கு கற்றுக் கொடுக்கிறார். ஒரு சிலர் சமூக வலைத்தளங்களில் மட்டும் பதிவிடுவதற்கு புகைப் படங்களை எடுக்கிறார்கள், அவர்களுக்கும் தேவையான அறிவுரைகளை இவர் வழங்குகிறார்.

ஏராளமான யோசனைகள்

நீங்கள் பணம் சம்பாதிப்பதற்காகவே சிறந்த தந்திரங்களை இவர் உங்களுக்கு கற்றுக் கொடுக்கிறார். அதை தவிர்த்து வேறு வேலைகளை செய்துகொண்டே போட்டோகிராபியில் சிறந்து விளங்குவதற்கான யோசனையும் இவர் கொடுக்கிறார். இதை தவிர்த்து ஒரு கேமராவை எப்படி பார்த்து வாங்க வேண்டும் போன்றவைகள் முதல் அதை எப்படி பராமரிக்க வேண்டும் என்ற அனைத்து யோசனைகளையும் இவர் அளிக்கிறார். உங்களின் புகைப்படம் உலகத் தரம் வாய்ந்தவையாக விளங்க வேண்டுமென்றால் இது போன்ற வல்லுநர்களுடன் நீங்கள் உரையாடி அவர்களின் ஆலோசனையை பெறவேண்டும். இந்த வகுப்பை மிகக் குறைந்த விலையில் உங்கள் தரத்திற்கு ஏற்றவாறு பாஸ்கோ நவீன் அளிக்கிறார்.

மாதாந்திர சந்தா

மாதம் 1230 ரூபாய் வாங்கும் பாஸ்கோ நவீன் அவர்கள் சிறப்பு சலுகையாக வெறும் 859 ரூபாய் மட்டுமே வாங்கி வருகிறார். இந்த வகுப்பு திங்கள் முதல் சனிக்கிழமை வரை தினமும் மாலை 4 மணி முதல் இரவு 10 மணி வரை இவர் எடுக்கிறார். தினமும் 15 நிமிடங்கள் முதல் 30 நிமிடங்கள் வரை இவர் வகுப்புகளை மேற்கொள்கிறார், இதைப் பயன்படுத்தி உங்கள் புகைப்படத் திறமையை வலுப்படுத்துங்கள்.

உங்களுக்குள் மறைந்திருக்கும் அனைத்துத் திறமைகளையும் வெளிக் கொண்டு வருவதற்கான சிறந்த வழியை “பாஸ்கோ நவீன்” அளிக்கிறார். அதை சரியாக பயன்படுத்தி உங்களை மேம்படுத்தி உலகத்தரம் வாய்ந்த புகைப்பட வல்லுநராக மாறுங்கள்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன