உங்கள் ஆயுளை நீட்டிக்கும் ஆயிர்வேதம்…!

 • by

உலகில் உள்ள சிகிச்சை முறைகளில் மிகவும் தொன்மை வாய்ந்தது நம் ஆயுர்வேதம். கி.மு 600 க்கு முன்பே ஆயுர்வேதம் என்பது பலரால் பின்பற்றப்பட்டது.

 • ஆயுர் – அகவை, வாழ்க்கை
 • வேதம் – அறிவியல்

மனிதன் அவன் வாழ்கின்ற வாழ்க்கையில் எவ்வாறு வாழ்ந்திட வேண்டும், எவ்வாறு வாழ்ந்திட கூடாது என்று உரைப்பதே ஆயுர்வேதம் ஆகவே ஆயுர்வேதத்தை வாழ்க்கையின் தத்துவம் என்றும் புரிதல் உண்டு.

ஆயுர்வேதத்தில் முழுமையாக இயற்கை முறை சார்ந்த சிகிச்சைகள் அளிக்கப்படுகிறது. குறிப்பாக நம்மை சுற்றியுள்ள உள்ள மரங்கள், செடிகள் அவற்றின் வேர், பட்டை, இலை, காய் மற்றும் கனி என அனைத்திலும் மருத்துவ குணம் நிறைந்துள்ளதாக ஆயுர்வேதம் நம்புகிறது.

மேலும் பல நோய்களுக்கு ஆயுர்வேதத்தால் சிறந்த முறையில் சிகிச்சை அளிக்க முடியும் என்றும் ஆயுர்வேதம் நம்புகிறது.

ஆயுர்வேத சிகிச்சை வகைகள் :

ஆயுர்வேத சிகிச்சைகள் பல வகையுண்டு, ஆயுர்வேதத்தால் குணப்படுத்த முடியாத நோய்களே இல்லை என்றும் கூறலாம். ஒவ்வொரு உடலியல் சார்ந்த பிரச்சனைகளுக்கும் ஆயுர்வேத முறையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதில் பக்க விளைவுகள் எதுவும் கிடையாது.

லாபநம் :

 • லாபநம் சிகிச்சை என்பது கீல்வாதம், தோல் நோய்கள், மூட்டுவலி போன்றவற்றை குணப்படுத்த பயன்படுகிறது.
 • லாபநம் சிகிச்சையில் பாதிக்கப்பட்ட பகுதியில் மருந்து மூலிகை விழுதை பயன்படுத்தி தீர்வு காணப்படுகிறது இது 45 முதல் 60 நாட்களுக்கு சிகிச்சை நடக்கும்.

ஸ்நேஹப்னம் :

 • ஸ்நேஹப்னம் சிகிச்சையில், மருந்துகள் எண்ணெய் வடிவில் உட்கொள்ளப்படுகிறது. இது உடலில் சென்று ஒரு சுத்திகரிப்பு செயல்முறை நடத்துகிறது.
 • இந்த சிகிச்சை முறை 12 முதல் 8 நாட்கள் வரை செய்யப்படுகிறது.

யோனிப்ராக்ஷலனம் :

 • இது ஒரு பிறப்புறுப்பை சுத்தப்படுத்தும் செயல்பாடு. இந்த சிகிச்சை முறையில் மூலிகை எண்ணெய்கள் யோனி ரூட் மூலம் பயன்படுத்தப்படுகிறது.
 • இது மகளிர் நோய் கோளாறுகள் என்றும் அழைக்கப்படுகிறது. இந்த சிகிச்சை முறை 14-56 நாட்களுக்கு நடக்கும்.

அபியங்கம் :

 • அபியங்க சிகிச்சை தூக்கமின்மை, தோல், உடல் சோர்வு, உடல் பருமன், மற்றும் எடை இழப்பை ஆகியவற்றிற்க்கான சிகிச்சை அளிக்கப்படுகிறது.
 • இதில் எண்ணெய் மசாஜ் செய்யப்படுகிறது. இந்த சிகிச்சை முறை 14 நாட்கள் முதல் 45 வரை செய்யப்படுகிறது.

நஸ்யம் :

 • நஸ்யம் சிகிச்சைமுறையில் பஞ்சகர்ம முறை செய்யப்படுகிறது. இதில் மருந்து எண்ணெய், மூலிகை சாறுகள் மூக்கு வழியாக செலுத்தப்படும்.
 • தலைவலி, தோல் நோய்கள், பக்கவாதம், மற்றும் மன நோய்களை தீர்க்கவல்லது. இந்த சிகிச்சை முறை 7 – 14 நாட்கள் செய்யப்படுகிறது.

உத்வார்த்தனம் :

 • இது பொடி மசாஜ் எனப்படும் சிகிச்சை முறையாகும். பக்கவாதம், உடல் பருமன், தோல் நோய்கள் போன்றவைகளுக்கு இம்முறை மிகவும் பயனுள்ளதாக உள்ளது.
 • இந்த சிகிச்சையில் உடலில் சிறப்பு மூலிகை பொடி பயன்படுத்தப்படுகிறது. இந்த சிகிச்சை முறை 14 முதல் 28 நாட்கள் வரை செய்யப்படுகிறது.

சிரோவஸ்தி :

 • சிரோவஸ்தி சிகிச்சையில் பக்கவாதம், மூக்கில் வறட்சி, தொண்டை, வாய் மற்றும் தலை சம்மந்தப்பட்ட நோய்களுக்கு இந்த முறை பயனளிக்கிறது.
 • சில மூலிகை எண்ணெய்கள் இந்த முறையில் பயன்படுத்தப்படுகிறது. இந்த சிகிச்சை முறை 1 முதல் 7 நாட்கள் வரை சிகிச்சை நடைபெறுகிறது.

வஸ்தி :

 • வஸ்தி என்னும் ஆயுர்வேத சிகிச்சை முறை மருத்துவ எனிமா என்றும் அழைக்கப்படுகிறது. இதில் மூலிகை சாறுகள் பயன்படுகிறது.
 • கீல்வாதம், ஒரு பக்க வாதம், பக்கவாதம், உணர்வின்மை, வாத நோய், இரைப்பை பிரச்சனை போன்றவற்றிற்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. இந்த சிகிச்சை முறை 5 முதல் 25 நாட்களுக்கு நடக்கும்.

சிரோதாரா :

 • சிரா – தலை
 • தரா – தொடர்ந்து பாயும் திரவம்
 • இந்த சிகிச்சையில் மூலிகை எண்ணெய், மருந்து வெண்ணெய் பயன்படுத்தப்படுகிறது. இது தூக்கமின்மை, குறுகிய கால நினைவு இழப்பு, சில தோல் நோய்கள், தலைவலி மற்றும் மன நோய் சிகிச்சைக்கு பயனளிக்கிறது. இந்த சிகிச்சை முறை 7 முதல் 21 நாட்களுக்கு செய்யப்படுகிறது.

மேலும் பல வகையான ஆயுர்வேத சிகிச்சைகள் மற்றும் ஆலோசனைகள் இன்று பல இடங்களில் பரவியுள்ளது. தற்போதுள்ள தொழில்நுட்பத்தை பயன்படுத்தி வீடியோ, ஆடியோ மற்றும் உரை மூலம் ஆயுர்வேத நிபுணர்கள், மக்கள் பலருக்கு சிகிச்சை அளித்துவருகின்றனர். இப்போதுள்ள கொரோனா எனப்படும் covid_19 பெருந்தொற்றுக்கும் ஆயுர்வேத மருத்துவத்தில் சிகிச்சை அளிக்க பலர் முயன்று வருகின்றார். பலருக்கு இருக்கும் நாட்பட்ட தோல் வியாதிகள், உடல் வியாதிகள், அந்தரங்க பிரச்சனைகள் மேலும் பலவற்றிற்கு இந்த ஆயுர்வேதத்தில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

சென்னையை சார்ந்த பாலம்மாள் சுப்பிரமணியன் பொதுவாக மனித உடலில் இருக்கும் மூன்று தோஷங்களும் (வாதம், பித்தம், கபம்) குறிப்பாக, 80 வகையான வாத நோய்களுக்கும் ஆயுர்வேதத்தில் சிகிச்சை அளித்துவருகின்றார். நவீன மருத்துவத்தால் ஆகாத பல நோய்களுக்கு ஆயுர்வேதத்தில் சிறந்த முறையில் பாலம்மாள் சுப்பிரமணியன் சிகிச்சை அளித்துவருகிறார். இது மக்களிடையே இந்த ஆயுர்வேத மருத்துவத்திற்கும் அதன் மருத்துவருக்கும் நன் மதிப்பை பெற்று தருகிறது.

உங்களுக்கோ, உங்கள் வீட்டிலிருப்பவருக்கோ உடல் சார்ந்த பிரச்சனைகளுக்கு ஆயுர்வேத மருத்துவத்தில் பாலம்மாள் சுப்பிரமணியன் தீர்வு தருகிறார்.

மேலும் தெரிந்துகொள்ள -> நலம் தரும் ஆயுர்வேத சிகிச்சை – பாலம்மாள் சுப்பிரமணியன்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன