பண்டைய கால மனிதர்கள் வழுக்கைகளை அகற்றும் விசித்திர வழிகள்.!

  • by
Bold Beam Cure In Awkward Way

வழுக்கை பிரச்சனை என்பது இக்காலத்தில் மட்டுமல்லாமல் பண்டைய காலத்திலும் ஏராளமான மனிதர்களுக்கு இந்த பிரச்சனை இருந்தது. தங்களின் அழகு முற்றிலும் பறிபோகும் என்று பயந்து பண்டைய கால மனிதர்கள் வழுக்கை தலை வராமல் இருப்பதற்காக ஏகப்பட்ட மருந்துகளை கண்டுபிடித்தார்கள். அதை நாம் கேட்டால் அடி வயிறு குமட்டும் அளவிற்கு இருக்கும். அத்தகைய மருந்துகளை அவர்கள் கண்டுபிடித்துள்ளார்கள்.

காளை மாட்டின் விந்துக்கள்

மேலே குறிப்பிட்டுள்ள தைப்போல் காளை மாட்டின் விந்துக்களை மனிதர்கள் எடுத்து அதை வழுக்கை அகற்றும் தன்மை கொண்டதா என்பதை பரிசோதித்தார்கள். ஏனென்றால் காளை மாட்டின் விந்துக்களில் முடி வளரும் தன்மையை ஊக்குவிக்கும் சுரப்பிகள் இருப்பதை கண்டுள்ளார்கள். இதனால் அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து நாடுகளில் இதை பயன்படுத்தி வருகிறார்கள்.

மேலும் படிக்க – சருமத்தில் ஏற்படும் வெண் படைகளை போக்குவதற்கான எளிய வழிகள்.!

புறாக்களின் எச்சம்

புறாக்களின் கழிவுகள் கூட வழுக்கையை அகற்ற பயன்படுத்தி முயற்சி செய்துள்ளார்கள். நவீன மருத்துவத்தின் தந்தையாகக் கருதப்படும் ஹிப்போகிரேட்ஸ் அவர்கள் புறாக்கள் எச்சம் மற்றும் ஒரு சில பொருட்களை ஒன்றாக கலந்து வழுக்கைத் தலையை போக்கும் மருந்தை கண்டுபிடித்துள்ளார்.

மாட்டின் கோமியம்

மாட்டின் கோமியத்தில் ஏகப்பட்ட மருத்துவ குணங்கள் உள்ளது என்பதை ஒரு சில அரசியல்வாதிகள் சொல்லிக்கொண்டு வருகிறார்கள். ஆனால் அது எந்த வகையில் உண்மை என்று இன்றுவரை அறிவியல் பூர்வமாக தெரியவில்லை. இருந்தாலும் அந்த கோமியத்தை கொண்டு நமது வழுக்கைத் தலையில் தேய்ப்பதன் மூலம் முடி மீண்டும் வளரும் என்று ஒரு சிலர் சொல்கிறார்கள். இதை கன்னி பசுக்கள் வெளியிடும் சிறுநீரை சூரியன் வருவதற்குள் அருந்தினால் முடி வளர்ச்சி அதிகரிக்கும் என்கிறார்கள்.

மிருகங்களின் கொழுப்புகள்

சிங்கம், காண்டாமிருகம், முதலை, பூனை, பாம்பு, மலையாடு போன்ற மிருகங்களின் கொழுப்புகள் அனைத்தையும் ஒன்றாக சேர்த்து ஒரு புதுவிதமான மருந்தை கண்டு பிடித்துள்ளார்கள். அதை வழுக்கை தலை களின் மேல் தடவி பார்த்துள்ளார்கள் பின்பு  அதனால் எந்த பலனும் இல்லை என்பதை உணர்ந்துள்ளார்கள். இதற்காக எத்தனை விலங்குகள் தங்கள் உயிரை விட்டதோ.

மேலும் படிக்க – முகத்தில் ஏற்படுவதை போல் உச்சந்தலையிலும் பருக்கள் உண்டாகும்.!

கிளியோபட்ரா

கிளியோபட்ரா, ஜூலியஸ் சீசரின் வழுக்கை தலையை போக்குவதற்காக சுண்டெலியும், குதிரையின் பற்களையும் ஒன்றாக அரைத்து அவரின் தலை மேல் வைத்து உள்ளார். இதனால் எந்த பயனும் கிடைக்காமல் ஜூலியஸ் சீசர் தனது வாழ்க்கையை இலைகளைக் கொண்டு மறைத்து விட்டார்.

எனவே இதில் இருக்கும் விசித்திரமான வழிகளை பயன்படுத்தி உங்கள் வாழ்க்கையை போக்கலாம் என்று எண்ணாமல் முடிந்தவரை தீய பழக்கங்களை அகற்றி அதிகமான உணவுகளை உட்கொள்ளுங்கள்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன