முதுகுவலி மற்றும் மூட்டுவலி – காரணமும், தீர்வும் !!!

 • by

முதுகெலும்பு பிரச்சினையோ அல்லது மூட்டு பிரச்சினையோ இதை நாம் எளிதாக எடுத்துக் கொள்ளக்கூடாது. இந்த பிரச்சனைகளுக்கு ஆரம்பத்திலேயே தீர்வு காண்பது அவசியம். அண்மையில் வெளியான ஆய்வுகளின்படி 20 முதல் 30 வயதிற்கு உட்பட்டவர்களுக்கு பெரும்பாலும் முதுகெலும்பு சார்ந்த பிரச்சனைகள் ஏற்படுகிறது என்று கூறப்பட்டுள்ளது; காரணம் பெரும்பான்மையான இளம்வயது மக்கள் அலுவலகங்களிலோ அல்லது வீட்டிலோ அமர்ந்த நிலையில் 8 முதல் 10 மணி நேரம் அமர்ந்துகொண்டே பணிபுரிவதால் அவர்களுக்கு முதுகெலும்பு கடுமையாக பாதிக்கப்படுகிறது. ஆரம்பத்தில் இல்லையென்றாலும் காலங்கள் செல்ல பிரச்சனைகள் ஏற்படுகிறது. இதன் காரணமாக 50 வயதிற்கு மேல் அவர்களுக்கு முதுகு சார்ந்த பிரச்சனைகள் ஏற்படுகிறது. அதேபோல் நீண்ட நேரம் அமர்ந்து கொண்டே பணிபுரிவதால் மூட்டு சார்ந்த பிரச்சினைகளும் ஏற்படுகிறது இதற்கு தீர்வு காண்பது அவசியம்.

முதுகுவலிக்கான காரணம் :

 • முதுகுவலி என்பது நோயல்ல. முதுகு வலிக்கு பல காரணங்கள் உண்டு. முதுகுப் பகுதியைச் சார்ந்த தசைகள், எலும்புகள், தசைநாண்களில் ஏற்படுகிற பிரச்சினைகள் இதற்கு முக்கிய காரணம்.
 • பெண்களுக்கு வெள்ளைப்படுதல் பிரச்சனை இருந்தால் அவர்களுக்கு முதலில் முதுகில் வலி ஏற்பட்டு பின்னர் வயிற்று வலி ஏற்படும்.
 • சிறுநீரகம் மற்றும் சிறுநீர்ப் பையில் கல் உள்ளவர்களுக்குக் முதுகில் வலி ஆரம்பித்து, முன் வயிற்றுக்குச் செல்லும்.
 • நீண்ட நேரம் ஒரே இடத்தில் அமர்ந்து பணிபுரிபவர்கள்.
 • ஒரே நிலையில் நீண்ட நேரம் படிப்பது அமர்வது என பல காரணங்களால் முதுகுவலி ஏற்படுகிறது.

முதுகுவலியை தடுக்க :

 • எப்போதும் முதுகை நிமிர்த்தி உட்கார்ந்து வேலை செய்ய வேண்டும். நாற்காலியில் நீண்ட நேரம் அமரும் போது முதுகுக்கு சிறிய தலையணை வைத்துக்கொள்ளலாம்.
 • கூன் போடாமல் நிமிர்ந்த நடை நடக்க வேண்டும்.
 • எந்த வேலையையும் தொடர்ந்து பல மணி நேரம் ஒரே நிலையில் அமர்ந்த வாறு செய்யாதீர்கள்.
 • கால்சியம், பால், கொண்டைக் கடலை, முட்டையின் வெள்ளைக் கரு, உளுந்து, போன்ற உணவு வகைகளை உணவில் அதிகம் சேர்த்துக் கொள்ளுங்கள்.
 • வேலைக்கு நடுவில் சிறிதளவு ஓய்வு அவசியம்.
 • யோகாசனம், உடற்பயிற்சி, நடைப்பயிற்சி, சைக்கிள் ஓட்டுதல், போன்றவற்றில் ஏதாவது ஒன்றைச் செய்வது, முதுகு வலி வராமல் தடுக்கும்.
 • குளிர் பானங்கள், கோக் பானங்கள், பதப்படுத்தப்பட்ட உணவுகள் போன்றவற்றில் பாஸ்பாரிக் அமிலம் சேர்ப்பதால் மிகவும் தீங்கானது. இதனால் எலும்புகள் வலுவிழந்துவிடும். எனவே, இந்தப் பானங்களை அருந்தக் கூடாது.
 • முதுகு வலி உள்ளவர்கள் நல்ல சமமான இடத்தில் படுக்க வேண்டும் .

மூட்டுவலிக்கான காரணம் :

 • உடலின் எடையைத் தாங்குவதே இந்த மூட்டுகள் தான். மூட்டுகள் என்பது எலும்புகள், குருத்தெலும்புகள், தசை நாண்கள் முதலானவற்றை உள்ளடக்கியது. இவற்றை நம் உடலோடு சேர்த்து உறுதியாக பிடித்துக்கொள்ள கொலாஜன் என்னும் புரதம் உண்டு.
 • உடல் பருமன் மூட்டுவலிக்கான மிக முக்கியமான காரணமாக உள்ளது அதிக பளு தூக்குதல் மூட்டின் உள் பகுதியில் ஏற்படும் மாற்றம், ஹார்மோன் மாற்றங்கள், மன அழுத்தம், சீரற்ற மனநிலை, போதைப்பழக்கம், சில நேரங்களில் பரம்பரை ரீதியாகவும் இந்த பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புகள் அதிகம் உள்ளது.
 • ஒரே இடத்தில் அதிகமான அழுத்தம் தருவது மூட்டு வலிக்கு மிக முக்கியமான காரணமாக இருக்கிறது.
 • கொலாஜன் உற்பத்தியில் குறையில்லாமல் இருக்கும் வரை மூட்டுவலி என்பதோ பிரச்சினை என்பதோ நமக்கு வரவே வராது.
 • சரியான உடற்பயிற்சி இல்லாதது.
 • அதிகமான உணவு உண்ணுதல் மோசமான விளைவை ஏற்படுத்தும்.

மூட்டுவலியை தடுக்க :

 • மூட்டுவலி இருக்கும்பொழுது வெஸ்டர்ன் டாய்லட்டை பயன்படுத்துவது முக்கியம்.
 • விட்டமின் D அதிகம் கிடைக்கக்கூடிய சூரிய ஒளியில் நடை பயணம் மேற்கொள்வது முக்கியம்.
 • உடல் பருமனை குறைக்கும் நடவடிக்கைகளில் ஈடுபடுவது முக்கியம் மூட்டுவலி தொடங்கும் போதே அதை கவனித்தல் வேண்டும்.
 • போலியாக கிடைக்கும் மருந்து மாத்திரைகள் மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் மூட்டுவலிக்கான போலி மருந்துகளை உட்கொள்ளக்கூடாது.
 • பெரும்பாலும் பச்சை காய்கறிகள் கீரைகள் முதலானவற்றை சாப்பிடுவது முக்கியம். பிரண்டையில் அதிகம் கால்சியம் உள்ளதால் மூட்டுவலியை சரி செய்யும்; பிரண்டை துவையல், சட்னி போன்றவற்றை செய்து சாப்பிடுவது முக்கியம்.
 • வாரத்திற்கு ஒரு முறையாவது எண்ணெய் குளியல் செய்வது அவசியம். யோகா, உடற்பயிற்சி இவையெல்லாம் நல்ல பலனை அளிக்கும்.

ஆஸ்டியோபதி என்பது ஒரு ‘முழு உடல்’ சிகிச்சையாகும், இது பொது நல்வாழ்வை அடைய, நம் உடலில் உள்ள எலும்புகள், தசைகள், தசைநார்கள் மற்றும் இணைப்பு திசுக்கள் அனைத்தும் இணக்கமாக செயல்பட வேண்டும். ஆஸ்டியோபதியின் மையத்தில் உடலின் ஒவ்வொரு பகுதியும் ஒன்றுபட்டுள்ளது என்ற நம்பிக்கை உள்ளது, மேலும் தசைக்கூட்டு அமைப்பின் ஒரு குறிப்பிட்ட பகுதியைக் கையாளுவது முழுமையான சுய-குணப்படுத்துதலை ஊக்குவிக்கும். இப்போது பல எலும்பு நிபுணர்கள் தங்களின் ஆலோசனைகளை ஆன்லைன் மூலம் வழங்கி வருகின்றனர்.


டாக்டர். அனுப். பி.எ அவர்கள் Bams மற்றும் MD பயின்று 16 வருடத்திற்கும் மேல் மருத்துவ உலகில் அனுபவம் கொண்ட நபர். டாக்டர். அனுப். பி.எ சிரோபிராக்டிக் பயிற்சியாளராகவும், முதுகெலும்பு மற்றும் மூட்டு நிபுணராகவும் இருந்துவருகிறார். மேலும் இவர் உடலியக்கம், ஆஸ்டியோபதி மற்றும் மர்மா சிகிச்சையிலும் நிபுணத்துவம் பெற்றுள்ளார். டாக்டர். அனுப். பி.எ இடம் வரும் நோயாளிகளிடம் மருத்துவம் சார்ந்தும், தனிப்பட்ட முறையிலும் அக்கறை கொண்டுள்ளதால் நோயாளிகள் விரைவில் குணமடைவது இவரின் தனிச்சிறப்பு. மருத்துவம் மட்டுமன்றி தன்னிடம் வரும் பலருக்கும் மருத்துவ ஆலோசனைகளை வழங்குவதால் மருத்துவருக்கும், நோயாளிக்குமான பிணைப்பு சிறப்பு. ஆன்லைனிலும் இவர் ஆலோசனைகளை வழங்கிவருகிறார்.

டாக்டர். அனுப். பி.எ அவர்களிடம் ஆலோசனை பெற…

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன