சுத்தம் சுகாதரம் பேணி வருதல் சிறப்பு

  • by

சுத்தம் சுகாதாரம் என்பது  சுய சுத்தம் மற்றும் பிற சுத்தங்களை குறிக்கும்.  சுத்தம் ஆரோக்கியத்தை அதிகரிக்கும். நலம் என்பது ஆரோக்கியமான வாழ்க்கையை குறிக்கும். ஆரோக்கியமான வாழ்க்கையை நாம் எடுத்துச் செல்ல நமக்கு அவசியமானது  ஆகும். 

நமது வாழ்க்கை முறையில் சாப்பிடும் முன் கைகழுவதல், வெளியே சென்று வீட்டுக்கு வந்தால் கை, கால்கள் கழுவதல் வேண்டும். நமது வாழ்வியலில் அன்றாட குளியல் என்பது அவசியம் ஆகும். சுற்றுப்புறத்தை சுத்தமாக வைக்க வேண்டியது நமது கடமை ஆகும்.  குளியல் உடலையும் மனதையும் சுத்தம் செய்ய வைக்கும். நாம் பயன்படுத்தும் நீரை வெளியேற்ற முறையான கழிவு நீர் கால்வாய்கள் அமைக்க வேண்டும். அவற்றை நீராக்கி வெளியேற்ற வேண்டும். வீட்டைப் பெறுக்கி உப்பு, மஞ்சள் நீர் வைத்து சுத்தம் செய்து வந்த காலங்களில்  நோய் தொற்று ஏற்படுவது குறைவாக இருந்தது. 

சாப்பிடவுடன் வாய் கொப்பளிக்க வேண்டும். தினமும் இருவேளை உணவை  பல் துலக்குவது வாயில் கிருமிகள் தங்குவதை குறைக்கும். 

கைகளின் சுத்தம் அவசியம் ஆகும். கைகளை சுத்தமாக வைத்திருக்க வேண்டியது நமது கடமை ஆகும்.

  1.  கைகள் சுத்தப்படுத்தியை   தேவையான அளவில் இட வேண்டும். 

1. பி. கைகள் முழுவதுமாக சுத்தப்படுத்தியை தேய்க்க வேண்டும்.   

  1. உள்ளங்ககையில் நன்றாக தேய்க்க வேண்டும். 
  2.  சுத்தப்படுத்தியை வலது  உள்ளங்கையில் தேய்த்து அதனை இடது நகங்களுக்கு ஒன்றன் பின் ஒன்றாக தேய்க்க வேண்டும். 
  3. உள்ளங்ககைகளில் அழுத்தம் கொடுத்து விரல்களுக்குள் ஊடுருவி  தேய்க்க வேண்டும். 
  4.  பின் விரல்களை ஒன்றோடு ஒன்றாக இணைத்து தேய்க்க வேண்டும். 
  5.  கைகளில் பின் பகுதியில் வட்டவடிமாக  வலது விரல், இடது விரல் வைத்து தேய்க்க வேண்டும். 
  6. கைகளை வட்டவாக்கில் முன்னும் பின்னும் வலது இடது விரல்கள், உள்ளங்கையில் நன்கு தேய்க்க வேண்டும். 
  7. கைகளை உலர்த்திவிட கைகள் பாதுகாப்பாக இருக்கும். 

மேலும் படிக்க: நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் உணவுகள்..!


உணவு சுகாதாரம்:

தினசரி குளியல் என்பது அவசியம் ஆகும். உடலுக்கு ஆரோக்கியம் தரும் சுத்தமான உணவுகளை சாப்பிட்டு வருதல் நலம் பயக்கும். உணவில் ஆரோக்கியத்துடன்   சாப்பிடுதல் நல்லது ஆகும். நாம் சமைக்கும் உணவு பொருளான காய் கறிகள் அனைத்தையும் சுத்தமாக நீரில் கழுவி சமைக்க வேண்டும். சமையலுக்கு பயன்படுத்தும் உணவு  பொருட்களை அதற்குரிய காலங்களில் சாப்பிட்டு முடிக்க வேண்டும். கெட்டுப் போகும் உணவை உடனடியாக அகற்ற வேண்டும். பாத்திரங்களை முறையாக கழுவி சுத்தபடுத்துதல் அவசியம்  ஆகும். உணவை சுத்தமாக வைக்க நாம் இதனைப் பின்பற்ற வேண்டியது அவசியம் ஆகும். சமைக்கும் காய்கறிகள், சமைக்கும் பாத்திரம், சமைத்த பொருட்களை கழுவி சுத்தம் செய்யும் இடங்கள் ஆகிய அனைத்தையும் நாம் சுத்தமாக வைக்க வேண்டியது அவசியம் ஆகும். 

 சுற்றுப்புறச் சுழல் சுகாதாரம்: 

சுற்றுப்புறச் சூழல் சுகாதாரம் என்பது அவசியம் ஆகும். தெருவில் குப்பைகளை கொட்டுதல் நன்மை அன்று, குப்பை அள்ள வருவோருக்கு முறையாக குப்பைகளை கொட்ட வேண்டும். குப்பைகளை தனித்தனியாக கொடுக்க வேண்டும்.  தெருவில் எச்சில் துப்புதல் பொது சுகாதாரத்தை பாதிக்கும். பொது இடத்தை பேணி காத்தல் என்பது அவசியம் ஆகும். 

பொது இடங்களான பேரூந்து நிறுத்தம்,  சினிமா தியேட்டர்கள், மருத்துவ மனை, மருத்துவ மனை வளாகம், பள்ளி வளாகம் போன்ற அனைத்துப் பகுதிகளிலும்  அமைதியுடன் நடந்து கொள்ள வேண்டும். கடுமையான சொற்கள், சத்தங்களை ஏற்படுத்த கூடாது. இத்தகையபகுதிகளை சுத்தமாக வைத்திருக்க வேண்டியது நமது கடமை ஆகும். 

நாம் செல்லும் இடங்கள் அனைத்தும்  ஆரோக்கியமான சூழல்கள் அமைக்க வேண்டியது நமது கடமை  ஆகும். நாம் சிறப்பான நடவடிக்கைகள் மூலம் வாழ்க்கையில் நாம் எளிதாக நினைத்தது நடத்த முடியும்.

மேலும் படிக்க: கோவிட் – 19 பற்றி கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய சில தகவல்கள்.!

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன