கரோனா பற்றிய சில அடிப்படை சந்தேகங்கள் என்ன???

  • by
basic doubts that you might have about corona virus

கரோனா பற்றிய விழிப்புணர்வு இச்சமயம் மிக முக்கியமானதாக இருக்கிறது. காரணம் சாப்பிடுவதும், உறங்குவதும், நீர் அருந்துவதும் உயிர் வாழ அவசியமானது என்பது போல முக உறை அணிவதும், கைகளை சுத்தமாக வைத்திருப்பதும் உயிர்வாழ அவசியமானது என்பதை நிரூபித்திருக்கிறது இந்த கரோனா நோய்த்தொற்று.

உலக சுகாதார நிறுவனமானது  கோவிட் – 19 பற்றிய பல்வேறு சந்தேகங்களுக்க விளக்கங்களை கொடுத்துள்ளது. அதை பின்வருமாறு பார்க்கலாம்.

மது அருந்துவதால் கோவிட் – 19 பாதிப்பு ஏற்படுமா?

மது அருந்துதல் மற்றும் புகைப்பிடித்தல் ஆகிய இரண்டு பழக்கங்களுமே உடல் ஆரோக்கியத்தை கேள்விக்குறியாக தான் வைக்கின்றன. ஆகவே நோய் தொற்று ஏற்படாமல் இருக்க இந்த இரண்டு பழக்கங்களையும் விட்டொழிக்க வேண்டியது மிகவும் அவசியமானது.

மேலும் படிக்க – பழங்கால கற்களால் செய்யப்பட்ட பாத்திரங்கள் அதன் பயன்கள்..!

மற்ற நாட்டு பொருள்களிலிருந்து கரோனா வைரஸ் பரவுமா?

சீனாவில் இருந்தும் வைரஸ் பாதிப்பு ஏற்பட்டிருக்கும் மற்ற இடங்களிலிருந்து வரும் பொருள்கள் கடிதங்கள் பொட்டலங்கள், போன்றவற்றின் வழியாக இந்த வகை வைரஸ் இதுவரை பரவவில்லை. இது பாதிக்கப்பட்ட மனிதர்களிடமிருந்து அதிகம் பரவுகிறது.

கொசுக்களை அழிக்கும் விளக்குகள் அவை வைரசை தடுக்குமா?

புற ஊதாக் கதிர்களை வெளியிடும் கிருமி நீக்கும் விளக்குகள் கோவிட் 19 என்ற காய்ச்சலை உருவாக்கும் வைரசை அளிக்காது. இந்த வகை விளக்குகளை வெளிச்சத்திற்காக மட்டுமே பயன்படுத்திக் கொள்ளலாம். இவை நேரடியாக சருமத்தில் பட்டால் தோல் சார்ந்த பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புகள் அதிகம். 

பூண்டு சாப்பிட்டால் கோவிட் – 19பாதிப்பிலிருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ள முடியுமா?

பூண்டுக்கு நுண்ணுயிர்களை கொள்ளும் தன்மை உண்டு. ஆனால் கரோனா வைரசை அது அழிக்கும் என்று எதிர்பார்ப்பது தவறானது. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் தன்மை பூண்டிற்கு இருப்பதால் அவற்றை உணவில் அதிக அளவு எடுத்துக் கொள்ளலாம்.

மேலும் படிக்க – பப்பாளி மற்றும் கருஞ்சீரகம் நம் உடலில் ஏற்படுத்தும் மாற்றங்கள்..!

தரையில் பரவும் வைரசை எவ்வாறு தடுப்பது ?

தரைகளில் படர்ந்திருக்கும் இந்த கரோனா வைரசின் ஆயுட்காலம் சில மணி நேரமாக தான் இருக்கிறது என்பதால் தரைத்தளத்தை வீட்டில் அன்றாடம் பயன்படுத்தும்  ஆன்டி-செப்டிக் சோப், டிடர்ஜெண்ட் மூலம் தரையை தூய்மைப்படுத்தி வைத்திருக்கலாம். இது வைரசை மற்ற இடங்களுக்கு பரவாமல் தடுக்கும்.

எந்த மாதிரியான ஹேண்ட் வாஷ் பயன்படுத்த வேண்டும்?

ஆல்கஹால் ,குளோரின் போன்றவற்றின் சாராம்சங்கள் மூலம் தயாரித்த ஹேண்ட் வாஷ் ஹேண்ட் சனி டைசர்களை மட்டுமே கைகளை சுத்தப்படுத்த பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்படுகிறது. இது முற்றிலும் தவறானது. ஆல்கஹால் குளோரின் இவை இரண்டையுமே நேரடியாக உடலில் படாவிட்டால் தீவிரமான சரும பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புகள் அதிகம்.

ஆன்ட்டிபயாட்டிக் வேலை செய்யுமா ?

சார்ஸ் மற்றும் ஃப்ளூ காய்ச்சலுக்கு கொடுக்கப்படும் ஆன்டிபயாட்டிக் இந்த கோவிட் 19 காய்ச்சலை சரி செய்யாது.  நிமோனியா விற்கான மருந்து இதற்கு பயன்தருமா? மூச்சுக்குழாய் தொடர்பான பிரச்சினை என்பதால் நிமோனியா-விற்கு கொடுக்கப்படும் தடுப்பு மருந்துகளை இதற்கு பயன்படுத்த முடியாது. ஏனெனில் எல்லாம் மூச்சுக்குழாய் பிரச்சினைகளுக்கும் ஒரே தடுப்பு மருந்தை பயன்படுத்த முடியாது. ஒவ்வொரு கிருமி பாதிப்புக்கும் அந்த கிருமிகளின் தன்மைக்கேற்ப தனித்துவமான மருந்துகள் கொடுக்கப்படும். அவற்றை மட்டும்

தான் எடுத்துக் கொள்ள வேண்டும். அந்த வகையில் இந்த வைரசுக்கு இன்னும் மருந்துகள் கண்டறியப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

குளிர் சூழ்நிலையில் கரோனா வைரஸ் பரவுமா ?

வெப்பம் அதிகமாக இருந்தால் இந்த கரோனா வைரஸ் பரவாது எனவும் குளிர் சூழ்நிலையில் இந்த வைரஸ் அதிகமாக பரவுகிறது என்ற தவறான கருத்துக்கள் நிலவுகின்றன. ஆனால் இதற்கு எந்தவிதமான அறிவியல் ஆதாரமும் இதுவரை வெளியாகவில்லை. ஆகையால் இந்த காரணங்களை கொண்டு நாம் பயப்பட வேண்டிய அவசியமில்லை.

வீட்டில் செய்ய வேண்டிய மாற்றங்கள் என்ன ?

வீட்டில் அன்றாடம் பயன்படுத்தும் சோப் அல்லது நீரில் கலந்து கதவுகள் ,கதவு கைப்பிடிகள் ஜன்னல் போன்ற இடங்களில் தூய்மைப்படுத்தவும். வீட்டில் பயன்படுத்தும் கிருமிநாசினி நீரில் கலந்து அதன் மூலம் தரையை சுத்தப்படுத்தலாம். கிருமிநாசினி பயன்படுத்தும்பொழுது கைகளுக்கு உறைகளை அணிவது மிக முக்கியம். துணிகளை துவைக்கும் போது வெந் நீரில் துவைத்தால் சிறந்தது. தேவைப்பட்டால் குறைந்த அளவு ப்ளிச் சேர்க்கலாம். துவைத்த துணிகளை காய வைக்கும்பொழுது நேரடியாக சூரிய ஒளி படுமாறு வைக்கவேண்டும்.

செல்ல பிராணிகளிடம் இருந்து இந்த வைரஸ் பரவுமா?

புதிய வகை கரோனா வைரஸ் உலக அளவில் இது வரையில் ஒரே ஒரு நாய்க்கு மட்டும் தான் உள்ளது என உறுதி செய்யப்பட்டுள்ளது. வேறு எந்த செல்லப் பிராணிகளுக்கும் இதுவரையில்  பாதிப்பு ஏற்படவில்லை .ஆகவே அவற்றிலிருந்து பாதிப்பு ஏற்பட வாய்ப்புகள் குறைவு. இருப்பினும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அவைகளுடன் நேரம் செலவழித்த பின் கைகளை கழுவிக் கொள்வது நல்லது.

கொசுக்கள் மூலமாக இந்த வைரஸ் பரவுமா? 

மூச்சுக்குழாய் பாதிப்பினால் ஏற்படும் தொற்று தான் இந்த கோவிட் – 19. இவை எச்சில், நீர்த்துளிகள் போன்றவற்றின் மூலம் மட்டுமே பரவும். கொசுக்களின் வழியாக பரவாது .

மேலும் படிக்க – வெந்தயத்தால் செய்யப்படும் ஷாம்பூ, அதன் பலன்கள்..!

முக உறை அணிவது அவசியமா?

ஒவ்வொருவரும் முக உறை அணிந்துகொள்வது அவசியமானதாக இருக்கிறது. ஏனெனில் முக உறை தொற்று பிரச்சினைகளில் இருந்து ஒருவரை காக்கும் என்றாலும் முழுமையாக தொற்றைத் தவிர்க்க இந்த உறை பயன்படாது. நோய் தொற்றிலிருந்து தன்னைத் தற்காத்துக்கொள்ள இந்த முறையும் முக உரை பயன்படுகிறது. சுய சுகாதாரம் மிக அவசியமானதாக இருக்கிறது.

சாதாரண சளி காய்ச்சலுக்கும் இதற்கு என்ன வேறுபாடு?

வைரஸ் குடும்பத்தைச் சார்ந்தவை என்பதால் இரண்டுமே அறிகுறிகள் ஒரே மாதிரியாக இருக்கும். ஆனால் பரிசோதனையின் மூலமாக தான் இரண்டையும் பிரித்து கூற முடியும். ஹேண்ட் சனிடைசர் கிடைக்கவில்லை என்றால்  நம் வீட்டில் உபயோகப்படுத்தும் சோப்பை கொண்டு தண்ணீர் மூலம் நன்கு கைகளை கழுவிக் கொள்ளலாம். 

“சுய தூய்மை காப்போம் கரோனாவை விரட்டுவோம்”

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன